எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

மருத்துவமனைகளுக்கு தரம் காப்பீட்டு வசதிக்காக ஏற்பாடு

சென்னை : அரசு காப்பீட்டுத் திட்டத்தில், மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, மருத்துவமனைகள் சேர்க்கப்படுகின்றன என, அமைச்சர் விஜய் கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, "புதிய காப்பீட்டுத் திட்டத்தில், எந்த அடிப்படையில் மருத்துவமனைகள் சேர்க்கப்படுகின்றன,' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கேள்வி எழுப்பினார்.

தரம் பிரிப்பு எப்படி? : அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறியதாவது: புதிய காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகளைச் சேர்க்க, சில நிபந்தனைகளை அரசு நிர்ணயித்து உள்ளது. மருத்துவமனைகளின் தரத்திற்கு ஏற்ப, மதிப்பெண்கள் வழங்கப்படும். முப்பது படுக்கைகள், ஐந்து தீவிர சிகிச்சைப் பிரிவு இருந்தால், அவற்றிற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். "சிடி' மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இருந்தால், அதற்கு தனி மதிப்பெண் வழங்கப்படும். தரத்திற்கு ஏற்ப அதிகபட்சம், 51 மதிப்பெண்கள் வரை வழங்கப்படுகிறது.மொத்தம், 41 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால், "ஏ1' என, மருத்துவமனை தரம் பிரிக்கப்படுகிறது. மதிப்பெண்களை குறைய குறைய, அதற்கேற்ப, தரம் குறையும் .குறைந்த பட்சம் 10 மதிப்பெண்கள் வரை இப்பட்டியலில் இடம் பெறும் மருத்துவமனைகள், "ஏ1" முதல் "ஏ6' வரை தரம் பிரிக்கப் படுகின்றன.

ஏமாற்ற முடியாது : இதன் அடிப்படையில், அதற்கென உள்ள கமிட்டியில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருந்து முடிவு செய்வர். அதன்படியே, காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவமனைகள் சேர்க்கப் படுகின்றன. எனவே, தரமற்ற மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக