எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 27 பிப்ரவரி, 2014

அதிமுக ஆட்சி சமூகநீதிக்கு எதிரானது சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது பேரா.ஜவஹிருல்லா, டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி .


 அ.தி. மு.க. ஆட்சி சமூக நீதிக் கொள்கைகளுக்கு எதிரா கவும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு எதிராக - சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதால்ஆளுநர் உரையைப் புறக்கணித்து பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்ததாக மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் முனைவர் ஜவா ஹிருல்லா, புதியதமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் குறிப் பிட்டனர்.
நேற்று (30.1.2014) ஆளு நர் உரையைப் புறக்க ணித்துவெளிநடப்புச் செய்த மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் ஜவஹிருல்லா செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
இன்று சட்டப் பேர வையில்ஆளுநர் உரையாற்றத் தொடங்கும் போது, மனிதநேய மக்கள் கட்சி சில கருத்துக்களைச் சொல்ல முற்பட்டது. அதாவது முஸ்லிம்க ளுக்கு இடஒதுக்கீடு அதிகரித்துத் தரப்படும் என சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பும் ஆட்சிக்கு வந்தபிறகும் முதலமைச்சர் ஜெயலலிதா எங்களுக்கு வாக்குறுதி தந்தார். ஆட் சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகப் போகி றது. ஆனால் சொன்ன வாறு அவர்கள் வாக்குறு தியை நிறைவேற்றவில்லை.
2009 திருமணச் சட் டத்தில் திருத்தம் கேட் டோம். அதையும் அவர் கள் செய்யவில்லை. அவைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கிப் பேரணி நடத்தினோம். காவல் துறையை வைத்து பலகெடுபிடிகள் செய்தும் லட்சக்கணக்கில் முஸ்லிம் கள் திரண்டனர்.
மேலும் புதிதாக உரு வாக்கப்படும் பல்நோக்கு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் நியமிப்ப தில் சமூக நீதிக்கு எதிராக இடஒதுக்கீட்டு முறையை கடைப்பிடிக்க மாட் டோம் என ஆட்சியாளர் கள் செயல்படுகிறார்கள்.
அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோ ருக்கான சலுகைகளை மறுப்பதையும் கண்டிக் கின்ற வகையில் நாங்கள் பேரவையைப் புறக்க ணித்து வெளிநடப்புச் செய்துள்ளோம்.
இவ்வாறு ஜவாஹி ருல்லா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று (31.1.2014) ஆளுநர் உரை யைப் புறக்கணித்து பேர வையிலிருந்து வெளி நடப்புச் செய்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு தொடக் கத்தில்பேரவையில் ஆளு நர் உரையை புதியதமிழ கம் கட்சி புறக்கணித்து வெளிநடப்புச் செய்து உள்ளது.
காரணம், சட்ட மன்றத்தில் அறிவிக்க வேண்டியவற்றை யெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் அறிக்கையாக வெளி யிட்டு சட்டமன்றத்தின் மரபை உதாசினப் படுத்தி வருவது ஜனநாயகத்திற்கு முரணானது.
அதுமட்டுமின்றி, ஓமந்தூரார் தோட்டத் தில் உள்ள புதிய தலை மைச் செயலகத்தை மருத் துவமனையாக மாற்றுவ தாக அறிவித்தார்கள். அங் குமருத்துவப் பேராசிரி யர் பணியிடங்கள் நிய மனத்தில் இடஒதுக்கீட்டு முறையை முழுமையாகப் புறக்கணித்துவிட்டார்கள்.
தமிழகத்தில்கடும் வறட்சியினால் தொழிலா ளர்கள் இந்த ஆட்சியில் எந்த நன்மையும் பெற முடியாமல் தவிக்கின்ற னர். தொழிலதிபர்கள் இந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு  செல் லும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனை அரசுக்கு உணர்த்தும் வகையில் பேர வையைப் புறக்கணித்துள் ளோம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.


எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜெ.செயல்பட்டதால் வந்த சிக்கல் இது- டாக்டர் கிருஷ்ணசாமி ..

 எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டதால்தான் இப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்கள் காலதாமதம் ஆனாலும் கூட, எல்லா விதமான சட்ட விதிமுறைகளையும் ஆலோசித்து மத்திய அரசின் இணக்கத்தோடு நடவடிக்கை எடுத்திருந்தால், இது நிச்சயமாக வெற்றிகரமாக இருந்திருக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நடவடிக்கையின் விளைவாக தற்போது மீண்டும் அவர்கள் 3 பேரின் விடுதலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுபொறுப்பையும் தமிழக முதல்வரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜெ.செயல்பட்டதால் வந்த சிக்கல் இது- டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் இல்லத்தில் IUML தலைவர் திரு .காதர் மொய்தின் அவர்கள் சந்திப்பு...

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாட்டில் கிருஷ்ணசாமி பேச்சு..

திருச்சி: தி.மு.க கூட்டணிக்கு யாராவது வந்தால் அவர்களுக்குத்தான் லாபமே தவிர எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
 
திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திமுக 10வது மாநில மாநாட்டில் கூட்டணி கட்சித் தலைவர் என்கிற முறையில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய  கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ, "கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்திற்குள் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது?
பெரும்பாலும் ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள்.வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. ஆனால் எங்களுக்கும்  மனிதநேய மக்கள் கட்சிக்கும் அந்த சூழல் வந்துவிட்டது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு எடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் எந்தவித உள்நோக்கமும், சுயநலமும் இல்லை.

தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக பேச வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துத்தான் அதிமுக கூட்டணிக்கு சென்றோம். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் உள்ளே நுழைந்தாலே வெளியேற்றப்படுகிறார்கள். நாங்கள் பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. நாங்கள் அவை மரபை மீறியதில்லை. ஆனாலும் எங்களுக்கு  சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு கூட்டணி வைத்து என்ன பலன். இனிமேல் திமுக கூட்டணிக்கு யாராவது வந்தால் அவர்களுக்குத்தான் லாபமே தவிர, நமக்கொன்றும் எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடப்போவது கிடையாது" என்றார்.

திமுக கூட்டணிக்கு வந்தாலே லாபம்தான்- டாக்டர் கிருஷ்ணசாமி

திருச்சி: திமுக கூட்டணியில் யார் வந்து சேர்ந்தாலும், லாபம் வந்து சேருகிறவர்களுக்குத்தான் என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. திருச்சி திமுக மாநில மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையில்தான் இப்படிக் கூறினார். மாநாட்டில் அவர் பேசுகையில், மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்திற்குள் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது? பெரும்பாலும் ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. ஆனால் எங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கும் அந்த சூழல் வந்துவிட்டது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு எடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறோம் என்று சொன்னால் எந்தவித உள்நோக்கமும், சுயநலமும் இல்லை. தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக பேச வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்துத்தான் அதிமுக கூட்டணிக்கு சென்றோம். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் உள்ளே நுழைந்தாலே வெளியேற்றப்படுகிறார்கள். நாங்கள் பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. நாங்கள் அவை மரபை மீறியதில்லை. ஆனாலும் எங்களுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு கூட்டணி வைத்து என்ன பலன். இனிமேல் திமுக கூட்டணிக்கு யாராவது வந்தால் அவர்களுக்குத்தான் லாபமே தவிர, நமக்கொன்றும் எந்தவிதக் குறைவும் ஏற்பட்டுவிடப்போவது கிடையாது என்றார் அவர்.

புதன், 12 பிப்ரவரி, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத தளர்வு போதாது புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..



சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இது போதாது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு என தனித்தனியாக மதிப்பெண் தளர்வு கொடுக்க வேண்டும்.
மழையின்றியும், வேறு வழியில்லாமலும் பால் உற்பத்தியாளர்கள் பாலின் விலையை உயர்த்தியுள்ளனர். அவர்களின் நிலையினை புரிந்தும், நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் நேற்றுமுன்தினம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடையவர்கள் பேசியதாக கூறப்படும் உரையாடல் பதிவுகளை வெளியிட்டார். இதில் உண்மைத்தன்மை இல்லை. முறையாக இதனை நீதிமன்றத்தில்தான் சமர்ப்பித்து இருக்க வேண்டும். எனவே பிரசாந்த் பூஷன் மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ராஜேந்திர பிரசாத், பகுதி செயலாளர்கள் செல்வகுமார், தில்குமார் ஆகியோர் உடன் இருந்தார்.

சமூக நீதி போராளிக்கு நன்றி! நன்றி!! நன்றி!!

தென்காசியில் புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம்



தென்காசியில் புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
ஆலோசனை கூட்டம்
புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் உள்ள கிளைகளுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா, ஆலோசனை கூட்டம் ஆகியவை தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் நடைபெற்றது. கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் அரவிந்த் ராஜா, சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராம்ராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் மதுரம் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. அணிக்கு ஆதரவு
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். எனவே இப்போதே கூட்டணி கட்சியினருடன் அறிமுகமாகி நன்கு பழகிக்கொள்ளுங்கள். தென்காசி தொகுதியில் இருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றவர்களால், இந்த தொகுதிக்கு இதுவரை எந்த வளர்ச்சியும் கிடைக்கவில்லை. இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
புதிய தமிழகம் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள். சுவர்களில் விளம்பரம் எழுத இடம் பிடித்துக் கொள்ளுங்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தீவிரமாக தேர்தல் பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட துணை செயலாளர் இன்பராஜ், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா, தென்காசி தொகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் முகம்மது கனிப், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தென்காசி ஒன்றிய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

தென்காசி தொகுதியில் தேர்தல் பணி - புதிய தமிழகம்





பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் முன்பே தென்காசி தொகுதியில் தேர்தல் பணியை புதிய தமிழகம் கட்சியினர் தொடங்கி விட்டனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார பூர்வமாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்படவில்லை.

தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பாராட்டு விழா கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:–

நம் கட்சியினர் கூட்டணி கட்சியினரோடு இப்போதே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை இந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களால் இந்த தொகுதிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர்.

எனவே, புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என அனைத்து தரப்பினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிளை செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் உடனடியாக வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும் என்றார்.

கூட்டத்துக்கு மாவட்ட செயலர் அரவிந்தராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலர் பாஸ்கர் மதுரம், கிழக்கு மாவட்ட செயலர் சுப்பிரமணியன், மாநகர மாவட்ட செயலர் செல்லப்பா, இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி ஒன்றிய செயலர் சந்திரன் நன்றி கூறினார்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சட்டசபை கூட்டம்: புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி புறக்கணிப்பு!

சட்டசபை கூட்டம்: புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி புறக்கணிப்பு!


தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தை புதிய தமிழகம் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் புறக்கணித்துள்ளது.

இதுகுறித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. கூறும்போது, ''நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் முஸ்லீம் சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம், செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது உள்பட பல்வேறு பிரச்னைகளை பேசலாம் என்றிருந்தோம். ஆனால், சட்டசபையில் பொதுமக்கள் பிரச்னைகளை பற்றி பேச போதிய அவகாசம் தருவதில்லை.

இதற்கு முன்பு நான் 12 நிமிடம் தான் பேசியிருப்பேன். ஆனால், நான் 28 நிமிடம் பேசிவிட்டதாகவும், இனிமேல் பேச நேரம் ஒதுக்க முடியாது என்றும் கூறி பேச அனுமதி மறுத்து விட்டனர். அமைச்சர்கள் குறுக்கீடு அதிகம் இருப்பதால் எங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை.

முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பிரச்னை, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு என பல்வேறு விசயங்கள் குறித்து முழுமையாக விவாதிக்க முடியாததால் இன்று சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளோம்'' என்றார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறும்போது, ''‘‘கவர்னர் உரையின் மீது ஆளுங்கட்சி உறுப்பினர் பேசும் போது, சம்பந்தமில்லாமல் அவையில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார். இதற்கு பதில் கூற தி.மு.க. முற்பட்டபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் ஏற்கனவே அவையை புறக்கணித்துள்ளனர். இதேபோல் தே.மு.தி.க.வும் அவையை புறக்கணித்துள்ளது.

சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேச மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எங்களால் மக்கள் பிரச்னைகளை பற்றி முழுமையாக பேச முடியவில்லை. நாங்கள் எதுவும் பேசினால் உடனே அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். ஒரு ஆரோக்கிய விவாதமாக பேச முடியவில்லை. எனவே புதிய தமிழகம் கட்சி இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளது'' என்றார்.

சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு!






சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தொழில் முதலீட்டாளர்கள் மீது தமிழக அரசு அக்கறை செலுத்தவில்லை என புகார் தெரிவித்தார்.

இந்த புகாருக்கு அமைச்சர் உரிய விளக்கம் தராததால் வெளிநடப்பு செய்ததாக கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரை தி.மு.க., தே.மு.தி.க புறக்கணித்துள்ள நிலையில், கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்துள்ளார்.

மேலும், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை கூட்டம்: புதிய தமிழகம்–மனித நேய மக்கள் கட்சி புறக்கணிப்பு..



சட்டசபை கூட்டம்: புதிய தமிழகம்–மனித நேய மக்கள் கட்சி புறக்கணிப்பு

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. புறக்கணித்து சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வில்லை என்று தெரிவித்தார்.
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–
சட்டசபையில் பொது மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச போதிய அவகாசம் தருவதில்லை. நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் முஸ்லிம் சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம், செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது உள்பட பல்வேறு பிரச்சினைகளை பேசலாம் என்றிருந்தோம்.
ஆனால் இதற்கு முன்பு நான் பேசும் போது, 28 நிமிடம் பேசிவிட்டதாகவும், மேற்கொண்டு பேச நேரம் ஒதுக்க முடியாது என்றும் கூறி மேலும் பேச அனுமதி மறுக்கப்பட்டது.
நான் 12 நிமிடம் தான் பேசியிருப்பேன். அமைச்சர்கள் குறுக்கீடு அதிகம் இருப்பதால் எங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை.
முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பிரச்சினை ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு என பல்வேறு விசயங்கள் பற்றி முழுமையாக விவாதிக்க முடியாததால் இன்று சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளோம்.
இதே போல் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:–
‘‘கவர்னர் உரையின் மீது ஆளுங்கட்சி உறுப்பினர் பேசும் போது, சம்பந்த மில்லாமல் அவையில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார். இதற்கு பதில் கூற தி.மு.க. முற்பட்ட போது ஏற்கனவே அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் ஏற்கனவே அவையை புறக்கணித்துள்ளனர். இதே போல் தே.மு.தி.க.வும் அவையை புறக்கணித்திருக்கிறார்கள். சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளை பேச மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
ஆனால் எங்களால் மக்கள் பிரச்சினைகளை பற்றி முழுமையாக பேச முடியவில்லை. நாங்கள் எதுவும் பேசினால் உடனே அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். ஒரு ஆரோக்கிய விவாதமாக பேச முடியவில்லை.
எனவே புதிய தமிழகம் கட்சியும் இன்றைய சட்ட சபை நிகழ்ச்சிகளை புறக் கணித்துள்ளது.

சட்டசபை கூட்டம்: மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் புறக்கணிப்பு 3–வது நாளாக தே.மு.தி.க பங்கேற்கவில்லை ...

சட்டசபை கூட்டத்தை நேற்று மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும் புறக்கணித்தது. புறக்கணிப்பு தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம் தொகுதி உறுப்பினர் ஜவஹிருல்லா சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறும்போது, ‘சட்டசபையில் பொதுமக்கள் பிரச்சினைகளை பற்றி பேச போதிய கால அவகாசம் தருவதில்லை. முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பிரச்சினை, ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு என பல்வேறு விஷயங்கள் பற்றி முழுமையாக விவாதிக்க முடியாததால் சட்டமன்ற கூட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கிறது’ என்றார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் (ஒட்டப்பிடாரம் தொகுதி) டாக்டர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘கவர்னர் உரையின் மீது ஆளுங்கட்சி உறுப்பினர் பேசும்போது, சம்பந்தமில்லாமல் சபையில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார். நாங்கள் எதுவும் பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுகிறார்கள். எனவே புதிய தமிழகம் கட்சி இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கிறது.’ என்றார். கூட்டத்தொடரில் முதல் நாள் மட்டும் பங்கேற்ற தே.மு.தி.க. உறுப்பினர்கள் தொடர்ந்து 3–வது நாளாக நேற்று (கடைசிநாள்) புறக்கணித்தனர்.சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியதுபோன்று, நேற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வரவில்லை.

சனி, 1 பிப்ரவரி, 2014

பேச அனுமதி மறுப்பு: புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி பேரவையில் இருந்து வெளிநடப்பு.


 

புதிய தமிழகம் கட்சி எம்எல்ஏ டாக்டர் கிருஷ்ணசாமி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து சட்டமன்றத்தில் பேச முயன்றார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, அவர் வெளிநடப்பு செய்தார்.
சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

பேரவையில் இருந்து புதிய தமிழகம் வெளிநடப்பு ..

சட்டப் பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தார். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேரவையில் இருந்து வெளியேறினார்.
இதன்பிறகு பேசிய கிருஷ்ணசாமி, அவையில் மரபுகளுக்கு மாறாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் அவையில் இல்லாத ஒருவரைப் பற்றி மிகவும் தரக்குறைவாகப் பேசினார் அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தேன் என்றார்.

824 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவி வள்ளியம்மாள் ரவி தலைமை தாங்கினார். தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் வெள்ளத்தாய் வரவேற்று பேசினார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., 824 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார்.
மாவட்ட செயலாளர் கனகராஜ், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் அரவிந்தராஜா, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் செல்லப்பா, மாவட்ட பொருளாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், ராமசுப்பு, ராமச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை தாசில்தார் (சிறப்பு செயலாக்க திட்டம்) விமலா நன்றி கூறினார்.

ஆளுநர் உரையைப் புறக்கணித்து புதிய தமிழகம் கட்சி வெளிநடப்பு!

இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சட்டசபையிலிருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி "தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு வழங்காதது, தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்படக்கூடிய உயர் சிகிச்சை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனஙளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்காதது, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவி இருக்கக்கூடிய கடுமையான வறட்சி, குடிநீர் பஞ்சம், தமிழகத்திலே இருந்து பெரும்பெரும் தொழிலதிபர்கள் இந்த மாநிலத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயருவது ஆகியன குறித்து எந்த விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசைக் கண்டித்து இன்று புதிய தமிழகம் கட்சி சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறது" என்று கூறினார்.

விளக்கம் தராத அமைச்சர்கள்... டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு ...

விளக்கம் தராத அமைச்சர்கள்... டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்புசென்னை: தனது புகாருக்கு அமைச்சர்கள் விளக்கம் தரவில்லை என்று கூறி சட்டசபையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். அப்போது அவர், முதலீட்டாளர்கள் மீது தமிழக அரசு அக்கறை காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் இதுதொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சரின் விளக்கத்தையும் கோரினார். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வேண்டும் என்றும் அவர் கோரினார். அதற்கு கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம் அளித்தார். பின்னர் எழுந்த கிருஷ்ணசாமி, இந்த பதிலில் திருப்தி இல்லை என்று கூறி மீண்டும் பேச முயன்றார். இதற்கு அனுமதி கிடைக்காததால் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். அதேபோல மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். ஏற்கனவே திமுக தொடரைப் புறக்கணித்து விட்டது. தேமுதிகவும் புறக்கணித்து விட்டது. டாக்டர் கிருஷ்ணசாமியும் தொடர்ந்து வெளிநடப்புச் செய்து வருகிறார். மனித நேய மக்கள் கட்சியும் வெளிநடப்புச் செய்து வருகிறது. இதில் தேமுதிகவைத் தவிர மற்ற கட்சிகள் இரண்டுமே திமுக கூட்டணிக்கு சமீபத்தில் வந்தவை என்பது நினைவிருக்கலாம்.