எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 30 ஜூலை, 2014

தமிழக சட்டமன்றத்தில், பல்வேறு காரணங்களுக்காக இடதுசாரிகள், புதிய தமிழகம் மற்றும் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு ....



சட்டப்பேரவையிலிருந்து இடதுசாரிகள், புதிய தமிழகம், பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு..
தமிழக சட்டமன்றத்தில், பல்வேறு காரணங்களுக்காக இடதுசாரிகள், புதிய தமிழகம் மற்றும் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு குறித்து பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ-வை, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

இதேபோல் தொகுதி பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக கூறி, பாமக உறுப்பினர் கணேஷ்குமார் வெளிநடப்பு செய்தார்.

சட்ட பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு ..


சட்ட பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு!

krishnasamyஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறிய கருத்து பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து பற்றி பேச அனுமதி கோரினார்.
ஆனால், கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதை கண்டித்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் இதுபோன்று கருத்து தெரிவித்தால் நீதித்துறை மாண்பு கெட்டுவிடும் என்றும், முன்னாள் நீதிபதி கட்ஜுவின் கருத்து கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.

வெள்ளி, 25 ஜூலை, 2014

சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. வெளியேற்றம்: புதிய தமிழகம், மமக, தே.மு.தி.க வெளிநடப்பு! -


8தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் உதயகுமார், சுனாமி நிவாரண திட்டத்தை தி.மு.க ஆட்சியில் முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், வறட்சி தொடர்பான பதிலுரையில் அமைச்சர் உதயகுமார் தவறான தகவல்களை அளிக்கிறார் என்று கூறினார்.
மேலும், தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சபாநாயகர் செயல்படுகிறார் என்றும், சபாநாயகர் சர்வாதிகாரிபோல செயல்படுகிறார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, வறட்சி தொடர்பாக அமைச்சர் உதயகுமார் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், ரிஷிவந்தயம் தொகுதியில் பாலம் அமைக்க கோரி தே.மு.தி.க வினர் நடத்திய போராட்டம் பற்றி அமைச்சர் மோகன் விமர்சனம் செய்தார்.
மேலும், தே.மு.தி.க.வின் போராட்டத்தை நாடகம் என்று அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத் தொடரில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் 3வது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபையில் இருந்து திமுக, புதிய தமிழகம் வெளிநடப்பு..


சட்டசபையில் இன்று மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) ஒரு பிரச்சனை குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அது எனது ஆய்வில் உள்ளது என்றார்.
ஆனாலும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கும்படி கேட்டனர். ஆனால் பேச அனுமதி கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:–
சட்டசபையில் ஒரு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்ட போது அனுமதி கிடைக்கவில்லை. 2 ஆங்கில பத்திரிகைகளில் வந்த புள்ளி விவரப்படி நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்து பேச இருந்தோம்.
அதில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை குற்றங்கள் 2013–ல் 7,475 என்றும், 2012–ம் ஆண்டில் 7,192 என்றும் தெரிவிக்கிறது. இதே போல கற்பழிப்பு சம்பவங்களின் புள்ளி விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2013–ம் ஆண்டில் 992 கற்பழிப்பு வழக்குகளும், 2012–ல் 737 சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முக்கியமான பிரச்சினை என்பதால் இது குறித்து பேச முற்பட்டோம்.
அது மட்டுமல்ல. நேற்று முன்தினம் போலீஸ் ஏட்டு ஒருவர் மணல் கடத்தலை தடுத்த போது டிராக்டர் ஏற்றி கொல்லப்பட்டார். சமீபத்தில் மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது குறித்தும் பேச முடிவு செய்தோம்.
இது பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்டு இருந்தோம். இது பற்றி பேச வாய்ப்பு கிடைக்காததால் வெளிநடப்பு செய்தோம்.
இதே போல் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
‘‘கடைசி நேரத்தில் நீங்கள் அனுமதி கேட்டால் எப்படி என்று சபாநாயகர் வினவினார். மற்ற கட்சி உறுப்பினர்கள் முன்பே எழுதி கொடுத்து அனுமதி கேட்டு இருந்தனர். நீங்கள் கடைசி நேரத்தில் தந்ததால் இப்போது பேச வாய்ப்பு இல்லை’’ என்றார்.
இதை தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணசாமி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

'இரத்த சரித்திரம்' - தாமிரபரணி படுகொலை வரலாறும், பின்னணியும்!


கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 தொழிலாளர்களை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற தாமிரபரணி நினைவு தினம் ஜூலை 23.
சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.
 
1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும்.
 
1948 ஆம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது.
 
மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 1968 ஆம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978 ஆம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988 ஆம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
1998 ஆம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில் தென்காசி நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர். ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையை கேட்டறிந்த டாக்டர்.கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார்.
 
தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது. அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
 
பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர். 03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது. மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர். 127 தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள். ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது? என கேள்வியெழுப்பியது.
 
பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது. தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர். சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
 
அப்போதைய ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது. பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.
ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல்துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
 
ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இப்படுகொலை நடந்த சில நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள். அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர்.
 
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது அரசு. பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி.
 
தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது.

தாமிரபரணியில் உயிர் இழந்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் அஞ்சலி..



புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாரமிபரணி ஆற்றுக்கு சென்றனர். சந்திப்பு அண்ணா சிலை அருகே கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்றனர். அவர்கள் மத்தியில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவர்கள் பேசினார். பின்னர் அங்கிருந்து ஆற்றுக்கு சென்று மலர் வளையம் வைத்துமலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும்கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும், 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றது. அப்போது போலீசாரின் தாக்குதலில் 17 பேர் உயிர் இழந்தனர்.

அவர்களுக்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17பேருடைய நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு நினைவிடம் அமைக்க தாமிரபரணி ஆற்றங்கரையில் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. சிறுமிகள்பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியில் வனிதா என்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினால் எங்களை பேச அனுமதிப்பதில்லை. சட்டசபையில் எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்திற்கு அங்கு மதிப்பு கிடையாது. இந்த நிலை தொடர்ந்தால்வருகின்ற சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் கூறினார்.

தாமிரபரணி தியாகிகளுக்கு அஞ்சலி - டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் பேரணி..


1999-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். சட்டமன்ற உறுப்பினர்கள்,பல்வேறு தொழிலாளர் அமைப்புகள்தமிழ் மாநில காங்கிரஸ்சி.பி.அய்.சி.பி.அய்(எம்), அய்க்கிய ஜமாத்,  உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.
பேரணியை வழிநடத்தி வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.­ இதையடுத்து பேரணியாகச் சென்றவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிய சூழலில் திடீரென காவல்துறையினர் தடியடி நடத்தவே நிலைகுலைந்த கூட்டம் அங்கும் இங்கும் ஓடியது.
தாமிரபரணி ஆற்றை ஒட்டிய சாலையின் இருபுறமும் காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு தொழிலாளர்களின் மீது கடுமையான தாக்குதல் நடத்த,செய்வதறியாது திகைத்த தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து உயிர் காக்க  முயன்றனர். அவர்களை வெளியே வரவிடாமல்  அடித்தே  கொன்றது காவல் துறைதிட்டமிட்டு காவல் துறை நடத்திய இந்த  கொடூரமான தடியடியில்  பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.இந்தப்படுகொலை நாட்டையே உலுக்கியது.

இச்சம்பவத்தின் 15 ஆம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி  திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக சென்று உயிர் இழந்த 17 தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில்  டாக்டர்.க.கிருஷ்ணசாமி  அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.










தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!


நெல்லை 23:-1999-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். சட்டமன்ற உறுப்பினர்கள்,பல்வேறு தொழிலாளர் அமைப்புகள், தமிழ் மாநில காங்கிரஸ், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), அய்க்கிய ஜமாத், உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.
பேரணியை வழிநடத்தி வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.­ இதையடுத்து பேரணியாகச் சென்றவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிய சூழலில் திடீரென காவல்துறையினர் தடியடி நடத்தவே நிலைகுலைந்த கூட்டம் அங்கும் இங்கும் ஓடியது.
தாமிரபரணி ஆற்றை ஒட்டிய சாலையின் இருபுறமும் காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு தொழிலாளர்களின் மீது கடுமையான தாக்குதல் நடத்த, செய்வதறியாது திகைத்த தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து உயிர் காக்க முயன்றனர். அவர்களை வெளியே வரவிடாமல் அடித்தே கொன்றது காவல் துறை. திட்டமிட்டு காவல் துறை நடத்திய இந்த கொடூரமான தடியடியில் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.இந்தப் படுகொலை நாட்டையே உலுக்கியது.
இச்சம்பவத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக சென்று உயிர் இழந்த 17 தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!

தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலையை முன்னிறுத்தி 23.07.1999-ல் புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த சரித்திரம் கண்டிராத சம உரிமை போரில் களம்கண்டு உயிர் நீத்த சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 17 சமூக நீதிப் போராளிகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தென்சுடர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழகம் தொண்டர்களின் வீரவணக்க முழக்கங்களோடு மாபெரும் பேரணியாக சென்று மலர்வளையம் வைக்கப்பட்டது. இவ்வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு நம் இனத்தின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு நினைவூட்டிய புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், பல்வேறு கிராமங்களிலிருந்தும் கடலென திரண்டுவந்த கட்சியின் கடைக்கோடி தொண்டர்களுக்கும், இனமான சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு மீண்டுமொருமுறை சொல்லுவோம்,
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
மாஞ்சோலை தியாகிகளுக்கு வீரவணக்கம்.
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
புதிய தமிழகத்தின் வீரவணக்கம்.

தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலையை முன்னிறுத்தி 23.07.1999-ல் புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த சரித்திரம் கண்டிராத சம உரிமை போரில் களம்கண்டு உயிர் நீத்த சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 17 சமூக நீதிப் போராளிகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தென்சுடர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழகம் தொண்டர்களின் வீரவணக்க முழக்கங்களோடு மாபெரும் பேரணியாக சென்று மலர்வளையம் வைக்கப்பட்டது. இவ்வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு நம் இனத்தின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு நினைவூட்டிய புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், பல்வேறு கிராமங்களிலிருந்தும் கடலென திரண்டுவந்த கட்சியின் கடைக்கோடி தொண்டர்களுக்கும், இனமான சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு மீண்டுமொருமுறை சொல்லுவோம்,
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
மாஞ்சோலை தியாகிகளுக்கு வீரவணக்கம்.
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
புதிய தமிழகத்தின் வீரவணக்கம்.

தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!



மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலையை முன்னிறுத்தி 23.07.1999-ல் புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த சரித்திரம் கண்டிராத சம உரிமை போரில் களம்கண்டு உயிர் நீத்த சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 17 சமூக நீதிப் போராளிகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தென்சுடர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழகம் தொண்டர்களின் வீரவணக்க முழக்கங்களோடு மாபெரும் பேரணியாக சென்று மலர்வளையம் வைக்கப்பட்டது. இவ்வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு நம் இனத்தின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு நினைவூட்டிய புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், பல்வேறு கிராமங்களிலிருந்தும் கடலென திரண்டுவந்த கட்சியின் கடைக்கோடி தொண்டர்களுக்கும், இனமான சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு மீண்டுமொருமுறை சொல்லுவோம்,
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
மாஞ்சோலை தியாகிகளுக்கு வீரவணக்கம்.
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
புதிய தமிழகத்தின் வீரவணக்கம்.

தாமிரபரணி படுகொலை நினைவு தினம்...


நெல்லை 23:-1999-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். சட்டமன்ற உறுப்பினர்கள்,பல்வேறு தொழிலாளர் அமைப்புகள், தமிழ் மாநில காங்கிரஸ், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), அய்க்கிய ஜமாத், உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள்.
பேரணியை வழிநடத்தி வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது.­ இதையடுத்து பேரணியாகச் சென்றவர்கள் கலைந்து செல்லத் தொடங்கிய சூழலில் திடீரென காவல்துறையினர் தடியடி நடத்தவே நிலைகுலைந்த கூட்டம் அங்கும் இங்கும் ஓடியது.
தாமிரபரணி ஆற்றை ஒட்டிய சாலையின் இருபுறமும் காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு தொழிலாளர்களின் மீது கடுமையான தாக்குதல் நடத்த, செய்வதறியாது திகைத்த தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து உயிர் காக்க முயன்றனர். அவர்களை வெளியே வரவிடாமல் அடித்தே கொன்றது காவல் துறை. திட்டமிட்டு காவல் துறை நடத்திய இந்த கொடூரமான தடியடியில் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.இந்தப் படுகொலை நாட்டையே உலுக்கியது.
இச்சம்பவத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி இரயில் நிலையத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பேரணியாக சென்று உயிர் இழந்த 17 தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்

சனி, 19 ஜூலை, 2014

தாமிரபரணி படுகொலை நினைவு தினம்...புதிய தமிழகம் கட்சியின் கறுப்பு தினம்.......! ......வீரவணக்கம்....

;-புதிய தமிழகம் கட்சியின் மணப்பாறை ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..


திருச்சி 17;-புதிய தமிழகம் கட்சியின் மணப்பாறை ஒன்றியத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை பேரூந்து நிலையம் எதிரில் மணப்பாறை சட்டமன்றத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மயான கொட்டகை, மயான பாதைகளை மறு சீரமைக்கவும், கிராமங்கள் மற்றும் நகரத்திற்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தடையின்றி குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்தவும், மணப்பாறை பேரூந்து நிலையத்தை விரிவுபடுத்தவும், வையம்பட்டி ஒன்றிய இளங்காகுறிச்சி கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க கோரிபுதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்ட்த்தில் திருச்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்,மணப்பாறை ஒன்றிய செயலாளர் ஜாஜகான், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வாழையூர் குணா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலு உட்பட கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்..

மண்ணச்சநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய கோரி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்


திருச்சி 17;-மண்ணச்சநல்லூர் தொகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய கோரி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
சமயபுரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மயான கொட்டகை, மயான பாதை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் சமயபுரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமயபுரம் நான்குமுனை சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் தினகரன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் அய்யப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குணா கண்டன உரையாற்றினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலு, தொகுதி பொறுப்பாளர் சோமு, ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும், சமயபுரம் மற்றும் ச.கண்ணனூர் பேரூராட்சியை மையப்படுத்தி தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி சமயபுரம் காவல் நிலையத்தில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சமயபுரம் நகர செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை செயலாளர் ரஜினி நன்றி 
கூறினார்.

கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ..............

கரூர் 17;-மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி கரூரில், புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர்.
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங் கினார். வக்கீல் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் வைக்கப் பட்ட கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
பிச்சம்பட்டி மாணவி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்.
இது வரை கொலையாளி களை கண்டுபிடிக்காததை கண்டித்தல்.
குளித்தலை நெய்தலூரில் 4 வயது சிறுமி, காவல்காரன் பட்டியில் 9-ம் வகுப்பு மாணவி, சீரையாள்பட்டியில் 8-ம் வகுப்பு மாணவி, கீழ சிந்தலவாடியில் 7-ம் வகுப்பு மாணவி ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தல் என மேற்கண்ட கோரிக்கைகள் வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நாயக்கர், இளைஞர் அணி செயலாளர் சசிகுமார், செய்தி தொடர் பாளர் செல்லமுத்து, ஒன்றிய செயலாளர்கள் தினேஷ், ஜெயக்குமார், கண்ணுச்சாமி, தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் மனோகர் நன்றி கூறினார்.

சனி, 12 ஜூலை, 2014

தமிழக சட்டசபை கூட்டத் தொடரிலிருந்து புதிய தமிழகம் கட்சி வெளிநடப்பு..


சென்னை 11:-நேற்று முன்தினம் கேள்வி நேரம் முடிந்ததும்,திமுக,தேமுதிக,கம்யூனிஸ்ட்,புதிய தமிழகம் கட்சிகள் உள்பட 7 கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச அனுமதி கேட்டனர்.அந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால்,அது பற்றி அவையில் பேச முடியாது என்று கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார்.இதையடுத்து,7 கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.அதன்பின்,வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில்,'ஓடுகாலிகள் ஓடி விட்டனர்' எனகுறிப்பிட்டார்.இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகரை சூழ்ந்து தி.மு.க உறுப்பினர்கள்.இதனால்,அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி தேமுதிக,புதிய தமிழகம்,மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.பின்னர்,சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் அளித்த பேட்டி:-அமைச்சர் வைத்திலிங்கம் அவையில் எதிர்க்கட்சியினரை,ஓடுகாலிகள் என்று பேசியது அவை நாகரீகத்துக்கு முரணானது.எனவே,அவை குறிப்பில் இருந்து அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.இதை ஏற்கவில்லை.இதனால் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

வியாழன், 10 ஜூலை, 2014

சட்டசபையில் கூச்சல்-குழப்பம்...

சென்னை, ஜூலை 10:தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  
.
சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட விபத்து தொடர்பாக இன்று அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து அதை விவாதிக்க எதிர்க்கட்சித் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு விதிப்படி அவையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்ததால் அவையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பமும், அமளியும் நிலவியது.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய 7 கட்சிகளின் உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள்.

போரூர் மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக தாங்கள் கொடுத்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை விவாதித்திற்கு எடுத் துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால் சட்டப்படியாக இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்து விட்டதால் இந்த பொருள் குறித்து இந்த மன்றத்தில் விவாதிக்க முடியாது என்று கூறினார்.

அப்போது ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உரத்த குரல் எழுப்பினார்கள். விவாதித்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திய நிலையில் அவர்களுக்கு எதிராக அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து அவர்களுக்கு பதில் தர தயார் என்று கூறினார்.

அப்போது அவையில் சிறிது நேரம் கூச்சல்-குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும் ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும் எதிர் எதிராக குரல் எழுப்பிய நிலையில் அவை பரபரப்பாக காணப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் வைத்தியலிங்கம் உங்களுக்கு தைரியம் இருந்தால் என் பதிலை கேளுங்கள். அப்புறம் பேசுங்கள் என்று கூற அவருடைய கருத்தை வரவேற்று அதிமுக உறுப்பினர்கள் பலமாக மேஜையை தட்டினர்.

தொடர்ந்து எதிர்க்கட்சியினர் நின்று கொண்டே குரல் எழுப்பியதால் சபாநாயகர் தனபால் எழுந்து அவர்கள் அனைவரும் இருக்கையில் அமர வேண்டும் என்று எச்சரித்தார். இந்த நேரத்தில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நேரமில்லாத நேரம் (ஜீரோ அவர்) எதிர்க்கட்சி தரப்பில் கட்சி ஒருவரு“ எழுந்து பேசினால் அதற்கு பதில் கிடைக்கும். இந்த பிரச்சனையில் சபாநாயகர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கேளுங்கள். அதை விட்டு குழப்பம் விளைவிப்பது நியாயமா என்று கூறினார்.

உடனே திமுக, தேமுதிக தரப்பில் இருந்து பேச முயன்றனர். மீண்டும் அவர்களுக்கு அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால் விசாரணை கமிஷனர் அமைத்திருப்பதால் பேரவை விதி 66-ன் படி இது குறித்து இங்கு பேச முடியாது என்று உறுதியுடன் கூறினார்.

அப்போது அமைச்சர் வைத்திலிங்கம் மீண்டும் எழுந்து விசாரணை கமிஷனுக்கு குந்தகம் ஏற்படாத நிலையில் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். என் பதிலுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று உரத்த குரலில் கேள்வி எழுப்பினார். அப்போது எதிர்க்கட்சி தரப்பில் மீண்டும் ஒட்டுமொத்தமாக எழுந்து குரல் எழுப்பினார்கள்.அவர்களை சபாநாயகர் எச்சரித்தார்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து 7 கட்சிகள் வெளிநடப்பு ...



தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று (10.07.2014) துவங்கியது. சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் தே.மு.தி.க., தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்தது குறித்து பேச அனுமதி கோரினார்கள்.

சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து நின்று, மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து கொடுக்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மானம் பற்றி பேச அனுமதி கேட்டார்.

சபாநாயகர் தனபாலன், அந்த பிரச்சினை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன், புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்றார்.

இதையடுத்து திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மமக, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரிலிருந்து 7 கட்சிகளும் வெளிநடப்பு...


தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தே.மு.தி.க., தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்தது குறித்து பேச சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் அனுமதி கோரினார்கள்.
சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து நின்று, மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து கொடுக்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மானம் பற்றி பேச அனுமதி கேட்டார்.
சபாநாயகர் தனபாலன், அந்த பிரச்சினை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன், புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்றார்.
இதையடுத்து திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மமக, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்- புதிய தமிழகம், மமக வெளிநடப்பு .............

சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்திலிருந்து இன்று திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தொடரைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. அதேசமயம், திமுகவின் புதிய கூட்டாளிகளான புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இன்று வெளிநடப்பு செய்தனர். உரிமை மீறல் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் இன்று சபையில் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. தொடர்ந்து திமுகவினர் கோரிக்கை எழுப்பியதால் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்றினர். இதையடுத்து கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பதாக திமுக பின்னர் தெரிவித்தது. இந்த நிலையில், திமுக வெளியேற்றப்பட்டதை கண்டித்து, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு செய்தன.