எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 25 ஜூலை, 2011

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு நாள்:நெல்லை ஆற்றில் கட்சிகள், இயக்கத்தினர் அஞ்சலி

திருநெல்வேலி:நெல்லையில் மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் 11ம்ஆண்டு நினைவுநாளையொட்டி புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 99ம்ஆண்டு ஜூலை 23ம்தேதி கூலிஉயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுவிக்க வலியுறுத்தி நெல்லையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்ற போது கலவரம் ஏற்பட்டது.

போலீசார் தடியடி நடத்தினர். 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.ஆண்டுதோறும் ஜூலை 23ம்தேதி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர், அமைப்பினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 11ம்ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று 19 கட்சிகள், அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஆற்றில் அஞ்சலி செலுத்தினர்.புதிய தமிழகம் கட்சி சார்பில் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மவுன ஊர்வலம் துவங்கியது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள், சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். அண்ணாத்துரை சிலை முன்பு ஊர்வலம் நிறைவு பெற்றது.பின்னர் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்டச்செயலாளர் சுப்பிரமணியன், மாநகர செயலாளர் செல்லப்பா, மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் அரவிந்தராஜா, அவைத்தலைவர் எட்வர்டுராஜ், இணைச்செயலாளர் சிவக்குமார், துணைச்செயலாளர் மணிகண்டன், தூத்துக்குடி மாநகர செயலாளர் கனகராஜ், விருதுநகர் மாவட்டச்செயலாளர் ராமராஜ் உள்ளிட்டோர் ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்திய கம்யூ.,:இந்திய கம்யூ., சார்பில் மாவட்டச்செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் மாவட்ட துணைச்செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சத்யன், மாநகர செயலாளர் சுடலை, ஏஐடியுசி., மாவட்டத்தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.பா.ம.க., சார்பில் மாநில துணைப்பொதுச்செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் மாநில கொள்கை விளக்க அணித்தலைவர் வியனரசு, மாநகர் மாவட்டச்செயலாளர் சீயோன் தங்கராஜ், மாநகர அமைப்புச்செயலாளர் ரவிதேவேந்திரன், மாவட்ட பொருளாளர் பாப்பாரத்தினம், சேதுபதி, ரமேஷ்பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மா.லெ.கம்யூ., சார்பில் மாவட்டச்செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜமாணிக்கம், தேன்மொழி, கணேசன், கருப்பசாமி, ரவிடேனியல், மாரிமுத்து, மாரியப்பன், ஏஐசிசிடியு., நிர்வாகிகள் வெங்கட்ராமன், சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.,:பா.ஜ., சார்பில் எஸ்.சி., அணி மாநிலச்செயலாளர் முருகதாஸ் தலைமையில் மாவட்டத்தலைவர் முத்துபலவேசம், தச்சநல்லூர் மண்டல பொதுச்செயலாளர் வெங்கடேஷ், மாவட்டத்தலைவர் கட்டளை ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் மகா கண்ணன், குருசாமி, ஆவுடையப்பன், அருள்ராஜ், மாரியப்பன், முத்துக்குமார், பெருமாள், சரவணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தொழிற்சங்கத்தலைவர் பிரபுகாளிதாஸ், மத்திய பொருளாளர் பாஸ்கர், மாநகரத்தலைவர் சந்தானக்குமார், மாவட்ட துணைத்தலைவர் சப்பாணியாதவ், மாவட்ட பொருளாளர் கென்னடி, மகளிரணி தலைவி ராணி ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திரிணாமூல் காங்., சார்பில் மாவட்ட விவசாய அணித்தலைவர் ஆறுமுகம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள்:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன் தலைமையில் நிர்வாகிகள் மோகன், கார்த்திக், கரிசல் சுரேஷ், ஜீவா, கிருபாகரன், அமுதா மதியழகன், நடராஜன், நல்லையா, துரையரசு, சுப்பிரமணியன், ஆசைத்தம்பி, முத்துக்கிருஷ்ணன், விநாயகம் செல்வம், மனோகர், அரவிந்த்செல்வன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் சார்பில் தலைவர் துரையரசன், மாநில பொருளாளர் சங்கர், மாவட்டச்செயலாளர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் காந்திமதிநாதன், மகளிர் அணிச்செயலாளர் செல்லம்மாள், மாநில இளைஞரணி செயலாளர் சண்முகராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.புரட்சிபாரதம் சார்பில் தென் மண்டல செயலாளர் பெருமாவளவன், சாம்ராஜ், பலராமன், நாகராஜன், ஜான், மன்னார், வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் மாவட்டச்செயலாளர் சுப்பையா தலைமையில் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் இலக்கியக்கழகம் சார்பில் மாநில அமைப்புச்செயலாளர் செல்லையா பாண்டியன், துணைச்செயலாளர் சுபாஷ், மாவட்டச்செயலாளர் நாகராஜன், பாலா, சுதாகர், செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன் தலைமையில் மாநில நிதி செயலாளர் சங்கர், மாவட்டச்செயலாளர் கதிரவன், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் மனோகர், மாவட்டத்தலைவர் செங்குட்டுவன், மாவட்ட துணைச்செயலாளர் தமிழ்மாறன், மாநகர தலைவர் தமிழ்வளவன், செயலாளர் இளமாறன், இளைஞரணி மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.தமிழ்ப்புலிகள் சார்பில் துணைப்பொதுச்செயலாளர் பேரறிவாளன், மாவட்டச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில மையக்குழு உறுப்பினர் நெல்லை மாயா, மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் தமிழரசு, மாவட்ட துணைச்செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தமிழர் விடுதலைப்புலிகள் சார்பில் தலைவர் செந்தமிழன், பொதுச்செயலாளர் தமிழ் முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய குடியரசு கட்சி(அ) சார்பில் மாவட்டச்செயலாளர் பரமசிவன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மா.கம்யூ., சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவட்டச்செயலாளர் பழனி, மாநிலக்குழு உறுப்பினர் கருமலையான், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் தியாகராஜன், ராஜாங்கம், பாஸ்கரன், மாநகர செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மத்திய, மாநில அரசு எஸ்.சி.எஸ்.டி., ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தலைவர் கணேசன், செயலாளர் சுவாமிநாதன், மாநில துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், மண்டல செயலாளர் முருகேசன் அஞ்சலி செலுத்தினர். மத்திய, மாநில அரசு எஸ்.சி.எஸ்.டி., ஊழியர் நலச்சங்கம் சார்பில் ஆலோசகர் பெரிசாமி, மாவட்டத்தலைவர் அரிராம், பொதுச்செயலாளர் அம்பேத்கர், மாவட்ட பொருளாளர் பொன்னுச்சாமி, துணைத்தலைவர்கள் செல்லையா, சுந்தரம், ரெங்கநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மொட்டை போட்டுமலர் அஞ்சலி:பலியானவர்களின் குடும்பத்தினர் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். களக்குடியை சேர்ந்த செல்வராஜ், புதிய தமிழகம் கட்சித்தொண்டர் அரிராம் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை முதல் மாலை வரை ஆற்றங்கரை, ஆற்றுப்பாலம், ஜங்ஷன் பஸ்ஸ்டாண்ட், தலைவர்கள் சிலைகள், கட்சி அலுவலகங்கள் முன் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக