எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 31 ஜனவரி, 2015

திருவரங்கம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு...

திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திருவரங்கம் தேர்தல் குறித்து பேசும் போது:
ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக விளங்க்கூடியவைகளில் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் எந்த அளவிற்கு நேர்மையாகவும், வெளிப்படையாக நடைபெறுகிறதோ அதை பொறுத்தே ஒரு நாட்டில் வலுவடையக்கூடிய தன்மையை நிர்ணயிக்கும் ஆனால் அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெற்றக்கூடிய பொதுதேர்தல்களோ அல்லது இடைத்தேர்தல்களோ ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக ஆக்க கூடியதாக இருக்கின்றன. அதற்கு உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்பட்ட சுழ்நிலை உருவாக்கப்பட்டது. இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் ஜனநாயகத்தையே தாழ்த்த கூடிய வகையில் முற்றிலும் வாக்காளர்களை விலைபேசக்கூடிய நிலை உள்ளது.
இப்படிப்பட்ட கூழ்நிலையில் தமிழகத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ. தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த பிறகு நடக்க கூடிய இடைத்தேர்தல் என்பதால் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக முன் உதாரணமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனினும் எவ்வளவு மோசமான சுழ்நிலைகள் உருவானாலும் கூட ஜனநாயகத்தின் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் அதே போல சமூக இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் புதியதமிழகம் கட்சிக்கு 180 கிராமங்களில் கிளைகளும், 60,000 மேற்பட்ட வாக்குகள் உண்டு. அந்த அடிப்படையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெ. போட்டியிட்ட போது அவருக்காக நானே பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.
புதியதமிழகம் கட்சி போட்டியிடவில்லை. திமுக தலைவர் கலைஞர் அவர்கள் திமுக வேட்பாளாரை பொதுவேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்றும், திமுக பொருளாளர் ஸ்டாலின் என்னிடம் தொலைபேசியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க திமுக வேட்பாளர் ஆனந்த அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கிறது. அவருடைய பெற்றிக்கு புதிய தமிழகம் பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்படுவார்கள். சுழ்நிலையை பொறுத்து ஆனந்த அவர்களுக்கு பிரச்சாரம் செய்வேன்.
புதிய தமிழகம் கட்சி ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் அங்கம் வகித்தது. தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்துக் கொண்டுயிருக்கிறது.
சட்டத்திற்கு புறமான ஆட்சி செய்து கொண்டுயிருக்கும் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடும் பிரதான எதிர்கட்சியான திமுகவின் வேட்பாளரை ஆதரிக்கிறோம். ஜனநாயகத்தில் போர் என்று வந்துவிட்டால் கீழே படுத்துக்கொள்ள முடியாது. எதிர்த்து சண்டையிட வேண்டும். தேர்தலை சந்திக்காதவர்கள் எப்படி அரசியல்கட்சி நடத்த முடியும் .

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் திமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு : டாக்டர் க. கிருஷ்ணசாமி பேட்டி..

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில், திமுக வேட்பாளரை புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கும் என்றார் அக்கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
திருச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று. இத்தேர்தல்கள் நேர்மையாக நடைபெற்றால் தான் நாட்டின் ஜனநாயகம் வலுப்பெறும். ஆனால், தமிழகத்தில் அண்மைக்காலமாகக் கையாளப்படும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடைமுறை, ஜனநாயகத்தை தரம் தாழ்த்துவதாக உள்ளது.
இந்த மோசமான நடைமுறை ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலிலும் தொடரும் என்பது உறுதி. ஜனநாயக விதி மீறல்கள் இல்லாமல் இத்தேர்தல் நடைபெறும் என்பதில் நம்பிக்கையில்லை. இருப்பினும், தேர்தலைச் சந்திக்காத அரசியல் தெளிவான சிந்தனையாக இருக்க முடியாது. தேர்தல் என்ற ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும் உண்டு என்ற அடிப்படையில், இத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி, திமுகவுடன் கைக்கோர்த்து களமிறங்குகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரை பொது வேட்பாளராகக் கருதி ஆதரவளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் கேட்டுக் கொண்டதன் பேரில், ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை புதிய தமிழகம் கட்சி மேற்கொண்டுள்ளது.
இத்தொகுதியில் எங்கள் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இப்பகுதியில், சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளனர். எங்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரும், திமுக வேட்பாளரின் வெற்றிக்கு முழு வீச்சில் பாடுபடுவர்.
இத்தொகுதி வாக்காளர் பட்டியலில் 9 ஆயிரம் வாக்காளர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளனர் என்ற தகவல் வேதனைக்குரியது. சரியான, தெளிவான வாக்காளர் பட்டியல் கூட வெளியிடப்படவில்லை என்பது, ஜனநாயகத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என்றார் டாக்டர் கே. கிருஷ்ணசாமி.

தி.மு.க.,வுக்கு ஆதரவு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி திருச்சியில் கூறியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு, 60 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இதனால் தான் கடந்த, 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவுக்கு, நானே நேரடியாக பிரசாரம் செய்தேன். தற்போது நடக்கவுள்ள ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், புதிய தமிழகம் போட்டியிடவில்லை. 'ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளரை, பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் ஆதரிக்க வேண்டும்' என, அக்கட்சி தலைவர் கருணாநிதி ஆதரவு கேட்டார். மேலும், தி.மு.க., தரப்பில் என்னிடம் ஆதரவு கேட்டனர். அதனால், இடைத்தேர்தலில் மட்டும், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தை, புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கிறது. தமிழகத்தில் நடக்கும் சட்டத்துக்கு புறம்பான, ஆட்சிக்கு முடிவு கட்டவே, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வை ஆதரிக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

வியாழன், 29 ஜனவரி, 2015

குடியரசு தின அணிவகுப்பில் ஜெயலலிதா படத்தை வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை....டாக்டர் க.கிருஷ்ணசாமி .

 புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணசாமி தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதம்: 
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்று சிறை யில் அடைக்கப்பட்டார். தற்போது மேல்முறை யீட்டு மனுவில் ஜாமீனில் வெளியில் உள்ளார் என்பது உங்களுக்கும், உங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி, அவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டுள் ளார் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும். 

நமது நாடு 1950ம் ஆண்டு குடியரசாக அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட குடியரசு தின துறைவாரியான வாகன அணி வகுப்பு நடத்தப்பட்டது. அணிவகுப்பு வாகனங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் காட்சிப்படுத்தி அலங்கரிக்கப்பட்டிருந்தது நியாயமா என உங்களிடம் நான் கேட்கிறேன். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் படத்தை முன்னுதாரணமாக வைப்பது அரசியல் சாசன முறைப்படி சட்ட விரோதமான செயலாகும். தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடைமுறை ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். 

எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். ஜனநாயகத்துக்கு விரோதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைத்து, அணிவகுப்பு வாகனங்களில் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெற வைக்க காரணமாக இருந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 23 ஜனவரி, 2015

.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் கிராமத்தில் தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை. கண்டித்து புதிய தமிழகம் சார்பாக..துண்டறிக்கை.

Displaying PUTHIYA TAM copy.jpgதிருவாரூர் மாவட்டத்தில் 56% இறுக்கும் தேவேந்திரகுல வெளாளர்கள் சமீபகாலமாக தேவேந்திரர் அமைப்புகளிலும் புதிய தமிழகம் கட்சியிலும் அமைப்பாக வலுப்பெருவதை போறுக்காத ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு தேவேந்திரகுல மக்கள் மீது சமூக..பொருளாதார..அரசியல் அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர்..திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பனையூர் கிராமத்தில் தேவேந்திர படுகொலைகள்..மன்னார்குடி ஒன்றியம்  தென்பாதி கிராமத்தில்  தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை...தற்போது நீடாமங்கலம் ஒன்றியம் ராயபுரம் கிராமத்தில்  தேவேந்திர மக்கள் மீதான ஒடுக்குமுறை. கண்டித்து புதிய தமிழகம் சார்பாக மாண்புமிகு.. புதிய தமிழகம் நிறுவனர். டாக்டர்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M.D.M.l.A..அவர்கள் ஆணைக்கினங்க புதிய தமிழகம் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்....மற்றும் துண்டறிக்கை...

வெள்ளி, 9 ஜனவரி, 2015

மள்ளர் குலத்தில் பிறந்த போதுவுடமை போராளி.. முருகையன்தேவேந்திரர்m.p அவர்களின் 36ம் ஆண்டு நினைவேந்தல்.. புதிய தமிழகம் கட்சி..வீர வணக்கம்....

Displaying 20150106_131954.jpgபுதிய தமிழகம் நிறுவனர் டாக்டர்.

க.கிருஷ்ணசாமி md.mla..அவர்கள் ஆணைக்கினங்க திருவாரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் வீர வணக்கம் செலுத்தினர்.

சனி, 3 ஜனவரி, 2015

சொக்கம்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கவிழா

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட சொக்கம்பட்டி கிராமத்தில் புதிய தமிழகம் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கவிழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் தெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் வீரா.அரவிந்தராஜா, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் திரு.குமார்பாண்டியன், கடையநல்லூர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.காசிப்பாண்டியன் ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். விழா ஏற்பாடுகளை அந்த கிராமத்தின் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மற்றும்மாணவரணியினர் சிறப்பாக செய்திருந்தனர். ஒருகாலத்தில் அதிகமான தீண்டாமைக் கொடுமைகளைச் சுமந்து நின்ற கிராமங்களில் ஒரு கிராமம் தான் சொக்கம்பட்டி கிராமம். ஆனால் இன்று சமூகத் தளத்தில் அந்த கிராம தேவேந்திரகுல வேளாளர்கள் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் உயர்ந்து நிற்பதைக் காணும்போது மிகப் பெருமையாக இருந்தது. சொக்கம்பட்டி கிராமத்தின் அத்தகைய உயர்வுக்கு காரணம் டாக்டர் அய்யா அவர்களின் வருகை தான் என்று கூறியபோது இன்னும் பெருமையாக இருந்தது. அந்த ஊரில் ஆதிக்கம் செலுத்திவந்த ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசியல் பலத்தோடும், பணபலத்தோடும் எதிர்த்து நின்றபோது சொக்கம்பட்டி தேவேந்திரகுல வேளாளர்கள் ஒற்றுமை எனும் ஒற்றை ஆயுதத்தால் தங்களது தன்மானத்தை மீட்டெடுத்தனர். இன்றும் அந்த கிராமத்தில் இளைஞர்களும், மாணவர்களும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது பூரிப்பாகத்தான் இருந்தது. நம் சமூகம் அதிகமாக வாழக்கூடிய பல கிராமங்கள் இன்னும் ஒற்றுமையாக வாழ்வதற்கு தங்களுக்குள் தயக்கம் காட்டி வருகிற இக்காலத்தில் நம் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் அது சொக்கம்பட்டி கிராமம் என்று பெருமையாகச் சொல்லலாம். விழாவினை ஏற்பாடு செய்த சொக்கம்பட்டி கிராம தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பெரியவர்களுக்கும், தாய்மார்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மற்றும் மாணவரணி தோழர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...