எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி ஆஜர்..

புதுடெல்லி: இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தி்ல் இன்று ஆஜரானார்.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து கடந்த 2009ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை தூதரகம் தாக்கப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணசாமி உள்பட 11 பேர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கிருஷ்ணசாமி உள்பட 11 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, வழக்கில் ஆஜராகாததால் கிருஷ்ணசாமிக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவராண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி இன்று ஆஜரானார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள்..உறுப்பினர் படிவம்..

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு வருகை புரிந்த ஆனைத்து உறவுகலுக்கும் நன்றி !

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் குழு கூட்டம்..

திருச்சி, : திருச்சியில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. கார்த்திக் மல்லர் தலைமை வகித்தார். சிவக்குமார், புதிய தமிழகம் வினித் முன்னிலை வகித்தனர். தமிழ்வேந்தன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் வே.க.அய்யர், மாநில துணை அமைப்பு செயலாளர்கள் பலராமன், துறைமுகம் கண்ணன், தொண்டரணி செயலாளர் லட்சுமண பாண்டியன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் குழு துவங்க அனுமதி அளித்த நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு நன்றி தெரிவிப்பது. தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்து புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் தொடர் பிரசாரம் செய்வது. இணையதள குழு நண்பர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது. புதிய தமிழகம் கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள், சாதனைகள், டாக்டர் கிருஷ்ணசாமியின் சட்டமன்ற உரைகள், அறிக்கைகள், பேட்டிகளை மக்களிடம் எடுத்து செல்வது. கிராமங்கள் தோறும் மக்கள் பிரச்னைகளை கண்டறிந்து போராடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வினோத் மிஸ்ரா, கப்பிகுளம் பிராபகர், பாபு, ஜான் கிறிஸ்டோபர், நெல்லை ராமகிருஷ்ணன், பிரகாஷ், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இசக்கிபாண்டி துவாரகா நன்றி கூறினார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை கண்டித்து புதிய தமிழகம் ஆா்ப்பாட்டம் ..

தமிழக சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் தடுத்தும் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை அவமதிக்கும் தமிழக அரசையும் சபாநாயகர் தனபாலை கண்டித்து இன்று 18-08-14 கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மாநில தொண்டரணி செயலாளர் பூவாணி லட்சுமணப்பாண்டியன் தலைமை வகித்தார்.ஒன்றி செயலாளர் அன்புராஜ்,கயத்தார் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

திருச்சி 17:-புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்டம் செவனா ஹோட்டலில் 17-08-14 அன்று நடந்தது.கார்த்திக் மள்ளர் தலைமை தாங்கினார்.திருச்சி வினித் முன்னிலை வகித்தார்.நெல்லை ராமகிருஷ்ணன் வரவேற்றார்.கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் வி.கே.அய்யர்,மாநில துணை அமைப்புச் செயலாளர் பலராமன்,மாநில தொண்டரணி செயலாளர் பூவாணி லெட்சுமணப்பாண்டியன்,திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன்,திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மற்றும் புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்படன

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு.

புதிய தமிழகம் திருச்சி மாவட்ட செயலாளா் மீது வழக்கு...?

இலங்கையில் நடைபெற உள்ள இலங்கை ராணுவம் நடத்தக்கூடிய கருத்தரங்கில் இந்திய பிரதிநிதிகள் கலந்துகொள்ளகூடாது என்பது உட்பட தமிழ்நாட்டில் நிலவும் குடிநீா் பஞ்சம் வறட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு சீா்குலைவு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை, இடஒதுக்கீடு பிரச்சணைகள் ஆகிய சமூக பிரச்சனைகள் குறித்து எதிா் கட்சி உறுப்பினா்களுக்கு குறிப்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் சட்டமன்ற உறுப்பினா் டாக்டா் ஐயா அவா்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச அனுமதி தராமல் மேற்க்கண்ட சமூக பிரச்சணைகளை மூடி மறைக்க அதிமுக அரசுக்கு ஆதரவான போக்கை கடைபிடிக்ககூடிய சபாநாயகா் தனபாலன் அவா்களை கண்டித்து அவரது உருவபடத்தை எறிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சியினா் மாவட்ட செயலாளா் திரு அய்யப்பன் அவா்கள் தலைமையில் கைது செய்யப்பட்டனா். 

புதன், 13 ஆகஸ்ட், 2014

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நீதிபதி கட்ஜுவை விசாரிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

‘சக நீதிபதி பற்றி கருத்து கூறிய, நீதிபதி கட்ஜுவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்’’ என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் புதன் கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர், ‘காலையில்தானே கடிதம் கொடுத்தீர்கள். பிறகு பேசலாம்’ என்றார். அதைத் தொடர்ந்து, வெளிநடப்பு செய்த கிருஷ்ண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரை பற்றி, இதே நீதிமன்றத்தில் பணியாற்றி பின்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கட்ஜு, பதவி வகித்த 7 ஆண்டு பிறகு, அந்த நீதிபதியை பற்றி கூறியுள்ள கருத்து பற்றி அவையிலேயே எழுப்ப விரும்பினேன். அதற்கு அனுமதி மறுத்த காரணத்தால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
பதவியில் இருந்தபோது எதுவும் கருத்து தெரிவிக்காமல், ஓய்வு பெற்ற பிறகு சக நீதிபதி ஒருவர் பற்றி இதுபோன்ற கருத்து களை தெரிவிக்க ஆரம்பித்தால், நீதி துறையின் மாண்பே கெட்டு விடும். நீதிபதி கூறியுள்ள கருத்து நிச்சயமாக அவராக கூறியதாக இருக்காது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு..

சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து, தான் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், ‘‘கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்து பதில் வந்ததும், ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
ஆனால், கிருஷ்ணசாமி உட்காராமல் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். அப்போது மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுமாறு தேமுதிக உறுப்பினர் தினகரனை பேரவைத் தலைவர் அழைத்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து 50-க்கும் அதிகமான முக்கிய பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்களை கொடுத்திருந்தேன்.
அதில் ஒன்றைக்கூட விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இலங்கை ராணுவம் நடத்தும் கருத்தரங்கில் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திருநெல்வேலி கோபால சமுத்திரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் நடந்து வருகிறது. இதுபற்றி எல்லாம் பேச வேண்டும் என்றால் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

மீனவர் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு...

சென்னை: பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லாம்பாஷா ஆகியோர் எழுந்து, தமிழக மீனவர்கள் பிரச்னை பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்து கொள்ள அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் அந்த கட்சி உறுப்பினர்கள் 2 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் பேரவைக்கு வெளியே ஜவாஹிருல்லா அளித்த பேட்டி  தமிழகத்தை சேர்ந்த 93 மீனவர்களும் அவர்களின் 63 விசை படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதிக்கவில்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதுவது பற்றி தரக்குறைவாக விமர்சித்து கட்டுரை வந்துள்ளது. இந்த பிரச்னை பற்றி பேசுவதற்கும் சபாநாயகர் அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தோம். கிருஷ்ணசாமி (பு.த.): தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி அவையில் பேசுவதற்கு அனுமதி தர சபாநாயகர் மறுத்துவிட்டார் ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிரச்னைகள்
பற்றி பேசுவதற்கு அனுமதி கொடுக்காததால் வெளிநடப்பு செய்தேன்.

சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு

இலங்கையில் நடைபெறும் கருத்தரங்கில் இந்தியா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச முயன்றார். இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், தொடர்ந்து பேசுவதற்கு அவருக்கு அனுமதி மறுத்தார். இதனை கண்டித்து டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார். 

மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க இந்தியாவுக்கு வரக்கூடிய சர்வதேச விசாரணைக்குழுவுக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று, கண்டனம் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவற்றை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு செய்திருக்கிறது என்றார். 

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு..

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு...

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு!

புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு!
புதிய தமிழகம் இணையதள நண்பர்கள் சந்திக்கும் அறிமுக ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் வருகிற 17.08.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் நடைபெற இருக்கிறது. தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு...

சென்னை 12:-சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச முயன்றார்.இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறே வேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் தொடர்ந்து பேசுவதற்கு அவருக்கு அனுமதி மறுத்தார்.இதனை கண்டித்து டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்தார்.

.தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை கண்டித்து புதிய தமிழகம் ஆா்ப்பாட்டம்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை கண்டித்து அவருடைய முழு உருவப்படத்தை எரிக்க முயன்ற புதிய தமிழகம் கட்சி திருச்சி மாவட்டச்செயலாளர் அய்யப்பன் உட்பட 30 பேர் கைது..

புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக ஆா்ப்பாட்டம்...

 ..

தமிழக சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் தடுத்தும், டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களை அவமதிக்கும் தமிழக அரசையும், சபாநாயகர் தனபாலை கண்டித்து இன்று 13.08.2014 திருச்சி மாநகர செயலாளா் சங்கா் அவா்கள் தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது..

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு..

சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து, தான் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், ‘‘கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்து பதில் வந்ததும், ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
ஆனால்,டாக்டர் கிருஷ்ணசாமி உட்காராமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அப்போது மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுமாறு தேமுதிக உறுப்பினர் தினகரனை பேரவைத் தலைவர் அழைத்தார். இதையடுத்து டாக்டர் கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து 50-க்கும் அதிகமான முக்கிய பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்களை கொடுத்திருந்தேன்.
அதில் ஒன்றைக்கூட விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இலங்கை ராணுவம் நடத்தும் கருத்தரங்கில் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திருநெல்வேலி கோபால சமுத்திரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் நடந்து வருகிறது. இதுபற்றி எல்லாம் பேச வேண்டும் என்றால் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

சட்டசபையில் பேச வாய்ப்பளிக்கவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் கட்சிகள் வெளிநடப்பு -

13சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன் பேசியபோது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதிலளித்தார்.
அப்போது, ‘‘ஜனநாயக ரீதியாக போராடினால் கைது செய்வதில்லை. நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்தால் கைது செய்யப்படுவார்கள்’’ என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப வேண்டும், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் பி.தனபாலிடம் கோரினார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை.
அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. குணசேகரன் விவாதித்து முடித்த பிறகும் அனுமதி கேட்டு பாலபாரதி எழுந்து நின்றார். அப்போதும் அவர் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
எனவே, மைக் தராத நிலையிலும் பாலபாரதி பேசிவிட்டு, வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்றார். அவரைத் தொடர்ந்து மற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
அதுபோல புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. டாக்டர் கிருஷ்ணசாமியும் பேசுவதற்கு அனுமதி மறுத்ததால், அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தார். ஆனாலும் வெளிநடப்பு செய்த அனைவரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதிலளிப்பதற்கு முன்பதாகவே அவைக்கு திரும்பிவிட்டனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதிலுரை நிகழ்த்தி, அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பாலபாரதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அவர், ‘‘நானும், அண்ணாதுரை எம்.எல்.ஏ.யும் நடுச்சாலையில் அமர்ந்து போராடவில்லை. மக்கள் போராடும்போது போலீசார் தடியடி பிரயோகம் செய்யாமல், பிரச்சினையை சுமுகமாக முடிக்க முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.
வெளிநடப்பு செய்த நிலையில் சட்டசபைக்கு வெளியே பேசிய பாலகிருஷ்ணன், ‘‘கற்பழிப்பு குற்றம் தொடர்பாக முதல்–அமைச்சர் அளித்த விளக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை. சிறுமிகள் கூட கற்பழிக்கப்படுகின்றனர். மேலும் முதல்–அமைச்சர் கூறும் கருத்துக்கு பதிலளிக்க எங்களுக்கு அவகாசம் வழங்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.

பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு...

சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து, தான் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் குறித்து கேட்டார்.
அதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், ‘‘கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து சம்பந்தப்பட்ட துறையில் இருந்து பதில் வந்ததும், ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
ஆனால், கிருஷ்ணசாமி உட்காராமல் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டே இருந்தார். அப்போது மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுமாறு தேமுதிக உறுப்பினர் தினகரனை பேரவைத் தலைவர் அழைத்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அவைக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இந்தக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து 50-க்கும் அதிகமான முக்கிய பிரச்சினைகள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்களை கொடுத்திருந்தேன்.
அதில் ஒன்றைக்கூட விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இலங்கை ராணுவம் நடத்தும் கருத்தரங்கில் பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
திருநெல்வேலி கோபால சமுத்திரத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் நடந்து வருகிறது. இதுபற்றி எல்லாம் பேச வேண்டும் என்றால் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நீதிபதி கட்ஜுவை விசாரிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி..

‘‘சக நீதிபதி பற்றி கருத்து கூறிய, நீதிபதி கட்ஜுவிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும்’’ என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் புதன் கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர், ‘காலையில்தானே கடிதம் கொடுத்தீர்கள். பிறகு பேசலாம்’ என்றார். அதைத் தொடர்ந்து, வெளிநடப்பு செய்த கிருஷ்ண சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரை பற்றி, இதே நீதிமன்றத்தில் பணியாற்றி பின்பு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த கட்ஜு, பதவி வகித்த 7 ஆண்டு பிறகு, அந்த நீதிபதியை பற்றி கூறியுள்ள கருத்து பற்றி அவையிலேயே எழுப்ப விரும்பினேன். அதற்கு அனுமதி மறுத்த காரணத்தால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
பதவியில் இருந்தபோது எதுவும் கருத்து தெரிவிக்காமல், ஓய்வு பெற்ற பிறகு சக நீதிபதி ஒருவர் பற்றி இதுபோன்ற கருத்து களை தெரிவிக்க ஆரம்பித்தால், நீதி துறையின் மாண்பே கெட்டு விடும். நீதிபதி கூறியுள்ள கருத்து நிச்சயமாக அவராக கூறியதாக இருக்காது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பால் அவையில் சிரிப்பலை..

சட்டசபையில் கவன ஈர்ப்பு தொடர்பான விவாதம் முடிந்த பிறகு, உறுப்பினர்கள் ஒரு சிலர் எழுந்து, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டனர். அதில் டாக்டர் கிருஷ்ணசாமியும் (புதிய தமிழகம்) ஒருவர். அவர் பேசும்போது, நான் இந்த அவையில் 50-க்கு மேற்பட்ட கவன ஈர்ப்புகளை கொண்டு வந்துள்ளேன். ஆனால் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றார். தொடர்ந்து அவர் பேச முயன்றபோது, சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. 

அதனைத் தொடர்ந்து, வலது கையை உயர்த்திக்காட்டி, அவையை விட்டு வெளியேறுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறி புறப்பட்டார். அப்போது அவரது கையை உறுப்பினர் சரத்குமார் (தென்காசி தொகுதி) பிடித்து, தாங்கள் எழுத வாங்கிய என்னுடைய பேனாவை தந்துவிட்டு போங்கள் என்று

சைகையிலேயே குறிப்பிட்டார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. அதன்பின்னர், சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்து சரத்குமாரிடம் கொடுத்துவிட்டு உறுப்பினர் கிருஷ்ணசாமி வெளியேறினார்

சனி, 2 ஆகஸ்ட், 2014

புதிய தமிழகம் கோட்டையில் கொடை விழா...

இலங்கை ராணுவ இணையத்தில் ஜெ.வை பற்றி விமர்சனம்: ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமி கண்டனம்...

மீனவர் பிரச்சனை குறித்து ஜெயலலிதா, நரேந்திர மோடி இடையேயான கடித பரிமாற்றம் குறித்து கொச்சைப்படுதும் வகையில் செய்தி வெளியானதற்கு தமிழகத்தில் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. 

சட்டமன்ற வளாகத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறுகையில், ஒரு முதல் அமைச்சர், நாட்டின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை இலங்கை ராணுவ இணையதளத்தில் தரக்குறைவாக ஒரு தலைப்பிட்டு கட்டுரை வெளிவந்திருக்கிறது. இது கண்டனத்துக்கு உரியது.

இந்த பிரச்சனையை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுப்புவதற்கு நாங்கள் முயற்சித்தபோது, சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்றார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழ்நாடு அரசுக்கு தலைமை தாங்குபவர்களை பற்றி கொச்சைப்படுத்தக் கூடிய வகையிலும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்பது போல் கருத்துக்களை தெரிவிக்கக் கூடிய வகையில் செய்தியை போட்டுள்ளார்கள். இது தமிழகத்தில் உள்ள மக்களை புண்படுத்தும் அளவிற்கு உள்ளது என்றார். 

புதிய தமிழகம் கோட்டையில் திருவிழா..