எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்..... டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் பேட்டி ............

துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்..... டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் பேட்டி ............................இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நெல்லை, திண்டுக்கல், வால்பாறை, கோத்தகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு, தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில், இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டியலின சமுதாயத்தினரை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற வர வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலிப்பதைத் தடுக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் ..2001.. திமுகவுடன் தொகுதி உ டன்பாடு 10 சட்டமன்ற தொகுதிகள் ...!!!.

புதிய தமிழகம் கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் ..2001.. திமுகவுடன் தொகுதி 
உ டன்பாடு 10 சட்டமன்ற தொகுதிகள் ...!!!.
1.ஓட்டபிடாரம் ... .......39,000
2.சங்கரன்கோவில் ... 42,738
3.வாசுதேவநல்லூர் ...36,467
4. பரமக்குடி .................48,000
5. குளத்தூர் ..................34,000
6. வால்பாறை .............30,000
7. நாமக்கல் ..................39,000
8. நிலக்கோட்டை .......30,478
9. வலங்கைமான் ........31,200
10. சேடப்பட்டி .............27,000..ம் .... வாக்குகளை பெற்றோம் . ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை .. காரணம் அன்றைய திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களின் எண்ணம் இருந்தது ... தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு பலம் உ டைய மதிமுக, கடைசி நேரத்தில் திமுக அணியில் இருந்து வெளியேறியது ... பாஜக திமுக கூட்டணியில் இருந்ததால் சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை ... முதன் முதலாக தேவேந்திரர் சமுகத்தின் அரசியல் இயக்கம் 10 சட்டமன்ற தொகுதிகளை பெற்றதை சில ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை ... எல்லாவற்றிற்க்கும் மேலாக மாவீரன் பசுபதிபாண்டியனுக்கு போயஸ் கார்டன் கதவு திறந்தது , எதற்க்காக தேவேந்திர குல மக்களின் கோரிக்கைகளுக்காக அல்ல , எப்படியாவது டாக்டர் அய்யா அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற அதிமுகவின் எண்ணத்தை நிறைவேற்று வதற்காக , குறைத்த வாக்கு வித்தியாசத்தில் { 630} டாக்டர் அய்யா அவர்கள் தோல்வியை தழுவினார்கள் .. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ..?... பழைய வழக்குகளை தூசு தட்டி டாக்டர் அய்யா அவர்களை நள்ளிரவில் கைது செய்ததுதான் .... 2001ல் இருந்து 2006 வரை நமக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது ....

வாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..!!!..........சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல்....!!!. ..

வாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..!!!..........சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல்....!!!. .....................................நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சோ்ந்த பாக்கியராஜ் கடந்த 12.10.15 அன்று மா்மமான முறையில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். ஆனால் வாசுதேவநல்லுா் போலிசாா் சந்தேக மரணம் என்றும் மின்னல் தாக்கி இறந்து விட்டாா் என்றும் வழக்கை திசை திருப்ப முயன்றனா். ஆனால் இப்பிரச்சணையை புதிய தமிழகம் கட்சி தலையிட்டதன்போில் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில் பாக்கியராஜ் மரணம் கொலை வழக்காக மாற்றகோாியும், சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய்பட்டுள்ளது.
நன்றி - தி இந்து நாளிதழ்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை

தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் வெற்றியடையட்டும்..!!!.. டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் .....!!!..

. தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் வெற்றியடையட்டும்..!!!.. டாக்டர் அய்யா அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் .....!!!.... .மாநிலம் முழுவதும் புதிய தமிழகம் கட்சி அறிவித்து இருக்கின்ற தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் என்பது, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் நடத்துகின்ற வெறும் கண்துடைப்பு நாடகம் அல்ல ..ஒரு கோடி தேவேந்திரர்களின் உ ள்ளகுமுறல்கள், உ ரிமை முழக்கம் , தேவேந்திரர் அடையாளமீட்பு , தேவேந்திரர் சமுக , அரசியல் , பண்பாட்டு முழக்கங்கள் , தமிழக அரசியலில் தேவேந்திரர் சமுகத்தின் விடுதலையை தீர்மானிக்கின்ற பேரணிகள் , பொதுக்கூட்டங்களை புதிய தமிழகம் கட்சி நடத்துகின்றது ... ஆட்சி மாற்றத்தை உ ருவாக்குகின்ற , ஏன் நமக்கான ஆட்சியை தீர்மானிக்கின்ற பேரணி பொதுக்கூட்டம் ... எந்த ஒரு மாவட்டத்தில் பேரணி , மற்றும் பொதுக்கூட்டம் நடக்கின்றதோ அந்த மாவட்ட தேவேந்திரகுல கிராமங்கள் அனைத்திற்க்கும் நமது கோரிக்கைகள் சென்றடைய வேண்டும் . பேரணியில் மக்கள் பங்குபெற வேண்டும் . அதற்கான முயற்சிகளில் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்பை உ ணர்ந்து செயல்பட வேண்டும் .இன்று தேவேந்திரர் சமுகம் அடைந்திருக்கின்ற குறைந்த பட்ச நன்மைகள் , உ ரிமைகள் எல்லாம் புதிய தமிழகம் கட்சி பெற்று தந்தது என்பதை மறக்க வேண்டாம் ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் 25 ஆண்டுகளுக்கும் மேலான சமரசமற்ற போராட்டங்கள் மூலம் நமக்கு கிடைத்தது ....எப்போதேல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகின்றதோ , அப்போதெல்லாம் தேவேந்திரர் சமுகத்தின் மீதான ஒடுக்குமுறைகள் , திட்டமிட்ட படுகொலைகள் நடக்கின்றது . அரசு பயங்கரவாதம் நம் மீது கட்டவிழ்த்துப்படுகிறது ... ஆளுகின்ற அரசு என்பது அனைத்து தரப்பினருக்கான அரசு என்பதை மறந்து குறிப்பிட்ட ஒரு சாதியின் வர்க்க நலன்களை பாதுகாக்கின்ற அரசாக உ ள்ளது... உறவுகளே! ..தற்பொழுது நம் மக்கள் மீது தொடரும் படுகொலைகள் ...குறிப்பாக நம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பொய்வழக்குகள்... நம் களப்போரளிகள் சிறையில் அடைப்பு ...நமக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்படும் அரசு...முக்கியமாக நம் எதிரிகள் நம் இனத்தை அழிப்பதற்கும் ,பிரிவுபடுத்தவும் நம் இளைஞர்களை மூளைசலவை செய்து நமக்குள்ளையே சண்டைகளை உண்டாக்குகின்றனர் ...மொத்தமாக தமிழ் நாட்டில் உள்ள அணைத்து சாதிகளும் , அனைத்து கட்சிகளும் ,மதங்களும் நமக்கு எதிராகத்தான் செயல்படுகின்றன ... இந்நிலையில் நம் நமக்காக குரல்கொடுக்கின்ற தலைவர்களை குறைகூறியும் , தனிமனித விமர்சனங்களையும் செய்துகொண்டிருக்கிறோம் . உறவுகளே ! ..நீங்கள் இப்போது எந்த அரசியல் கட்சிகளில் இருந்தாலும் , அது நமக்கு எதிரான கட்சியே .... புதிய தமிழகம் கட்சிதான் நமக்கான சமுக , அரசியல் அடையாளத்தை பெற்று தரும் .... தமிழத்தில் பேசுகின்ற தேசியம், பொதுவுடைமை , திராவிட அரசியல் , இப்போது தமிழ்தேசிய அரசியல் எல்லாம் யாருக்கானது ..?..... நமக்கான அரசியல் புதிய தமிழகம் மட்டும்தான் ...

25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் .

25-11-12 அன்று நெல்லையில் தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு ... பேரணி .. பொதுக்கூட்டம் .
@..பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்
.
@ தேவேந்திர குல மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
@ மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
.
@ தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.
ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி
.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் 25-11-12 அன்று நெல்லையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
ஓரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க, அரசியல் அதிகாரம் வென்றெடுக்க, அரசியல் பாகுபாடின்றி அலைகடலென திரண்டு வாரீர்..

ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற.... புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல் ...!!!.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் விவசாய நிலங்களையும், நீர்நிலைகளுக்கு செல்லக்கூடிய கால்வாய்களை அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அப்பகுதியிலுள்ள புதிய தமிழகம் கட்சியினர் ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதியில் கமேஷா காற்றாலை நிறுவனம் எனும் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் 80 காற்றாலைகளை அமைக்க சுமார் 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தி காற்றாலை நிறுவும் பணியினை தொடங்கி வருகிறது.
இந்த நிறுவனம் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு குடிநீர், விவசாயம், கால்நடைகளுக்கு வாழ்வாதாரமாகவும் இருக்கும் ஆரைக்குளம் அணை கழுங்கு பகுதியிலிருந்து இரு பிரிவாக நீர் வழிந்தோடக்கூடிய முதல் கால்வாய் மூலம் செல்லக்கூடிய குளங்களான வேப்பங்குளம், துக்கன்குளம், சின்ன துக்கன்குளம், ஓட்டப்பிடாரம் பெரியகுளம், முப்பிலிவெட்டி, ஆவாரங்காடு வழியாக ஏ.எம்.பட்டி வரை செல்லக்கூடிய சுமார் 25க்கும் மேற்பட்ட சிறிய குளங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய வழிகளையும்,
இரண்டாவது கால்வாய் வழியாக செல்லக்கூடிய குளங்களான குலசேரகன்நல்லூர், கரிசல்குளம், ஓசனூத்து, சக்கிலியன்குளம், சங்கரராஜபுரம், புதுபச்சேரி, பூலிக்குளம், கூத்தங்குளம், சங்கூரணி, நீராவிக்குளம், புதியம்புத்தூர் மலர்குளம், சாமிநத்தம், காயலூரணி மற்றும் வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள சுமார் 50 கண்மாய்களுக்கு செல்லக்கூடிய வழியினை மேட்டு ஆரைக்குளம் பகுதியில் பழைய பாலங்களை தகர்த்து அடைப்பு ஏற்படுத்தி, சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடையில் சாலை அமைத்து தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதேபோல மலைப்பட்டி, ஒட்டநத்தம், கக்கம்பட்டி, முறம்பண், தளவாய்புரம், கொம்பாடி, கைலாசபுரம், தட்டாப்பாறை, உமரிக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக கோரம்பள்ளம் வரை காட்டாற்று வெள்ளமாக செல்லக்கூடிய உப்பாற்று ஓடையை ஓசனூத்து கிராமத்தில் அடைப்பு ஏற்படுத்தியுள்ளதினால் கோரம்பள்ளம் உள்ளிட்ட 15 கண்மாய்களுக்கு வரக்கூடிய நீர் வரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள மக்களின் குடிநீரும், விவசாயமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்படி கிராமங்களில் ஓடை புறம்போக்கு கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தற்போது பெய்து வரும் பருவ மழையினால் அப்பகுதியிலுள்ள கண்மாய்களில் நீர் வரத்து இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் மேற்படி தனியார் காற்றாலை நிறுவனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புக்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற கோரி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் உத்தரவின்பேரில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அதிசயகுமார், மாவட்ட செயலாளர்கள் பட்டவராயன், கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார், மாடசாமி ஆகியோர் மேற்படி ஆக்கிரமிப்பு பகுதிகளை பார்வையிட்டு அகற்ற சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..?..... இட ஒதுக்கீட்டு கொள்கை என்ன ..?....

தேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் ஏன் ..?..... 
இட ஒதுக்கீட்டு கொள்கை என்ன ..?....
இடஒதுக்கீடு... இந்த வார்த்தையை யார் எங்கு கேட்டாலும் அது என்னவோ SC/ST மக்களுக்கானது, அதை நீக்க வேண்டும்,தூக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது... எல்லாம் பார்ப்பினிய மனநிலைதான் .. இடஒதுக்கீட்டு சலுகைகளை முழுமையாக அனுபவிப்பவர்கள் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட வகுப்பினர்தான்.... ஆனால் 18%ல் 2%ம் கூட அனுபவிக்காத நாம் தாழ்த்தப்பட்ட சாதியாம் .. இந்த இந்துத்துவ மனநிலை மாற்றப்பட வேண்டும் ..தேவேந்திரர் சமுகம் மக்கள் தொகையின் அடிப்படையில் 10%ம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் , எந்த பட்டியலும் எமக்கு தேவையில்லை ,
தனி {சிறப்பு } பட்டியல் உ ருவாக்கப்பட வேண்டும் .
SC/ST மட்டும்தான் இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனரா..?
மொத்தம் 100 இடங்களில்
BC-30
MBC-20
SC-18
ST-1
மீதி-31% பொது. தமிழகத்தில் 69% ம் பின்பற்றப்படுகிறது ..
ஆக,. பட்டியல் இன மக்களில் தேவேந்திர குல மக்களுக்கு கிடைப்பதோ வெறும் 2%ம் தான் , அதையும் போராடித்தான் பெறமுடிகிறது .. பின்னடைவு பணியிடங்களை நீதிமன்றம் சென்றுதான் பெறமுடிகிறது . தன்னை உ யர்ந்த சாதி என்பவன் மனநோயாளி என்று அண்ணல் அம்பேத்கார் அவர்கள் சொல்வார்கள் .. இந்துத்துவ படிநிலையில் இடஒதுக்கீட்டை அனுபவிக்கும் பிற்பட்ட , மிகவும் பிற்பட்ட சாதியினர் எப்படி தங்களை உ யர்ந்த சாதியாக காட்டிக்கொள்கின்றனர் ..... அதுதான் இந்துத்துவ , பார்பன மனநிலைதான் , பட்டியல் இன மக்களுக்கு எதிரான மனநிலை என்பது , இன்று அனைத்து சாதியினரும் கடைபிடிக்கின்றனர் .. தேவேந்திர குல மக்கள் இந்த பட்டியல் இனத்தில் இருப்பதால் அவர்களது வரலாறு மறைக்கப்படுகிறது .. அரசியலில் உ ரிய பிரதிநிதித்துவம் பெற முடியவில்லை ., சமுக அந்தஸ்து கிடைப்பதில்லை.. எனவேதான் தேவேந்திர குல மக்களின் மனநிலையை அறிந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் ..
டாக்டர் .க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் , தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் " தேவேந்திரர் பட்டியல் மாற்றம் " குறித்து தனி கவனம் செலுத்துகின்றார்கள் ... எனவே தேவேந்திர குல உ றவுகள் மாவட்டம் தோறும் நடைபெறும் தேவேந்திரர் சமுக அடையாள மீட்பு மற்றும் பொதுக்கூட்டத்தில் பெரும்திரளாக கலந்து கொண்டு வெற்றியடைய செய்ய வேண்டுகிறேன் ...
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்