எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 30 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்பாட்டம்.கோவில்பட்டி..

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும் பட்டியல்  வகுப்பினர் ,பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்பாட்டம்... நெல்லை ..

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நெல்லை மாவட்டம் பாளை ஜவகர் திடலில் (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும்  பட்டியல்  வகுப்பினர் ,பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக .. மாபெறும் ஆர்ப்பாட்டம்... தூத்துக்குடி..

புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு (30.4.15)வியாழன் இன்று காலை 11:00 மணிக்கு சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்யும் இலவச கட்டண இருக்கைகளில் பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மாணவ மாணவியர்க்கு கட்டாய,திருப்பி செலுத்தப்படாத அனைத்து கல்வி கட்டணங்களை வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:6 நாள்:09.01.2012 யை அமல்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி மாபெறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து......


கால நேர எதுவுமின்றி விலங்கினும் மோசமான நிலையில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டு வந்த உழைப்பாளிகளுக்கு 8 மணி நேரம் வேலை நேரம் என்பதை உதிரம் சிந்தி உறுதி செய்த நாளே மே தினம் ஆகும்!இந்நாள் உலக உழைப்பாளர்களின் விலங்கொடித்த தினம் ஆகும்.எனினும் இந்திய உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் இது எட்டாக்கனியாகவே இருக்கிறது.ஆண்டுக்கு ஒரு நாள் விடுமுறை மட்டுமே மே தினத்தின் நோக்கத்தை நிறைவேற்றாது! அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உண்ண உணவு ,உடை ,உறையுள் ,போதிய ஓய்வு என அனைத்தும் நிறைவடையும் பொழுதே மே தினத்தின் நோக்கம் நிறைவேறியதாகும் அதை நிறைவேற்றிட தமிழ் உழைப்பாளி மக்கள் ஒன்றுபடுவோம் !
புதிய உலகம் படைக்க சபதம் ஏற்போம்.
அன்புடன் ,
டாக்டர் .க .கிருஷ்ணசாமி...

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சி களப் போராளிக்கு வீரவணக்கம்..

புதிய தமிழகம் கட்சி களப் போராளிக்கு வீரவணக்கம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வீரனாபுரம் கிராமத்தை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி களப் போராளி முத்துராஜ் அவர்களுக்கு இன்று முதலாமாண்டு வீரவணக்கம் புதிய தமிழகம் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் முன்னால் மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணியம், வீர அரவிந்தராஜா , செல்லப்பா, மாநில மாணவரணி பாலாஜி, மாவட்ட மகளிரணி முத்துலட்சுமி , மாவட்ட மாணவரணி வின்சென்ட் ,ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ராஜரத்தினம், கந்தவேல், பொன்ராஜ், வாசு ஒன்றிய செயலாளர் காமராஜ் . தொகுதி செயலாளர் உமர்கர்த்தா மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் பெரிய மருது பாண்டிதேவர். சின்ன மருது பாண்டி தேவர் மற்றும் கடையநல்லூர் ஆறுமுகசாமி உட்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

தனி நபருக்காக 7 கோடி மக்களை தமிழக அரசு வாட்டி வதைக்கிறது : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..

சென்னை: தனி நபருக்காக 7 கோடி மக்களை தமிழக அரசு வாட்டி வதைக்கிறது என சென்னையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதலீட்டாளர் மாநாடு, மெட்ரோ ரயில், புதிய பேருந்துகள் இயக்கம் காலதாமதம் என புகார் தெரிவித்துள்ளார். கடந்த 7 மாதமாக தமிழக அரசு முடங்கி போய் உள்ளதாகவும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விவசாயிகளை அடகு வைக்கும் விதமாக நில எடுப்பு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது என்றும் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். மின்சாரம் மற்றும் உணவுத்துறையில் ஊழல் நிறைந்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஆந்திர சம்பவம்: நெல்லையில் ஆர்ப்பாட்டடம்: ஆந்திர வங்கி முற்றுகை..

ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருநெல்வேலியில் திங்கள்கிழமை புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட இந்து மகாசபா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் க. நடராஜன், வடக்கு மாவட்டச் செயலர் எஸ். இன்பராஜ், தெற்கு மாவட்டச் செயலர் எம். சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின், மேற்கு மாவட்டச் செயலர் ஏ. ஜெயக்குமார், ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலர் எட்வர்ட்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, மத்திய மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திக் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வங்கி முற்றுகை: இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய இந்து மகா சபா அமைப்பினர் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கி முன்பு திரண்டுமுற்றுகையிட்டனர். ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஜி. இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம். கணேசபாண்டியன், மாநில துணைச் செயலர் இ. ராமசாமி, மாநகர பொதுச்செயலர் ஜி. இசக்கிபாண்டி, மாவட்ட துணைச் செயலர் எஸ். மாரியப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநில அரசை கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் நூதன போராட்டம் வங்கியை முற்றுகையிட முயன்ற 18 பேர் கைது..

திருச்சி,
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆந்திர அரசை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினார்கள். வங்கியை முற்றுகையிட முயன்றபோது 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
நூதன போராட்டம்திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்ட சென்ற தமிழக கூலி தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் நாள்தோறும் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திருச்சி புறநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்து உடலில் ரத்தம் வடிவது போல் சாயம் பூசியபடி நான்கைந்து பேர் தரையில் படுத்து கிடந்தனர். அதன் அருகில் நின்று கொண்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் கோஷம் போட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், ஆந்திர அரசில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பாலு, குணா, அன்பழகன் உள்பட பலர் பேசினார்கள்.
18 பேர் கைதுதிருச்சி சாலை ரோட்டில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மதியம் திடீர் என புறப்பட்டு சென்றனர். வங்கி முன்பு அவர்கள் வந்த போது மாநகர் மாவட்ட செயலாளர் சங்கர், புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சி....ஆர்பாட்டம் விருதுநகர்..

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,MLA அவர்கள் உத்தரவின் படி விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் தேசபந்து மைதானத்தில் ஆந்திராவில் 20-தமிழர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும்,CBI விசாரணையும் நடத்த வலியுறுத்தி இன்று(13.4.15) காலை 11-மணிக்கு புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆந்திராவில் 20 தமிழா்களை சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக கண்டனம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆந்திராவில் 20 தமிழா்களை சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக கண்டனம் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளா் தங்கராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட செயலாளா் நடராஜன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளா் இன்பராஜ் முன்னிலை வகித்தனா். மேலும் மேற்கு மாவட்ட செயலாளா் ஜெயக்குமாா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தின் நன்றியுரை தெற்கு மாவட்ட செயலாளா் சுரேந்திரன் கூறினாா்.

நாகையில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து,நாகையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் குடுபத்திற்கும் நிவாரணமாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்க ÷வண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.வழக்கை சி.பி.ஐ.,வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,நாகை கலெக்டர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.25 க்கும் ÷
மற்பட்டோர் கலந்து கொண்டு,ஆந்திர அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆந்திரத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர காட்டுப் பகுதியில், கொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்டச் செயலர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் கண்ணன், அன்புராஜ், இளைஞர் அணிச் செயலர் ராஜசேகரன், மாணவரணிச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஆந்திர மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்

ஆந்திர சம்பவம்: நெல்லையில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

ஆந்திர மாநிலத்தில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர வங்கியை முற்றுகையிட்ட இந்து மகாசபா அமைப்பினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலர் க. நடராஜன், வடக்கு மாவட்டச் செயலர் எஸ். இன்பராஜ், தெற்கு மாவட்டச் செயலர் எம். சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் ஏ. ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட இணைச் செயலர் எட்வர்ட்ராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.எஸ். செல்லப்பா, மத்திய மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திக் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வங்கி முற்றுகை: சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய இந்து மகாசபா அமைப்பினர், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திர வங்கி முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஜி. இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம். கணேசபாண்டியன், மாநில துணைச் செயலர் இ. ராமசாமி, மாநகர பொதுச்செயலர் ஜி. இசக்கிபாண்டி, மாவட்ட துணைச் செயலர் எஸ். மாரியப்பன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர வங்கி முன்பு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் வங்கிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் பழனி தாலுகா அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார்.  நகர செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார்.  ஒன்றிய செயலர் காளிதாஸ் வரவேற்றார். தொழிலாளர்கள் படுகொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரியும், இறந்த கூலித் தொழிலாளர்களுக்கு கூடுதலான இழப்பீட்டுத் தொகை வழங்கவும்  கோரிக்கை எழுப்பப்பட்டது. 
  சிவகிரிப்பட்டி காளிமுத்து, கண்ணன், பேச்சிமுத்து, திருமலைசாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆந்திர அரசைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை செய்ய்பபட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாடடம் நடந்தது. 

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், உண்மைக் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிததிருந்தார். 

அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் கண்ணன், அண்பு ராஜ், இளைஞர் அணி செயலாளர் ராஜசேகரன், மாணவர் அணி செயலாளர் ராஜேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.பி. சாகுல் ஹமீது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

புதிய தமிழகம் கட்சி...முப்பெரும் விழா.....திருவாரூர் மாவட்டம்

சனி, 11 ஏப்ரல், 2015

தென்மாவட்ட கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ல் புதிய தமிழகம் பேரணி

: ‘தென்மாவட்டத்தில் கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும்‘ என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நாவலடியூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகராஜா(42) என்ற விவசாயி கடந்த 2ம் தேதி காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை சக்கிமங்களத்தை சேர்ந்த கதிரேசக்குமார்(36) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகமெங்கும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், கவுரவக் கொலைகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன.
எனவே, தென் தமிழகத்தில் துணை ராணுவத்தை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், கவுரவக் கொலைகளை தடுத்திடவும் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 6ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும். அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்கள் சாதீய தூக்கலோடு வருகின்றன. இதனால், மோதல் உருவெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு வளரும் போக்கு ஏற்படுகிறது. மத்திய திரைப்பட தணிக்கை குழு வெறும் சான்றிதழ் நிறுவனமாக மாறிவிட்டது. எனவே, சமூக அக்கறை கொண்ட பல தரப்பினரை உள்ளடக்கிய சமூக அக்கறை தணிக்கை குழு ஒன்று அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்

தென்மாவட்ட படுகொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி பேரணி...டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: ‘தென்மாவட்டத்தில் கொலைகளை கண்டித்து சென்னையில் ஜூன் 6ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும்‘ என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியின் மாநில அரசியல் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர், கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நாவலடியூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகராஜா(42) என்ற விவசாயி கடந்த 2ம் தேதி காவல் நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை சக்கிமங்களத்தை சேர்ந்த கதிரேசக்குமார்(36) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகமெங்கும் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், கவுரவக் கொலைகளும் மிகவும் அதிகரித்து வருகின்றன.

எனவே, தென் தமிழகத்தில் துணை ராணுவத்தை பாதுகாப்பு பணிக்கு நிறுத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், கவுரவக் கொலைகளை தடுத்திடவும் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 6ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும். அண்மைக்காலமாக தமிழ் திரைப்படங்கள் சாதீய தூக்கலோடு வருகின்றன. இதனால், மோதல் உருவெடுத்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவிற்கு வளரும் போக்கு ஏற்படுகிறது. மத்திய திரைப்பட தணிக்கை குழு வெறும் சான்றிதழ் நிறுவனமாக மாறிவிட்டது. எனவே, சமூக அக்கறை கொண்ட பல தரப்பினரை உள்ளடக்கிய சமூக அக்கறை தணிக்கை குழு ஒன்று அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி வரும் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இதனை தெரிவித்தார்..