எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: கிருஷ்ணசாமி


 


சட்டசபையில் இன்று (26.08.2011) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ஜெயக்குமார், இந்த பிரச்சினை குறித்து பின்னர் எனது அறையில் வந்து பேசுங்கள். தற்போது பேச அனுமதி இல்லை என்றார். கிருஷ்ணசாமியின் பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அறிவித்தார்.

இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பிரச்சினை குறித்து பேச முயற்சி செய்தார். அதற்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அவையில் இருந்து வெளியேறிய பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே 2 முறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

தூக்கு தண்டனை ரத்து :டாக்டர் கிருஷ்ணசாமி வேண்டுகோள்

 







திருநெல்வேலி:தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் உயிர்காக்கப்படுவது முதல்வர் ஜெயலலிதா கையில் உள்ளது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.



புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் கூறியதாவது:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கவேண்டும் என பல்வேறு அமைப்புகளும் போராடிவருகின்றன.



இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் உள்படதமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறார். இதனால் உலக தமிழர்கள்மத்தியில் ஜெ., மீதான மரியாதை உயர்ந்திருக்கிறது.



எனவே அவருக்கு இந்த விஷயத்தில் இக்கட்டான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூவருக்குமான தூக்குதண்டனையை நிறுத்தவேண்டிய இறுதி முடிவுதமிழக முதல்வரின் கையில் உள்ளது. இதற்கு முன்பும் கேரளாவில் சி.ஏ.,பாலன் தூக்குதண்டனையும் ஆந்திராவில் இருவரதுதூக்கு தண்டனையும் ரத்தாகியிருக்கிறது. எனவே இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 161ன்படி தமிழக அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தூக்கு தண்டனை கைதிகள் விடுவிக்கப்படலாம். எனவேதமிழக அரசு அதற்கான முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றார்..

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஓட்டப்பிடாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


 

ஓட்டப்பிடாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தமிழக முதல்வர் ஜெயலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் விதவை, முதியோர், ஊனமுற்றோர் உதவித் தொகையினை ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார். ரேசன் கார்டு இல்லாத நபர்களுக்கு உடனடியாக ரேசன் கார்டுகள் வழங்கிடவும் அறிவிப்பு வெளியிட்டார். 

அதனடிப்படையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நான்கு இடங்களில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் கிராமம் தோறும் நன்றி அறிவிப்பு கூட்டங்கள் நடத்தியும் மனுக்களைப் பெற்றார். அந்த மனுக்கள் அனைத்தும் அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை செய்யப்பட்டு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை ஓட்டபிடாரத்தில் ரேசன்கார்டுகள் மற்றும் முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
தனித் துணை ஆட்சியர் லதா, தாசில்தார் மணி, துணை தாசில்தார் ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாமணி, சமூக நலத்திட்ட தாசில்தார் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட விதவைகள், முதியோர், ஊனமுற்றோருக்கான தமிழக அரசின் உதவித் தொகைக்கு உத்தரவு வழங்கப்பட்டது. மொத்தம் 271 நபர்களுக்கு இந்த உதவிக் தொகையினை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் வழங்கினார். மேலும் 70 நபர்களுக்கு ரேசன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டது. முப்பத்தி இரண்டு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் மதிப்பிலான தேசிய ஊனமுற்றோர் உதவித் தொகை, ஆதரவற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கான விதவைகள் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது.






வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்- டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ஆதரவு

 


பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கயல்விழி,வடிவம்பாள்,சுஜாதா ஆகியோர் கோயம்பேடு அருகே தனியார் கட்டிடத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  






சனி, 27 ஆகஸ்ட், 2011

ராஜீவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை தேதி குறிப்பு.சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: டாக்டர் கிருஷ்ணசாமி

ராஜீவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை தேதி குறிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று வேலூர் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இது குறித்த அதிகாரபூர்வ தகவல் தமக்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்பதூரில் விடுதலைப் புலி தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகிய நால்வருக்கும் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
பின்னர், காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு அவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவர்களை தூக்கிலிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் புகழேந்தி, இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தூக்கு தண்டனையை நிறுத்துவார் என்று அந்த மூவரும் நம்பியிருந்ததாகத் தெரிவித்தார்.
வெள்ளிக் கிழமையன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் குறித்து அந்த மூவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு தான் அவர்களை சந்தித்த போது அம் மூவரும் நம்பிக்கையுடன் காணப்பட்டதாகவும் புகழேந்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதேநேரம் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எடுத்த முயற்சிகளுக்கும் பயன்கிட்டவில்லை. இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபையில் கூறிய கருத்துக்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
பிறகு தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தப் விடயத்தை முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்த சமயத்தில் மூன்று முறை தான் எழுப்ப முயன்றதாகவும், ஆனால் தனக்கு ஆதரவாக எந்த ஒரு உறுப்பினரும் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

தூக்கு தண்டனை பற்றி பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்: டாக்டர் கிருஷ்ணசாமி

 

சட்டசபையில் இன்று (26.08.2011) புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் ஜெயக்குமார், இந்த பிரச்சினை குறித்து பின்னர் எனது அறையில் வந்து பேசுங்கள். தற்போது பேச அனுமதி இல்லை என்றார். கிருஷ்ணசாமியின் பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அறிவித்தார்.
 இதையடுத்து அவர் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே பிரச்சினை குறித்து பேச முயற்சி செய்தார். அதற்கும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணசாமி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
 
அவையில் இருந்து வெளியேறிய பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 
 
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது.
 
தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே இரண்டுமுறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சீவலப்பேரியில் ரூ.250 கோடி செலவில் அணை கட்ட தமிழக அரசிடம் வலியுறுத்துவேன்.டாக்டர்.க.கிருஷ்ணசாமி

தூத்துக்குடி : தூத்துக்குடி, கருங்குளம் மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் பயன்பெறும் வகையில் சீவலப்பேரியில் 250 கோடி ரூபாய் செலவில் அணை கட்ட தமிழக அரசை வலியுறுத்துவேன் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ., தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது; ஒட்டபிடாரம் சட்டசபை தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவு பாங்க் உள்ளிட்ட 10 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 1500 விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானிய விலையில் கொடுக்கப்படும் உரம், விதை, பவர் டில்லர், டிராக்டர், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டவைகளை சரியான முறையில் சென்று வழங்கப்படவில்லை என்று கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். இதுபோன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என்றும், அரசின் நலத்திட்டங்கள் உரிய முறையில் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு பாங்குகளில் பயிர்கடன் சரிவர கொடுக்கவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய கூட்டுறவு பாங்க், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு பயிர்கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டபிடாரம் தொகுதியில் நீர்மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கோரம்பள்ளம், பேய்குளம், பெட்டைகுளம், ஆறுமுகமங்கலம், தருவைகுளம் ஆகியவற்றில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம். கோரம்பள்ளம் மற்றும் பெட்டைகுளம் ஆகிய குளங்கள் தூர்வாரப்பட்டு இருகரைகளும் செம்மைப்படுத்தப்பட்டால் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும், தூத்துக்குடி மாநகர் உட்பட 300 கிராமங்களுக்கு எல்லா நாட்களிலும் குடிநீர் கிடைக்கும், சுற்றுலாத்தலமாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 62 கோடி ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். 20 எம்ஜிடி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால், இனிமேல் வடகால் வாய்காலில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. வடகாலில் இருந்து இனிமேல் தண்ணீர் எடுக்கபடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர், விவசாய பணிகளைவிட தொழிற்சாலைகளுக்கு தான் அதிக அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் தொழிற்சாலைகளில் கடல்நீரை சுத்திகரித்து தண்ணீர் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு கடல் நீரில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கபட வேண்டும் என்ற உத்திரவாதத்திற்கு பின்னரே அனுமதி அளிக்க வேண்டும். மேலமருதூரில் உள்ள ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையத்தினர் மிகப்பெரிய ஓடை, சுடுகாடு, வழிபாட்டு தலங்கள், அனந்தமாடன்பச்சேரி என்ற கிராமத்திற்கு செல்லகூடிய பாதை போன்றவற்றை ஆக்ரமித்துள்ளனர். இதுபோன்ற தொ ழிற்சாலைகளால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21வது பிரிவில் கூறப்பட்டுள்ள நல்ல தண்ணீர், நல்ல காற்று, இருப்பிட வசதி போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை உப்பாற்று ஓடையில் மிகப்பெரிய அள வில் ஆக்ரமிப்புகள் நடந்து வருகிறது. இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். தூத்துக்குடி, கருங்குளம், ஒட்டபிடாரம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் பயன்பெறும் வகையில் 250 கோடி ரூபாய் செலவில் சிவலப்பேரியில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒரு அணை கட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்த உள்ளேன் என்றார். அப்போது புதிய தமிழகம் கட்சியின் மாவ ட்ட செயலாளர் கனகராஜ், தூத்துக்குடி ஒன்றிய அதிமுக., விவசாய அஅணிச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியல்




அண்மையில் பிரதமரே வியந்து போனார் எனும் அடைமொழியோடு கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்ப சொத்துப் பட்டியல் என்று ஒன்று வெளியாகி உலாவந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கருப்புப் பண பட்டியல் என்று அசாஞ்சே ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறார். பட்டியல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் ……. ?

உழைத்த களைப்பும் வெளியேறிய வியர்வையும் ஒரு தேநீர் வேண்டும் என்று தொண்டையில் போராட்டம் நடத்த அனிச்சைச் செயலாய் சட்டைப்பையை தடவிப்பார்த்துவிட்டு எச்சில் விழுங்கி சமாதானமடையும் எண்பது கோடிப்பேர் உலவும் இந்நாட்டில், இவர்களை மனிதர்கள் என்றா கூறமுடியும்?

இது “தி அதர் சைட்” எனும் மாத இதழ் வெளியிட்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியல்
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.
21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இலங்கைத் துணைத்தூதுவர் அலுவலகத்தை உடனே மூடு! –டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் , பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:இலங்கையில் நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக .நா. பேரவையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. .நா. விதிகளின்படியும் சர்வதேச சட்டங்களின்படியும் அமைக்கப்பட்ட இந்தக் குழுவை ஏற்க முடியாது என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் அறிவித்தார். மற்றொரு அமைச்சரான விமல் வீரவன்சா தலைமையில் சிங்கள வெறியர்கள் கொழும்பில் உள்ள .நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தாக்கியுள்ளனர். .நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனின் உருவப்பொம்மையை எரித்தும் அவர் படத்தை செருப்பாலடித்தும் அவமானப்படுத்தியுள்ளனர்.இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக இருந்த சர்வதேச சங்கத்தை இப்படித்தான் ஹிட்லர் அவமதித்தார். இன்று நவீன ஹிட்லராக விளங்கும் இராசபக்சே .நா. பேரவையை அவமதித்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே அவமதித்திருக்கிறார். அவரின் இந்தச் செயலை அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் மெளனம் சாதிக்கிறது.எனவே இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களைக் கொன்று குவித்து இன்னும் பல இலட்சம் தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்தும் கொடுமை செய்வதை .நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகிவிடும் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படநேரும் என்ற அச்சத்தில் இராசபக்சே எல்லை மீறி கொக்கரிக்கிறார்.மேலும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையிலும் இந்திய அரசு செயலற்று இருக்கிறது. எனவே சிங்கள அரசுக்கு தமிழக மக்களின் கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற சூலை 14ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெறும்இப்போராட்டத்தில் .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் . நடராசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி, பெரியார் தி.. தலைவர் கொளத்தூர் மணி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பெ. மணியரசன், தியாகு, மெல்கியோர், இராசேந்திர சோழன், பூ. துரையரசன், பசுபதி பாண்டியன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.நமது கொதிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துத் தமிழர்களும் திரண்டு வரும்படி வேண்டிக்கொள்கிறேன்.

வேட்டி-சேலை-சீருடை! அமைச்சருக்கு எதிராக உமாசங்கர் ஐ.ஏ.எஸ். கிளப்பும் ஊழல் பூதம்!

 


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

தி.மு.க.வின் போராட்டம் ஏமாற்று நாடகம்: டாக்டர் கிருஷ்ணசாமி

 



சென்னை, பிப். 16: மீனவர்கள் பிரச்னைக்காக தி.மு.க. நடத்தும் போராட்டம், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஏமாற்று நாடகம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.
 இது பற்றி அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசில் தொடர்ச்சியாக அங்கம் வகிக்கும் தி.மு.க., மிகுந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளது. தி.மு.க.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால், மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருக்க முடியும்; நமது மீனவர்கள் மீதான தாக்குதலையும் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
 ஆனால், தி.மு.க. அதைச் செய்யத் தவறிவிட்டது. இப்போது, தி.மு.க. வேறு; மத்திய அரசு வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக போராட்டம் என்ற பெயரில் தி.மு.க. நாடகம் நடத்துகிறது. எனினும், இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
 தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ள குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டியது அவசியம். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் அனைத்து சக்திகளும் தி.மு.க.வுக்கு எதிராக ஓரணியில் திரள
 வேண்டும்.
 அ.தி.மு.க. அணியில் எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பற்றியும், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவதா ஆகியவை குறித்தும் விவாதித்து,முடிவெடுக்க சென்னையில் இம்மாதம் 19-ம் தேதி கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி...

 



ஜீலை 29 தமிழகத்தின் ஜீவநதிகளாக இருந்த வைகை, பாலாறு, தென்பென்னை வறண்டுபோனது காவிரி, தாமிரபரணி போன்ற நதிகள் நீர் ஆதரமின்றி பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டின் நீர்நிலைகள் சுருங்கி வருகின்ற காரணத்தால் விவசாயம் குறைந்து வருகின்றது அடுத்த பத்தாண்டுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது, வட மாநிலங்களான உ.பி, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பெரிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஆவதும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது இதை தவிர்க்கும் பொருட்டு கங்கை காவிரி இணைப்பு திட்ட்த்தை நிறைவேற்ற கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர், ஆனால் வடக்கிலிருந்து கங்கை காவிரியை இணைக்க பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால் சிறுசிறு நதிகளை இணைத்து கங்கை காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. தென்மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு காவிரி, அக்னியாறு, தெற்குவெள்ளாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, குண்டாறு மற்றும் வைகைஆறுகளை இணைத்தும், வைப்பாறு மற்றும் மலட்டாறு போன்றவைகளை இணைப்பதன்மூலமும் தென் தமிழகம் நீர் ஆதரங்களில் மேம்பட்டு விவசாயிகள் பயன்பெறுவர் என்பதை நேற்று தமிழக முதல்வரை சந்திக்கும் போது வலியுறுத்தினேன். நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை இதன்காரணமாக உலகவெப்பமயமாதலால் நிலத்தடி நீர் வறண்டு போகின்றது நிலங்கள் அனைத்தும் தொழிற்மயமாகின்ற காரணத்தால் அதிலிருந்து வெளிவரும் புகை, வாயு காரணமாக காற்று மாசுபடாமல் தடுக்கும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆகஸ்டு 15ம் தேதி புதியதமிழகம் மற்றும் பிறந்தமண் அறக்கட்டளையின் சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து ஒன்றிய அளவில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நட்த்தப்படும். இலங்கை இனப்பிரச்சனை என்பது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை ஆகும். அண்மையில் தெற்கு சூடான் இன அடிப்படையில் தனி நாடானது இதற்காக பொதுவாக்கெடுப்பு நட்த்தப்பட்ட்து அது போல இலங்கை தமிழர் பிரச்சனையிலும் பொதுவாக்கெடுப்பு நட்த்தப்பட வேண்டும். இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியாகும் சானல்4 தொலைக்காட்சி செய்தியை வைத்து அமெரிக்கா பொருளாதார தடை விதித்த்து. அமெரிக்கா தனது தோழமை நாடுகளையும் பொருளாதார தடை விதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக்கெடுப்பு முன்பாக ராஜபக்சே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க ஐநா மற்றும் உலக நாடுகளை அமெரிக்கா வலியுத்த வேண்டும். 10,000 மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்து நாடு இலங்கை தமிழர் பிரச்சனையில் இரக்கம் காட்டுகிறது பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது, ஆனால் இந்திய அரசு மட்டும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. இலங்கை ராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிப்பதும், தளவாடங்கள் கொடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல இது கண்டனத்துக்கு உரியதும் ஆகும். 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களிடம் பறிக்கப்பட்ட விவசாய நிலங்களை இந்த அரசு மீட்டெடுப்பது பாராட்டுக்குறியது எனினும் பண்ணாட்டுக் கம்பெனிகளால் போலிப்பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது மேலமருதூர், சில்லாங்குளம், இளவேலங்கால், தருவைக்குளம் போன்ற ஊர்களில் போலிப்பத்திரம் மூலம் இந்து பாரத், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி கம்பெனிகளின் மூலம் விவசாய நிலங்கள் இந்து கோவில்கள், மாயானங்கள், குளங்கள், நடைபாதைகள் போன்றவற்றை அபகரித்து வைத்துள்ளனர். இதைபற்றி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். பேட்டியின் போது மாநிலஅமைப்புச்செயலாளர் வே.க.அய்யர், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு ஆ.ராமசாமி அவர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் கிறிஸ்டோபர், மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மதுரம், ஆகியோர் உடனிருந்தனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக தேவேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

திருவாரூர் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் உ‌ள்பட 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தம‌ிழக அரசு அ‌திரடியாக இடமாற்றம் செய்து‌ள்ளது.
சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக இரு‌ந்த தங்க கலியபெருமாள் மாற்றப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவேந்திரர் இத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்பட்டடோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலராக இரு‌ந்த டி.என்.ராமநாதன் மாற்றப்பட்டு, சுரங்கம் மற்றும் புவியியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டு‌ள்ளா‌ர்.
கால்நடை பராமரிப்பு துறை ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல செயலாளராக மாற்றப்பட்டு‌ள்ளா‌ர்.
தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவன நிர்வாக இயக்குனராக இரு‌ந்த எம்.ஆர்.மோகன் மாற்றப்பட்டு கால்நடை பராமரிப்புதுறை ஆணையராக நியமிக்கப்பட்டு‌ள்ளா‌ர்.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணைய‌ர், முதன்மை செயலராக இரு‌ந்த ரமேஷ்குமார், கன்னா எரி சக்தி துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
திருவாரூர் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவராக இரு‌ந்த எம்.சந்திரசேகரன் மாற்றப்பட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு‌ள்ளா‌ர்.
தகவல், மக்கள் தொடர்புதுறை இயக்குனராக இரு‌ந்த கே.பாஸ்கரன் மாற்றப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆ‌ட்‌சியராக நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முதன்மை செயலராக இரு‌ந்த விஸ்வநாத் ஏ.ஷெகாங்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு‌ள்ளா‌ர்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழக நிர்வாக இயக்குனராக இரு‌ந்த ருயோல் குமிலியன் புஹ்ரில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக திட்ட இயக்குனர், முதன்மை செயலராக நியமிக்கப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக ஆணையராக இரு‌ந்த அதுல் ஆனந்த், வேளாண்மைத்துறை ஆணையராக மாற்றப்பட்டு‌ள்ளா‌ர்.
எழுது பொருள் மற்றும் அச்சகத்துறை இயக்குனராக இரு‌ந்த டி.விவேகானந்தன், வேளாண்மை மார்க்கெட்டிங் மற்றும் வேளாண்மை வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டடு‌ள்ளா‌ர் எ‌ன்று த‌‌மிழக அர‌சி‌ன் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.