எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 28 ஜூன், 2014

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..

விருதுநகர் 27:-இரயில் கட்டண உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ.ராமராஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..


மத்திய அரசு அறிவித்துள்ள ரெயில் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று திருச்சிக்கு வரும் ஜனசாதாப்தி ரெயிலை மறித்து பேராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஐயப்பன் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று காலை முதலே திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் குவியத் தொடங்கினர். போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு திருச்சி வந்த ஜனசதாப்தி ரெயிலை மறிக்க புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஐயப்பன், வக்கீல் சங்கர் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு தள்ளு முள்ளு நிலவியது. போலீசாருடன் புதிய தமிழகம் கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் ஐயப்பன், வக்கீல் சங்கர், நிர்வாகிகள் கோபி, அசோக், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஷாஜகான், தங்கத்துரை, பிச்சமுத்து, மேற்கு தொகுதி பொறுப்பாளர் சண்முகம், இளைஞர் அணி பாலு உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பீமநர் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..

திருச்சி 27;-இரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் மாவட்ட செயலாளர் ம.அய்யபன் தலைமையில்,மாநகர செயலாளர் சங்கர் முன்னிலையிலும் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் இரயிலை மறிக்க முயற்ற போது நூற்றுக்கு மேற்ப்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டன

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..


-ஸ்ரீவில்லிபுத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் 108 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். தென் மாவட்டங்களில் ஒடுக்க பட்ட மக்கள் மீது நடைபெறும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.டி.கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் ரயில் நிலையத்திற்குள் சென்று மறியல் செய்ய முயன்றபோது, போலீஸார் இவர்களைக் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி பொறுப்பாளர் ராஜலிங்கம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் பவுண்ராஜ், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியச் செயலாளர் பாரதிராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் 27:-ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், நகரச் செயலாளர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது...


இரயில் கட்டண உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்  என வலியுறுத்தி அனைத்து மாவாட்ட  தலைநகரங்களில்  உள்ள இரயில் நிலையம் முன்பு ஜுன் 27 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாகடர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் அறிவித்திருந்தார்கள் அதன்படி இன்று தமிழகம் முழுவதும்  புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் இரயில்  மறியல்  போராட்டங்கள் நடத்தினர்.

சென்னையில் மாநில அமைப்பு செயலாளர்  வி.கே.அய்யர் தலைமையில்  தெற்கு இரயிவே நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 30 கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்ட செயலாளர் கோ.ராமராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராமராஜ், செல்வகுமரேசன்,ரெ.கார்த்திக், மாணிக்கம்,கலைசெல்வன்,ராமசந்திரன்,சேகர், முத்துப்பாண்டி, முத்துராமன், செல்லமணி, பழனிசாமி, வழக்கறிஞர் ஏ.கே.ஜெகன்,குணா ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் இரயில் நிலையம் முன்பு 300 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரயில் கட்டண உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்  என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் நிலையம் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள்  எஸ்.டி. கண்ணன், சீனிவாசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மதுரை மாவட்ட  செயலாளர் செ.பாஸ்கர் தலைமையில்,தாமோதரன்,பன்னீர்செல்வம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிற்றரசு,டிமிட்ரோ கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பேர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மாநில தொண்டரணி செயலாளர் லட்சுமண பாண்டியன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் கிருபைராஜ், கண்ணன்மாநில பொதுகுழு உறுப்பினர், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி ஒன்றிய செயலாளர் அன்புராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி ராஜசேகர் முன்னிலையில் நாகர்கோவில்- கோவை செல்லும் ரயில் முன்பு மறியலில் ஈடுபட்ட   54 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவாட்டத்தின் சார்பில்,  திருச்சி இரயில்வே சந்திப்பில்  மாவாட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் ,மாநகர செயலாளர் சங்கர் முன்னிலையில் 52 பேர்  இரயில் மறியல் செய்தபோது  கைது செய்யப்பட்டனர்.

கோயமுத்தூர் மாவட்ட  இரயில்வே சந்திப்பில்  மறியல் செய்த  மாவட்ட பொறுப்பாளர்கள்  நக்கீரன்,சுப்பிரமணியன்,மாணிக்கவேல், சிவகுமார், சாந்தி உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டு இயில் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை விடுதியில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு  நெல்லை மாநகர பொறுப்பாளர் செல்லப்பா தலைமையில்  நெல்லைமாவட்ட இளைஞஎஅணி  வீர அரவிந்தராஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில் நிலையம் முன்பு புறநகர் மாவட்ட செயலாளர் வி.சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 97 பேர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி இரயில் நிலையம் முன்பு  முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயகுமார் தலைமையில்  ரயில் மறியல் நடைபெற்றது. 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  ரயில் நிலையம்முன்பு  மாவட்ட பொறுப்பாளர் மு.மாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தொண்டர்கள் 60 பேர் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரம்  மாவட்ட செயலாளர்  கதிரேசன் தலைமையில், முன்னாள் பொறுப்பாளர் கலீல், முருகேசன் முன்னையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் பாலா, காமராஜ்,பால்ராஜ் ,முருகையாபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கரூர் மாவட்டம், குளித்தலையில் ரயில் மறியலில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, குளித்தலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ரயில் நிலையத்துக்கு வந்த இக்கட்சியினர், பாலக்காட்டிலிருந்து குளித்தலை வழியாக திருச்சி செல்லும் விரைவு பயணிகள் ரயிலை, ரயில் நிலையம் முன்பாக மறித்தனர்.
இந்த மறியலுக்கு புதிய தமிழகம் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலர் க. ராஜசேகரன் தலைமை வகித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே மற்றும் குளித்தலை போலீஸார் மறியிலில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்தனர்.


ரயில் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குணா தலைமை வகித்தார்.
துணை செயலாளர் சுகுமார், நகர செயலாளர் அழகர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்
பாராளுமன்ற தொகுதி செயலாளர் கண்ணன், இளைஞரணி செயலாளர் விவேக், மாணவரணி செயலாளர் ராஜா,ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், கார்த்திக், ராஜ்மோகன், செந்தில்குமார், சதிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






\





தேர்தல்முறையில் மாற்றம் தேவை- வாக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும் - டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ பேட்டி



புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் விதிமுறைகளை மாற்றவேண்டும். ஏனென்றால், மக்களிடம் போதிய அளவில் வாக்கு சதவீதம் பெற்ற பல தலைவர்களால் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற முடியவில்லை. சமீபத்தில் நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 சதவீதம் வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா, மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. 25 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஜே.டி.யு., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போய்விட்டது. தமிழகத்திலும் இதே நிலைதான். 43 சதவீதம் வாக்குகள் பெற்ற அதிமுக 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 19சதவீதம் வாக்கு மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கூட்டணி 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 25 சதவீதம் வாக்குகள் பெற்ற திமுக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. அதிக வாக்குகள் பெற்றும் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுகிறது. 

எனவே, இத்தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.அந்தந்த கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்ப, பிரதிநிதிகளை தேர்வுசெய்ய வேண்டும். இந்நடைமுறை நார்வே, ஸ்பெயின், டென்மார்க், ஸ்வீடன்,சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நேபாளம் உள்ளிட்ட 89 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இம்முறையை அமல்படுத்தும்போது, உண்மையான ஜனநாயகம் காக்கப்படும்.இது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும்

இத்தேர்வு முறை வேண்டும் என திமுக 1999ம் ஆண்டே குரல் கொடுத்தது. இந்த எண்ணம் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய தேர்தல் முறையில் மாற்றம் பற்றிய பிரசார நிறுவனம் என்ற அமைப்பு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் தலைவர் எம்.சி.ராஜூ இந்தியா முழுவதும் சென்று தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவர், இன்று கோவையில் என்னை சந்தித்து ஆதரவு கோரினார்.

நாங்கள் ஒன்றுசேர்ந்து, முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழக தலைவர்களை ஒன்றுதிரட்டி கருத்தரங்கு நடத்த உள்ளோம். மிக விரைவில் தேதி, இடம் அறிவிக்கப்படும். பின்னர், தேசம் தழுவிய இயக்கமாக இதை விரிவுபடுத்துவோம்.

இவ்வாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.

ரயில் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் இன்று புதுகையில் ஆர்ப்பாட்டம்..

புதுக்கோட்டை, : மத்திய அரசு ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுகை மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் ரயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ரயில் கட்டணத்தினை உயர்த்தியதை கண்டித்தும், காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பயணிகள், சரக்கு ரயில் கட்டண உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று (27ம் தேதி) கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி ஆணையின்படி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.