எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 7 ஜூலை, 2011

நிலத்தடி நீரை எடுப்பதால் பாதிப்பு ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வாதம் : அரசின் கொள்கையை தெரிவிக்க உத்தரவு


மதுரை : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீரை எடுப்பதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வாதாடினார். இவ்விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு குறித்து இன்று தெரிவிக்க அரசு தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

 
ஒட்டப்பிடாரம் பகுதியில் தனியார்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி தனியார்களுக்கு விற்கின்றனர். இதை கண்டித்து மக்கள் போராடினர். நிலத்தடி நீரை எடுக்க ஆர்.டி.ஒ., தடை விதித்தார். அதை எதிர்த்து பிச்சைபெருமாள் உட்பட சிலர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட், ஆர்.டி.ஒ., உத்தரவுக்கு தடை விதித்தது. தடையை விலக்க கோரி கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மனு செய்தார்.

நேற்று வழக்கு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வக்கீல்கள் தாழைமுத்தரசு, பாஸ்கர் மதுரத்துடன் ஆஜரானார். பின், கிருஷ்ணசாமியே வாதிடுகையில், ""ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தண்ணீர் தேவையை அவர்களாக பார்த்து கொள்ள வேண்டும். ஒட்டப்பிடாரம் பகுதியில் ஏழை விவசாயிகள் உள்ளனர். நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவதால், அவர்களுக்கு பாதிப்பு. தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகு கீழே சென்று விட்டது,'' என்றார்.

அரசு கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியன் மற்றும் சிறப்பு பிளீடர் மகேந்திரன், மின் உற்பத்தி செய்யும் இரு நிறுவனங்களுக்கு மட்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. பொது பயன்பாட்டுக்காக சப்ளை நடக்கிறது, என்றனர்.

பின் நீதிபதி, கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஒ., உத்தரவுகள் பராபட்சமின்றி இருக்க வேண்டும். ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் சுரண்டப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது சீரியஸ் பிரச்னை. இதுபோல பல இடங்களில் பிரச்னையுள்ளது. நீர் மேலாண்மை பாலிசி குறித்து அரசு கொள்கை என்ன? என விளக்க வேண்டும். மின் உற்பத்தி தவிர பிற பயன்பாட்டுக்கு தண்ணீர் சப்ளை செய்வதில்லை என கொள்கை ஏதும் உண்டா? இதுகுறித்து அரசு தரப்பு நாளை(இன்று) விரிவாக தெரிவிக்க வேண்டும், என உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

வழக்கில் கிருஷ்ணசாமியை எதிர்மனுதாரராக சேர்த்ததை எதிர்த்து பிச்சைபெருமாள் சார்பில் வக்கீல்கள் முத்தல்ராஜ், பழனியாண்டி சீராய்வு மனு செய்தனர். மனுவை நீதிபதிகள் ஜோதிமணி, அருணாஜெகதீசன் தள்ளுபடி செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக