எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 27 ஜனவரி, 2014

கூட்டணி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் களம் இறங்கிய கிருஷ்ணசாமி..

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார பூர்வமாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தென்காசி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதை போன்று அக்கட்சியினர் தேர்தல் பணியையே தொடங்கி விட்டனர். தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பாராட்டு விழா கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியபோது, ’’நம் கட்சியினர் கூட்டணி கட்சியினரோடு இப்போதே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை இந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களால் இந்த தொகுதிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர்.
எனவே, புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என அனைத்து தரப்பினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிளை செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் உடனடியாக வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும்’’ என்றார்.

''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?'' டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்..

  • ''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?''  டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி பதில்



''தி.மு.க. ஆட்சியின் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. அதற்கு மாற்றாக அ.தி.மு.க. அமையும் என்றுதான் அந்தக் கூட்டணியில் புதிய தமிழகம் அங்கம் பெற்றது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் எதையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகப் புகார் கிளம்பியது. இப்போது அ.தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது? அ.தி.மு.க. ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. தி.மு.க. ஆட்சியைவிட பல மடங்கு மோசமாகிவிட்டது''- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணியை உறுதிசெய்திருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தபோதுதான் இப்படி ஆரம்பித்தார்.
 ''அ.தி.மு.க-வைவிட தி.மு.க. பரவாயில்லை என்பதால்தான் தி.மு.க-வுக்குப் போனீர்களா?''
''அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் சில கொள்கைகளும் கோட்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். புதிய தமிழகத்துக்கும் அப்படித்தான். தென் தமிழகத்தில் பிரதானமாக உள்ள பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைத்திட வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தேர்தல் கூட்டணிக்கு முன்பாக ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் வலியுறுத்தினோம். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு முன்பாக புதிய தமிழகத்தின் ஆதரவு தேவை என அ.தி.மு.க. தலைமை அழைத்து கேட்டபோதுகூட, 'ஏற்கெனவே தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் தென் தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன். 'தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால் அதை இப்போது நிறைவேற்ற முடியாது. தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கிறேன்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையில்தான் சங்கரன்கோவில் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்தோம். அவரை வெற்றிபெற வைத்தோம். அதற்குப் பிறகும் எங்கள் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம் எப்படி அவர்களுடன் கூட்டணியைத் தொடர முடியும்?
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைவதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு விதமான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியும். தென் தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்.''
''நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனைத் தொகுதியில் உங்கள் கட்சி போட்டியிட வாய்ப்பு இருக்கிறது?''
''தி.மு.க. கூட்டணியில் நாங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் பல ஜனநாயக சக்திகளை இணைத்து, இந்தக் கூட்டணியை வலுவான வெற்றிக் கூட்டணியாக மாற்ற நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, எண்ணிக்கை பற்றியெல்லாம் இப்போது பேச முடியாது. எங்கள் கட்சி பொதுக்குழுவில் இதுபற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும்.''
''திருமாவளவனும் நீங்களும் ஒரே அணியில் இடம்பெற்றுள்ளீர்கள்...''
(கேள்வியை முடிப்பதற்கு முன்பே குறுக்கிட்டு...) ''நாங்கள் அன்றும் ஒன்றாகத்தான் இருந்தோம். இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். பார்ப்பவர்களின் பார்வைதான் இரண்டாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து சந்திக்கிறோம். பேசுகிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் எப்போதும் இருந்ததே இல்லை. இப்போது ஒரே அணியில் இருக்கிறோம். விரைவில் ஒரே இயக்கமாகவும் மாறுவோம்.'
''தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?''
''இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத எந்தப் பிரதான கட்சிகளும் இல்லை. பாரதிய ஜனதா கட்சி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிதான் முன்பு ஆட்சியை இழந்தது. ஊழல் குற்றச்சாட்டு என்பது வேறு; குற்றம் நிரூபிக்கப்படுவது என்பது வேறு. கட்சியில் இருக்கும் சிலர் மீது புகார் கிளம்பும். வழக்குப் பதிவுசெய்யப்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். பிறகு, விடுதலை ஆவார்கள். இது தொடர்கதைபோல நடக்கும் விஷயம். ஆனால், ஒரு கட்சியையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது!''
''ஜெயலலிதா பிரதமர் பதவிக்குத் தகுதியானவரா?''
''இந்திய அளவில் மாற்றம் வேண்டும் என அவர் நினைக்கிறார்; பேசுகிறார். அவர் நினைக்கும் மாற்றத்தை முதலில் தமிழக அளவில் நிகழ்த்தியிருக்க வேண்டும். அந்த மாற்றம் இந்திய அளவிலான மாற்றத்துக்கு வலு சேர்த்திருக்கும். தமிழகத்திலேயே எந்த மாற்றத்தையும் உருவாக்காதபோது, எப்படி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்கிவிட முடியும்? 'கூரை ஏறி கோழிப் பிடிக்க முடியாதவன், எப்படி வானம் ஏறி வைகுண்டம் போகப்போறான்?’ என்று கிராமத்துப் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். ஜெயலலிதா சொல்வதும் அப்படித்தான் இருக்கிறது!''

புதிய தமிழகம் கட்சி கிளைப் பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா!

புதிய தமிழகம் கட்சியின் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி புதிய கிளைப் பொறுப்பாளர்கள் பதவியேற்பு மற்றும் பாராட்டு விழா 26.01.2014 அன்று தென்காசி இசக்கி மஹாலில் தன்மான தானைத் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6000 கிளை, இளைஞரணி, மகளிரணி பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

திருச்சி சிவாவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ஆதரவு...


 

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா போட்டியிடுவதாக திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார்.   திமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் என்று கூறினார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இதையடுத்து சென்னையில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமியை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கேட்டார் திருச்சி சிவா.

திங்கள், 20 ஜனவரி, 2014

டெல்லி மேல்–சபை தேர்தல்: தி.மு.க.வுக்கு ஆதரவு: கிருஷ்ணசாமி பேட்டி..


 


புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ஜனநாயகத்தை மீட்டெடுக்க தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளோம். டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.வும் அவருக்கு ஓட்டு போடுவோம்.
எனக்கும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் இடையே உள்ள பிரச்சினை கட்சி விவகாரம் ஆகும். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்.
புதிதாக அறிவிக்கப்பட்ட 12 ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை ரத்து செய்யனும். இதை வலியுறுத்தி 6–ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம்.
தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை கலைஞர் தான் முடிவு செய்வார். திருச்சி தி.மு.க. மாநாட்டில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோவையில் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 1000 வாகனங்களில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

ஜனநாயகத்தை மீட்டெடுக்க தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் கூட்டணியில் இணைந்துள்ளோம். டெல்லி மேல்–சபை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவாவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. எங்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.வும் அவருக்கு ஓட்டு போடுவோம்.

எனக்கும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் இடையே உள்ள பிரச்சினை கட்சி விவகாரம் ஆகும். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்.

புதிதாக அறிவிக்கப்பட்ட 12 ஐகோர்ட்டு நீதிபதி நியமனத்தை ரத்து செய்யனும். இதை வலியுறுத்தி 6–ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம்.

தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை கருணாநிதி தான் முடிவு செய்வார். திருச்சி தி.மு.க. மாநாட்டில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலின் கோவையில் என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஏற்று 1000 வாகனங்களில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்! இதுவரை நடைபெற்ற 2 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை இன வாரியாக நாளையே வெளியிட தமிழக அரசு தயாரா? புதிய தலைமுறை வாயிலாக தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்! தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்..

தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்! இதுவரை நடைபெற்ற 2 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை இன வாரியாக நாளையே வெளியிட தமிழக அரசு தயாரா? புதிய தலைமுறை வாயிலாக தமிழக முதல்வருக்கு டாக்டர் அய்யா சவால்!