சென்னை: புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம்
கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஜாதிவாரி மக்கள் தொகை
கணக்கெடுப்பு தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு
பணியில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் மட்டுமே
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், ஜாதி பின்னணி என்னவென்று தெரியாமல்
உள்ளனர். இது போன்றவர்கள் கணக்கெடுப்பதால், உண்மை பிரதிபலிக்கப்படாது,
கணக்கெடுப்பு முடிந்த பின்பு, பிரச்னைகளும், சர்ச்சைகளுமே எழும்.
திறன்பெற்றவர்கள் மற்றும் சமூகத்தை புரிந்து கொண்டவர்களை மட்டும் ஜாதிவாரி
கணக்கெடுப்பில் ஈடுபடுத்த வேண்டும். பட்டியல் இனத்தில் பள்ளர், பறையர்,
சக்கலியர் உள்ளனர். பள்ளர் தேவேந்திர குலவேளாளர் என்றும், பறையர்
ஆதிதிராவிடர் என்றும், சக்கலியர் அருந்ததியர் என்றும் அடையாளப்படுத்த
வேண்டும்.
வெள்ளி, 11 மே, 2012
சனி, 5 மே, 2012
வரும் 30-ல் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்
தூத்துக்குடி : நலத்திட்ட உதவிகளை வழங்குவதி்ல மாவட்ட கலெக்டர்
முட்டுக்கட்டை போடுகிறார் என ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., புதிய
தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர்
கூறியதாவது:மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் மணல் கொள்ளைக்கு ஆதரவாக
செயல்படுகிறார். தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி பெற வழங்கும்
பரிந்துரை கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கலெக்டரின் இத்தகைய
போக்கை கண்டித்து வரும் 30-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாகவும்,
முதல்வரிடம் இது சம்பந்தமாக புகார் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும்
சட்ட சபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இப்பிரச்னை எழுப்ப
இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறித்து காரசார விவாதம்
சென்னை: தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறித்து, சட்டசபையில்
நேற்று காரசாரமாக விவாதம் நடந்தது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர்
முனுசாமி பேசும்போது,தீண்டாமை ஒழியும்போது, தீண்டாமை ஒழிப்புச் சட்டம்
தானாக போய்விடும், என்றார்.
ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:கிருஷ்ணசாமி-புதிய தமிழகம்: ஆதிராவிட, பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக, சிறப்பு உட்கூறு திட்டத்தை, இந்திரா பிரதமராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அத்திட்டங்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில், இத்திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, சிந்தாமல், சிதறாமல் மக்களைச் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். (இதையடுத்து, கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தின.)
உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி: ஜாதியை முன்னிறுத்தி உறுப்பினர் பேசுகிறார். ஜாதியை முன்னிறுத்தி, ஆதிராவிட, பழங்குடியின மக்களின் வேகத்தை குறைக்க வேண்டாம். அவர்களின் திறமையை குறைக்க வேண்டாம்.
பாலபாரதி-மார்க்சிஸ்ட்: ஜாதியை முன்னிறுத்துவதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசே நடத்துகிறது. ஜாதி அமைப்பு என்பது, நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இருந்தாலும், பல இடங்களில் தீண்டாமை கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. திறமைக்கும், ஜாதிக்கும் சம்பந்தமில்லை.
அமைச்சர் முனுசாமி: திறமை இருந்தால், ஜாதியைப் பற்றி இழுக்க வேண்டியதில்லை என்று தான் கூறினேன். தீண்டாமை இருப்பதாக உறுப்பினர் கூறுகிறார். எந்த மாவட்டம், எந்த கிராமத்தில் என்று குறிப்பிட்டு கூற வேண்டும்.
பாலபாரதி: இது தொடர்பாக நான் வெட்டுத் தீர்மானமே கொடுத்துள்ளேன். அதில், விவரமாக உள்ளது.
அமைச்சர் முனுசாமி: வெட்டுத் தீர்மானம் இறுதியானது கிடையாது. அதைப்பற்றி அரசு முழுமையாக விசாரித்து, உண்மையை அறிந்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும். வெட்டுத் தீர்மானம் கொடுத்து விட்டாலே, அது தான் உண்மை என்று ஆகிவிடாது.
சவுந்தரராஜன்-மார்க்சிஸ்ட்: தீண்டாமை ஒழிக்கப்படாதபோது, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் மட்டும் எதற்கு?
அமைச்சர் முனுசாமி: தீண்டாமை ஒழியும் வரை, அது மறையும் வரை சட்டம் இருக்கும். ஒரு கட்டத்தில் தீண்டாமை ஒழியும்போது, சட்டம் தானாக போய்விடும்.
கிருஷ்ணசாமி-புதிய தமிழகம்: எஸ்.சி., என்றால், பட்டியல் இனம் என்று தான் பொருள். இந்த பட்டியல் இனத்தில், 76 ஜாதிகள் உள்ளன. அதில் ஒரு ஜாதிதான் ஆதிராவிடர். ஆனால், ஒட்டுமொத்த இனங்களுக்கும் சேர்த்து பொதுவாக ஆதிதிராவிடர் என அழைப்பது சரியல்ல. வட மாநிலங்களில், ஆதிராவிடர் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
செ.கு.தமிழரசன்-இந்திய குடியரசுக் கட்சி: 1921ல் இதே சபையில், அனைத்து ஜாதிகளுக்கும் சேர்த்து தான் ஆதிதிராவிடர் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பன்னீர்செல்வம்: விவாதம் எங்கேயோ போகிறது. இத்துடன், இப்பிரச்னையை நிறுத்திவிடுவது நல்லது. இவ்வாறு விவாதம் நடந்தது.
பாக்கு கேள்வியால் சிரிப்பலை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆத்தூர் தொகுதியில் பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என, அ.தி.மு.க., உறுப்பினர் மாதேஸ்வரன் கேள்வி எழுப்பினார். அதற்கு,பாக்கு கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான சாத்தியம் இல்லை என, வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் பதிலளித்தார். அதைதொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர் சின்னசாமி, பாக்கு மருத்துவ குணம் கொண்டதா? என கேட்டவுடன், அவையில் உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தாமோதரன்,குடற்புழு நீக்கம், தோல் வறட்சி போக்குதல், ரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தல் போன்ற மருத்துவ குணம் உடையது. அதேபோல், தொழிற்சாலைகளில் தோல் பதனிடுதல் போன்ற பல பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகம் பயன்படுத்தினால் சிறு மூளை பாதிக்கும். போதை வாஸ்து கொண்ட பாக்கு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார். பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா என்ற கேள்வியால், அவையில், நீண்ட நேரம் உறுப்பினர்களின் சிரிப்பலை தொடர்ந்தது.
வெள்ளி, 20 ஏப்ரல், 2012
மருத்துவமனைகளுக்கு தரம் காப்பீட்டு வசதிக்காக ஏற்பாடு
சென்னை : அரசு காப்பீட்டுத் திட்டத்தில், மதிப்பெண்கள் அடிப்படையிலேயே,
மருத்துவமனைகள் சேர்க்கப்படுகின்றன என, அமைச்சர் விஜய் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, "புதிய காப்பீட்டுத் திட்டத்தில், எந்த
அடிப்படையில் மருத்துவமனைகள் சேர்க்கப்படுகின்றன,' என, புதிய தமிழகம்
கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கேள்வி எழுப்பினார்.
தரம் பிரிப்பு எப்படி? : அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறியதாவது: புதிய காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகளைச் சேர்க்க, சில நிபந்தனைகளை அரசு நிர்ணயித்து உள்ளது. மருத்துவமனைகளின் தரத்திற்கு ஏற்ப, மதிப்பெண்கள் வழங்கப்படும். முப்பது படுக்கைகள், ஐந்து தீவிர சிகிச்சைப் பிரிவு இருந்தால், அவற்றிற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். "சிடி' மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இருந்தால், அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும். தரத்திற்கு ஏற்ப அதிகபட்சம், 51 மதிப்பெண்கள் வரை வழங்கப்படுகிறது.மொத்தம், 41 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால், "ஏ1' என, மருத்துவமனை தரம் பிரிக்கப்படுகிறது. மதிப்பெண்களை குறைய குறைய, அதற்கேற்ப, தரம் குறையும் .குறைந்த பட்சம் 10 மதிப்பெண்கள் வரை இப்பட்டியலில் இடம் பெறும் மருத்துவமனைகள், "ஏ1" முதல் "ஏ6' வரை தரம் பிரிக்கப் படுகின்றன.
ஏமாற்ற முடியாது : இதன் அடிப்படையில், அதற்கென உள்ள கமிட்டியில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருந்து முடிவு செய்வர். அதன்படியே, காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகள் சேர்க்கப் படுகின்றன. எனவே, தரமற்ற மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 12 ஏப்ரல், 2012
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை: அமைச்சர்
சென்னை: ""பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை,'' என்று, அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
சட்டசபையில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், பாரதியார் பல்கலைக்கழகத்தில், 35 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, 20 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பின் ஏற்படக் கூடிய செலவை, மாநில அரசே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, "தினமலர்' நாளிதழில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். பின், 24 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். இந்த நியமனங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. "பாரதியார் பல்கலைக் கழகம், நியமனத்தின் போது விதிகளை முழுமையாகக் கடைபிடித்துள்ளது. முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணியில் சேரவில்லை. மீதமுள்ள 23 பேரும், கடந்த 1ம் தேதி முதல் பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஞாயிறு, 11 மார்ச், 2012
இடைத்தேர்தல் நடைபெறும் சங்கரன்கோவிலில் கிராம கிராமமாக சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சிக்கென்று சங்கரன்கோவில் தொகுதியில் கனிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனிடையே இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்துவதா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதா என்பன போன்ற கேள்விகளை மக்களிடம் கலந்து ஆலோசிபதற்காக 24.02.2012 அன்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஈச்சந்தா நடுவக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சென்றார்.
அங்கே அவரது ஆதரவாளர்களையும், மக்களையும் சந்தித்த அவர், தேர்தல் பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், தலைவர் (கிருஷ்ணசாமி) எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றனர்.
[Hide Description] வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம் [Restore Description] 1/1 சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.
வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம்
சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)