எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 29 டிசம்பர், 2014

திராவிட கட்சிகள் ஆட்சியில் அதிகரிக்கும் கவுரவக் கொலை: கிருஷ்ணசாமி சாடல்...

மதுரை: ''திராவிட கட்சிகள் ஆட்சியில் தொழில் வளருகிறதோ இல்லையோ கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன,'' என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: கலப்பு திருமணம் செய்வோர் கொலையாவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 20 மாதங்களில் 40 பேர் கொலையாகி உள்ளனர். காதல் திருமணம் செய்தவர்களை தாக்கும்படி பா.ம.க., எம்.எல்.ஏ., ஒருவரே தூண்டுகிறார். பெண் சிசு கொலைக்கும், கலப்பு திருமணம் செய்யும் பெண் கொலை செய்யப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இருந்துள்ளன. இவர்கள் ஆட்சியில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கிறதோ இல்லையோ, கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் நெடுமாறன், சீமான் போன்றோர் இதை கண்டிக்காதது ஏன்? ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும், என்றார். 

கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்'

கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கீழமருதூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், கலப்பு திருமணம் செய்த மாற்றுத் திறனாளியுமான அமிர்தவள்ளி (30), அவரது கணவர் பழனியப்பன் (37), இத்தம்பதியின் 40 நாள்களே நிரம்பிய குழந்தை அகிலேஷ் ஆகியோர் அண்மையில் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில், திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, கிருஷ்ணசாமி பேசியது:
தமிழகத்தில் அண்மைக்காலமாக கலப்புத் திருமணங்களை தடுக்கும் வகையில், கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.
தர்மபுரியில் இளவரசன்- திவ்யா கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஓர் அமைப்பினர் மாவட்டம்தோறும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
கௌரவக் கொலைகளைத் தடுக்க, கலப்பு திருமணத் தம்பதியரை காக்க தனிச்சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட இணைச் செயலர் செளந்திரபாண்டியன், மாவட்டச் செயலர் ராஜேந்திரன், நகரச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 திருவாரூரில் கட்சி நிர்வாகிகளுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் க. கிருஷ்ணசாமி.

கெளரவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் : டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்...

கெளரவக் கொலைகளைத் தடுóத்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
 கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மாவட்டங்களில் கடந்த 20 மாதங்களில் 40 பேர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வடமாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அமைப்பினர் தென்மாவட்டங்களில் உள்ளோருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். ஆகவே இதுகுறித்து அரசு தீவிர விசாரணை நடத்திடவேண்டும்.
 கெளரவக் கொலைகளைத் தடுக்க சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவும், சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முன்வரவேண்டும். திராவிட ஆட்சியில்தான் சீர்திருத்த திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 கெளரவக் கொலைகளைத் தடுக்க அனைத்து அமைப்பினர் பங்குபெறும் வகையில் புதிய தமிழகம் சார்பில் மாநில அளவில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
 மாநிலத்தில் காவல் நிலையச் சாவுகள் நடந்துவருகின்றன. செம்பட்டி, இளையான்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்த காவல் நிலையச் சாவுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே காவல் நிலையச் சாவுகளை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் பி.பாஸ்கர், மதுரை செய்தித்தொடர்பாளர் தெய்வம், மாநிலச்செயலர் மதுரம் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அரசு சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க சதி; புதிய தமிழகம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு...

ராஜபாளையம் : ""சிவகாசி அருகே ஆலங்குளம் அரசு சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க அரசியல் சதி நடக்கிறது,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
இந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலங்குளத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்ட கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது: ஆயிரக்கணக்கானவர்கள் வேலை பார்த்த 40 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள இந்த அரசு சிமின்ட் ஆலையை நவீனப்படுத்தவில்லை. சட்டசபையில் இதற்காக குரல் கொடுத்தேன். அதன்விளைவாக 2012-2013 பட்ஜெட்டில் 165 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவிப்பு வந்தது. இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி நடக்கவில்லை.
இந்த ஆலையை நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்கினால் தற்போது மூடை 390 ரூபாய்க்கு விற்பனையாகும் சிமின்ட்டை 110 ரூபாய்க்கு விற்க முடியும். இந்த சிமின்ட் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க அரசியல் சதி நடப்பதாக குற்றம் சாட்டுகிறேன். ஆலையை மூடினால் அதற்கு இந்த மாவட்டத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் தான் பொறுப்பு. அடுத்து தென்மாவட்ட அளவில் போராட உள்ளோம்,'' என்றார்.

கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்..

கெளரவக் கொலைகள் மற்றும் காவல் நிலைய சாவுகளைக் கண்டித்து புதிய தமிழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்.
கெளரவக் கொலைகளைத் தடுத்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும்
இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'திராவிட கட்சிகள் ஆட்சியில் தொழில் வளருகிறதோ இல்லையோ கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தென்மாவட்டங்களில் கடந்த 20 மாதங்களில் 40 பேர் கெளரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வடமாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட அமைப்பினர் தென்மாவட்டங்களில் உள்ளோருடன் சேர்ந்து படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். காதல் திருமணம் செய்தவர்களை தாக்கும்படி பா.ம.க., எம்.எல்.ஏ., ஒருவரே தூண்டுகிறார். பெண் சிசு கொலைக்கும், கலப்பு திருமணம் செய்யும் பெண் கொலை செய்யப்படுவதற்கும் வித்தியாசம் இல்லை. ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சியில் இருந்துள்ளன. இவர்கள் ஆட்சியில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் அதிகரிக்கிறதோ இல்லையோ, கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் நெடுமாறன், சீமான் போன்றோர் இதை கண்டிக்காதது ஏன்?
கெளரவக் கொலைகளைத் தடுக்க சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவும், சிறப்பு சலுகைகள் அளிக்கவும் முன்வரவேண்டும். திராவிட ஆட்சியில்தான் சீர்திருத்த திருமணம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கெளரவக் கொலைகளைத் தடுக்க அனைத்து அமைப்பினர் பங்குபெறும் வகையில் புதிய தமிழகம் சார்பில் மாநில அளவில் கருத்தரங்கம் நடத்தப்படவுள்ளது.
மாநிலத்தில் காவல் நிலையச் சாவுகள் நடந்துவருகின்றன
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற தேவேந்திர குல சமுதாய இளைஞர் 2012 ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று விசாரணைக்காக வேடஞ்சந்தூர் காவல் நிலையம் அழைத்து செல்ல பட்டவர் பிணமாகவே வெளியே வந்தார். இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த விசாரணையும் நடைபெற வில்லை .
இளையான்குடி காவல் நிலையத்தில் மாலைராஜ் என்ற தேவேந்திர குல இளைஞர் மரணம் அடைந்தார். காவல் நிலைய மரங்களுக்கும் இன்று வரை நியாயம் கிடைக்க வில்லை.ஆகவே காவல் நிலையச் சாவுகளை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீன படுத்த கோரி ஆர்ப்பாட்டம்!!! டாக்டர் க.கிருஷ்ணசாமி...

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

தமிழகத்தில் மொத்தம் 16 சிமெண்ட் ஆலைகள் உள்ளன.அரியலூரிலும்,ஆலங்குளத்திலும் உள்ள ஆலைகள் அரசுக்கு சொந்தமானவை.தொடக்கத்தில் 2000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பினை தந்தது இந்த ஆலை.இது தொடங்கப்பட்டது முதல் நவீனப்படுத்தப்படாமல் உள்ளது.பழைய இயந்திரங்களால் தான் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மழை குறைவு.விவசாயம் குறைவாகத்தான் உள்ளது.இது போன்ற தொழிலை நம்பித்தான் தொழிலாளர்கள் உள்ளனர்.அரசு இந்த ஆலையை நவீனப்படுத்தாமல் மூடினால் மாவட்டம் முழுவதும் தொழிலாளர்களை திரட்டி புதிய தமிழகம் போராட்டம் நடத்தும்.டாக்டர் க.கிருஷ்ணசாமி.

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,...

"கௌரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் 'டாக்டர் க.கிருஷ்ணசாமி

(28 Dec) கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கூறினார்.திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கீழமருதூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரும், கலப்பு திருமணம் செய்த மாற்றுத் திறனாளியுமான அமிர்தவள்ளி (30), அவரது கணவர் பழனியப்பன் (37), இத்தம்பதியின் 40 நாள்களே நிரம்பிய குழந்தை அகிலேஷ் ஆகியோர் அண்மையில் உறவினர்களால் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில், திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, கிருஷ்ணசாமி பேசியது:தமிழகத்தில் அண்மைக்காலமாக கலப்புத் திருமணங்களை தடுக்கும் வகையில், கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன.தர்மபுரியில் இளவரசன்- திவ்யா கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஓர் அமைப்பினர் மாவட்டம்தோறும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.கௌரவக் கொலைகளைத் தடுக்க, கலப்பு திருமணத் தம்பதியரை காக்க தனிச்சட்டம் இயற்ற புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறினார்.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர் ..


டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழமருதூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக ஆர்பாட்டம்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-
கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது.
பெரியார் லட்சியத்தின் அடிப்படியில் இங்கு சீர்திருத்த திருமணம் நடந்தது. இதை ஆதரிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மை காலமாக கலப்பு திருமணங்களை தடுக்கும் வகையில் கெளரவ கொலைகள் நடக்கிறது. கெளரவக் கொலைகளை தடுக்க, ஜாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்.

சனி, 27 டிசம்பர், 2014

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கலப்பு திருமணம் தம்பதிகளை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும்: கிருஷ்ணசாமி பேட்டி..

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களை காக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தியாவிலேயே முற்போக்கு மாநிலமாக தமிழகம் விளங்கி வந்தது.
பெரியார் லட்சியத்தின் அடிப்படியில் இங்கு சீர்திருத்த திருமணம் நடந்தது. இதை ஆதரிக்கும் வகையில் திமுக ஆட்சியில் பல்வேறு உதவிகள் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அண்மை காலமாக கலப்பு திருமணங்களை தடுக்கும் வகையில் கெளரவ கொலைகள் நடக்கிறது. கெளரவக் கொலைகளை தடுக்க, ஜாதிக்கலவரங்களை தடுத்து நிறுத்த, புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழையூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக ஆர்பாட்டம் நிறுவனர் - தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழையூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக ஆர்பாட்டம் .

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம் ...

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம் ...

கரூர்: கரூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட பிச்சம்பட்டியில் கடந்த ஜூன் 23 ம் தேதி தற்காலிகமாக பணிக்கு சென்று வீடு திரும்பிய பள்ளி மாணவி வினிதாவை வெற்றிலை கொடிக்காலுக்கு தூக்கி சென்ற மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி., கற்பழித்து கொலை செய்யப்பட்ட மாணவி வினிதா வழக்கில் 6 மாதங்களாகியும் தமிழக காவல் துறை குற்றவாளிகளை கைது செய்யாதது என்பது குற்றவாளிகள் அரசியல் பின்புலம் உடையவர்களாக இருப்பதாக சந்தேகம் தெரிவித்த அவர் தலைநகரான டெல்லியில் இதே போன்ற வழக்கில் பொதுமக்கள் கடுமையாக போராடுவதும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்பட்டு வரும் சூழலில் தமிழகத்தில் மட்டும் கொலை, கொள்ளைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. எனவே இவ்வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்றார்.மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம்மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களை கைது செய்யக் கோரி கிருஷ்ணசாமி போராட்டம்

தஞ்சை மண்ணில் வீர வரலாறு படைத்த தேவேந்திரர்களுக்கு வீர வண்ணக்கம்

ஊர் உறங்கிய நேரம், உலகம் உறங்கிய நேரம், 46 வருடங்களுக்கு முன்பு டிசம்பர் 25 ஆம் நாள் நள்ளிரவில் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே கீழ்வெண்மணி எனும் கிராமத்தில் முதியோர், பெண்கள் மற்றும் குழைந்தைகள் உட்பட 44கு தேவேந்திர குல வேளாளர்கள் ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்தபட்டார்கள் .
கொளுத்தியவன் கொழுத்த நிலபிரபு, வர்க்க மற்றும் சாதி ஆதிக்கம் நிறைந்த கொடூரன். கொலையுண்டவர்கள் ஏதுமற்ற நிராயுத பாணிகள். பகலெல்லாம் பண்ணையாரின் கழனியில் பாடுபட்டு இரவு திரும்பினால் அரைத் தூக்கம் போடுவதற்குக் கூட சொந்த வீடு அற்றவர்கள். பண்ணையார் படி அளந்தால் மட்டும் தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும் என்ற நிலையில் வாழ்ந்து வந்தவர்கள். பண்ணையாருக்கு நிகராக நின்று தாங்கள் பாடுபற்ற கூலியை கூடக் கேற்பதற்கு அருகதை அற்றவர்களாக வைக்கப் பட்டுஇருந்தவர்கள்
கல்வி இல்லை, சொந்த நிலம் இல்லை, பிறப்பால் உயர்வு இல்லை அரை அடிமைகளாகக் கருதப் பட்டவர்கள், ஒற்றுமை இல்லாமல் உணர்வற்று இருந்தவர்கள் . குடும்பத்தோடு நெல் களஞ்சியத்தில் பாடு பட்டும் அரை வயிர் பசி ஆற கூடக் கூலி கிடைக்காதவர்கள் ஒரு நாள் ஒன்று கூடினார்கள் அவர்கள் கேட்டது ஒரு நாளைக்கு அரைப் படி நெல் கூடுதலாக மட்டுமே. இதைக் கூடப் பொருத்துக் கொள்ள முடியாத பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடு கண்ணசைத்தார், அவரது அடியாட்கள் கூலி உயர்வு கேட்டவர்களைக் கூண்டோடு கொளுத்தினர். எந்த விதத்திலும் ஓடி தப்பிப் பிழைக்கத் திராணியற்ற முதியோர், குழந்தைகள், பெண்கள் என 44 பேரும் மாண்டனர்.
அவர்கள் ஆயுதம் தாங்கி எதிர்த்துப் போராடி வரலாறு படைக்கவில்லைதான், ஆனால் முதல்முறையாக பண்ணையாரை எதிர்த்த வீரவரலாற்றை தஞ்சை மண்ணில் பதித்தவர்கள், வீரமிகு தேவேந்திரர்கள் !! ஆதிக்கவர்கத்தினர் அவர்கள் உடலை கொளுத்தி இருக்கலாம், ஆனால் அவர்கள் எழுப்பிய உரிமை குரலை கொளுத்த முடியாது என்பதே வரலாறு . வர்க்கத்தை மறந்த சாதியமும், சாதியை மறந்த வர்க்கப் போராட்டமும் வெற்றி பெறாது என்று உலகிற்கு உணர்த்தியநாள் - டிசம்பர் 25
போராளிகளையும் தியாகிகளையும் கூலிகாரர்களாகக் சித்தரிப்பது கோழைத்தனம். அவர்கள் எழுச்சிமிகுச் சமுதாயத்தின் அடையாளம். எவர் அவர்களை மறப்பினும் புதிய தமிழகம் கட்சி மறவாது . டிசம்பர் 25 காலை 11 முதல் 12 மணி வரையிலும் அணைத்து மாவட்டங்களில் அவர்களின் 46வது நினைவு நாளை நினைவு கூறும் வகையில் 46 மெழுகுகளை ஏந்தி அஞ்சலி செலுத்துவோம். தியாகிகளைப் போற்றுவோம் !!

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம்.

டிசம்பர் 25 திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் கீழ வெண் மணி தியாகிகளுக்கு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி..

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்,பிச்சம்பட்டி கிராமத்தை சோர்ந்த பள்ளி மாணவி வினிதாவை கற்பழித்து கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும்,இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றக் கோரியும் கரூர் பேருந்து நிலையம் அருகில் டிச-26 இன்று "சமூக நீதி போராளி" டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

வியாழன், 25 டிசம்பர், 2014

..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

1. தேவேந்திர குல பெண்மணி வினிதா பாலியல் பலாத்காரம் - படுகொலை சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 26 - கரூர்
2. காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
3.ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை நவீன படுத்த ரூ.164 கோடி ஒதுக்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 28 -விருதுநகர்
4. நிலக்கோட்டை காவல் நிலையச்சாவு -உசிலம்பட்டி கௌரவ கொலைகள் கண்டித்து ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 29 - மதுரை 

1. தேவேந்திர குல பெண்மணி வினிதா பாலியல் பலாத்காரம் - படுகொலை சிபிஐ விசாரணை கோரி ஆர்பாட்டம்-- டிசம்பர் 26 - கரூர்
தாழ்த்தப்பட்டோர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், கௌரவ கொலைகள், காவல் நிலைய சாவுகள் அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22 தேதி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டி என்ற கிராமத்தில் தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த வினிதா என்ற 17 வயது பெண்மணி பணிக்கு சென்று திரும்பிய போது தனது சொந்த கிராமத்துக்கு அருகாமையிலே கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு பத்து மாதங்கள் ஆகியும் குற்றவாளிகள் எவரும் கைது செய்ய பட வில்லை. எனவே இந்த கொடூர சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும் இந்த வழக்கை சிபிஐ யிடம் ஒப்டைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 26ஆம் தேதி கரூர் மத்திய பேருந்து நிலையம் அருகே புதிய தமிழகம் சார்பாக காலை 11 மணி முதல் 1 மணி வரை ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
2. காதல் மணம் செய்த அமிர்தவள்ளி கௌரவ கொலை -கண்டன ஆர்ப்பாட்டம் --டிசம்பர் 27 - திருவாரூர்
டிசம்பர் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் கீழையூர் கிராமம் தேவேந்திர குல சமுதாய அமிர்த வள்ளி என்ற பெண்மணியும் அதே கிராமத்து வன்னியர் சமுதாய இளைஞரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரு ஆண்டு காலத்துக்கு மேலாக திருப்பூரில் அவர்களுடைய மூன்று மாத கை குழந்தையுடன் வாழ்ந்துவந்தனர். அவ்மூவரையும் வஞ்சகமாக அவர்கள் சொந்த ஊருக்கே வரவழைத்து அப்பெண்மணியின் கணவரின் சகோதர்கள் கொடுரமான வகையில் மூவரையும் கொலை செய்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த பெண்மணியை திருமணம் செய்தார் என்பதற்க்காகவே தனது சொந்த குடும்பத்தினராலே பச்சிளம் குழந்தையையும் சேர்த்து கொன்று குவித்த சம்பவம் தமிழ் சமுதாயத்திற்கும் இந்திய நாட்டுக்கும் சர்வதேச அளவில் ஒரு அவமானத்தை உருவாக்க கூடிய நிகழ்வாகும். இக்கொடூர சம்பவத்தை கண்டிக கூடிய வகையில் டிசம்பர் 27ஆம் தேதி திருவாரூர் தபால் அலுவுலகம் முன் புதிய தமிழகம் சார்பாக காலை 11 மணி முதல் 1 மணி வரை ஆர்பாட்டம் நடைபெறம்.
3. ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை நவீன படுத்த ரூ.164 கோடி ஒதுக்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 28 -விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குலத்தில் அரசு சிமெண் ட் ஆலை மிக பழமை வாய்ந்தது மட்டுமல்ல வறட்சிக்கு இலக்கான அப்பகுதி வாழ் மக்களுக்கு வேலை வாய்பிற்கான முக்கியமான தொழிற்சாலையாகும். காலத்தினி வளர்ச்சிக்கேற்ப அந்த ஆலை நவீனப்படுத்தபடாததால் நாளுக்கு நாள் உற்பத்தி திறன் குறைந்து வந்தது. கடந்த 5 வருடத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். ஆலையிலும் ஆலைக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் குவாரியிலும் ஊழல் மலிந்து விட்டது. ஆலையை நவீனபடுத்தவும் உற்பத்தியை பெருக்கவும் அதன் மூலம் குறைந்த விலையில் அரசு கட்டிடங்களுக்கு சிமெண்ட் வழங்கிடவும், அப்பகுதி மக்கள் தொடர்ந்து குரல் குடுத்து வருகின்றனர். சட்டமன்றத்திலும் புதிய தமிழகம் சார்பாக பலமுறை வலியுறுத்தி உள்ளேன் . இந்நிலையில் 2012 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.164 கோடி ஆலங்குளம் ஆலைக்கு ஒதுக்க படும் என அறிவிக்க பட்டது .இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்ற இந்த நிலையிலும் அறிவிக்க பட்ட நிதி இதுவரை ஒதுக்க படவில்லை. இப்பொழுது மெல்ல மெல்ல அந்த ஆலையை மூடுவதற்கு உண்டான முயற்சியில் அரசு ஈடுபடுவதாக தெரிகிறது. இச்செய்தி உண்மையாகும் பட்சத்தில் விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கே தடையாக அமையும். எனவே தமிழக அரசு சிமெண்ட் ஆலையை நவீன படுத்த 164 கோடியை உடனடியாக ஒதுக்கிட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக வரும் டிசம்பர் 28ஆம் தேதி அந்த ஆலையின் முன்பாக ஆர்பாட்டம் நடைபெறும்.
4. காவல் நிலையச்சாவு - கௌரவ கொலைகள் கண்டித்து ஆர்ப்பாட்டம்-- டிசம்பர் 29 - மதுரை
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா என்ற தேவேந்திர குல சமுதாய இளைஞர் 2012 ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று விசாரணைக்காக வேடஞ்சந்தூர் காவல் நிலையம் அழைத்து செல்ல பட்டவர் பிணமாகவே வெளியே வந்தார். இரண்டு வருடங்கள் ஆகியும் எந்த விசாரணையும் நடைபெற வில்லை .
இளையான்குடி காவல் நிலையத்தில் மாலைராஜ் என்ற தேவேந்திர குல இளைஞர், SP பட்டினம் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தார். காவல் நிலைய மரங்களுக்கும் இன்று வரை நியாயம் கிடைக்க வில்லை.
உசிலம்பட்டி அருகே உள்ள குக்கிராமத்தை சார்ந்த திலிப் குமார் என்ற தேவேந்திர குல சமுதாய இளைஞர் அந்த பகுதியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சமுதாயத்தை சார்ந்த விமலாதேவி என்ற பெண்ணை விரும்பி திருமணம் செய்கிறார். அவர்கள் இருவரும் கட்டாயமாக பிரிக்க படுகிறார்கள் , அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு செய்ய படுகிறது. அதையும் ஏற்றுகொள்ளாத அந்த பெண் மீண்டும் திலிப் குமார்உடன் செல்கிறார். காவல் துரை அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆதரவோடு பிரிக்கப்பட்ட அந்த பெண் வலுகட்டாயமாக பெற்றோரிடத்தில் ஒப்டைக்க பட்ட அவர் தொடர்ந்து அடைத்து வைக்க படுகிறார். ஒரு சில நாட்களில் அந்த பெண் உயிருடன் எரித்து கொலை செய்ய படுகிறார். செந்தமிழ் பூமியில் தான் இந்த கௌரவ கொலைகள் நடந்தேறுகின்றன .
மேற்குறிப்பிட்ட காவல் நிலைய மற்றும் கௌரவ கொலைகளை கண்டித்து வரும் டிசம்பர் 29ஆம் தேதி மதுரையில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட நான்கு ஆர்பாட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன். புதிய தமிழகம் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டபடுகிரார்கள்.

திருவாரூர் ..புதிய தமிழகம் கட்சி சார்பில் ..நிறுவனர். டாக்டர் கிருஷ்ணசாமி..M.D.M.L.A. அவர்கள் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம்.

Displaying Dr krishnasamy new copy.jpg

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம்...

டிச-26ம் தேதி "சமூகநீதி போராளி" டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்......

கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம்,பிச்சம்பட்டி கிராமத்தை சோர்ந்த பள்ளி மாணவி வினிதாவை கற்பழித்து கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும்,இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரியும் கரூர் பேருந்து நிலையம் அருகில் டிச-26ம் தேதி "சமூகநீதி போராளி" டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்