எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நிலத்தடி நீர் விற்பனை ஐகோர்ட் தடையை விலக்கக்கோரி டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் மனுத்தாக்கல்




ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து தனியார்தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோட்டாட்சியர் விதித்த தடை உத்தரவுக்குஎதிராக ஐகோர்ட் கிளை விதித்துள்ள தடையாணையை விலக்கக்கோரி டாக்டர்கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் ராட்சத போர்வெல்அமைத்து தண்ணீர் எடுத்து, தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்தார்.
 இந்தத் தடையை எதிர்த்து கல்மேடு வடக்கு பகுதியை சேர்ந்த பால்ராஜ் உட்பட 12 பேர்,ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதி அருணா ஜெகதீசன்விசாரித்து, தண்ணீர் விற்பனைக்குத் தடை விதித்து கோவில்பட்டி கோட்டாட்சியர்பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த தடையை விலக்கக்கோரி ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவும், புதிய தமிழகம் கட்சியின்தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவைவக்கீல் பாஸ்கர் மதுரம் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் 800 அடி ஆழத்திற்கு போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.இதனால், இப்பகுதி நிலங்கள் கட்சி வறட்சிக்குள்ளாகி வருகின்றன. பொதுமக்கள் கிராமங்களைக் காலி செய்துவேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர். சிலர் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புப் பெற்று, தண்ணீர்எடுத்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நிலத்தடி நீரைச் சுரண்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இதைத் தடுக்க நான் கோட்டாட்சியரிடம் மனுக் கொடுத்தேன். அந்த மனுவை ஏற்று, விவசாய நிலங்களில்இருந்து தண்ணீர் எடுத்து, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
ஏற்கனவே ஓட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்குச் சென்று விட்டதால் குடிநீர் பஞ்சம்தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்குகின்றனர். எனவே, கோட்டாட்சியர்உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும். இந்த வழக்கில் என்னை எதிர்மனுதாரராகச் சேர்க்கஅனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஐ.நா துணை அலுவலகம் முற்றுகை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர்.க.கிருஷ்ணசாமி MD MLA .,அவர்களுடன் ஆயிரக்கணகானோர் கைது...



தனிஈழம் அமைத்திட ஐ.நா மேற்பார்வையில் ஈழத்தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு உட்பட, கடந்த 60 வருடங்களாக ஈழ தமிழ் மக்கள் மீதும்,மலையகத் தமிழர்கள் மீதும் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய மனிதஉரிமை மீறல்கள்,போர் விதிமுறை மீறல்கள் அனைத்தும் இனஒழிப்பு நடவடிக்கைகளே.மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விசாரிக்க அனைத்துலக சுதந்திரமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது ஐ.நா-வில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் கடந்த ஆண்டைப் போலவே! நீர்த்துப் போய்விட்டது.
இதே சரத்துக்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஈழ தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது.
எனவே இலங்கை அரசுக்கெதிராக அமெரிக்க தீர்மானத்தில் உரிய திருத்தத்துடன் வலுவான தீர்மானம் கொண்டு வர இந்திய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.
மாநில அரசு இன்னும் கூடுதலாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.தமிழர்களுக்கு எதிராக நடந்தேறியுள்ள கொடிய போர்முறை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்ககூடாது என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இன்று 20.03.2013 காலை 10.30 மணி அளவில் சென்னையிலுள்ள ஐ.நா துணை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இப்போராட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான புதிய தமிழகம் கட்சியினர் காவல்துறையினரின் தடையை மீறி ஐ.நா துணை அலுவலகத்தை முற்றிகையிட்டு, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதானார்கள்.









செவ்வாய், 19 மார்ச், 2013

ஐ.நா முன்பு ஆர்ப்பாட்டம்! டாக்டர் கிருஷ்ணசாமி



சென்னையில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் முன்பு வருகிற 20-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்து உள்ளார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அங்கு இன அழிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் பூர்வீகமாக குடியிருந்து வரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது.
அதில் ராணுவமே விவசாயம் செய்து அந்த பொருட்களை யாழ்ப்பாணம் பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, தமிழர்கள் செய்து வரும் சிறு வணிகத்தையும் அழித்து வருகிறது. அத்துடன் தமிழ் மீனவர்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அதிநவீன கருவிகளை கொடுத்து உள்ளது.
மேலும் ஈழத்தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து அங்கு தமிழர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இலங்கை அரசு மீது கொண்டு வரப்படும் தீர்மானம் வலுவானதாக இருக்க வேண்டும்.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. இலங்கையில் 1 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அமைதி முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் வெடிக்கும் முன் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
மேலும் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் (யுனிசெப்) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் கட்சி பேதமின்றி நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். 

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். 

சனி, 16 மார்ச், 2013

மாணவர்களை சந்தித்தார் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்



இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடவும், ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க கோரியும்,கடந்த வாரம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கோயம்பேடு பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களை நள்ளிரவில் காவல்துறையினர் அகற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சந்தித்தார்கள்.

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி ஐ.நா. துணை அலுவலகம் முன்பு மார்ச் 20–ந் தேதி ஆர்ப்பாட்டம் - டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ



இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அங்கு இன அழிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் பூர்வீகமாக குடியிருந்து வரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது.
அதில் ராணுவமே விவசாயம் செய்து அந்த பொருட்களை யாழ்ப்பாணம் பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து, தமிழர்கள் செய்து வரும் சிறு வணிகத்தையும் அழித்து வருகிறது. அத்துடன் தமிழ் மீனவர்களுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அதிநவீன கருவிகளை கொடுத்து உள்ளது.
மேலும் ஈழத்தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் விசாரணையின்றி கைது செய்யப்படுகிறார்கள். தொடர்ந்து அங்கு தமிழர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் இலங்கை அரசு மீது கொண்டு வரப்படும் தீர்மானம் வலுவானதாக இருக்க வேண்டும்.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. இலங்கையில் 1½ லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அமைதி முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் வெடிக்கும் முன் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
மேலும் இலங்கை மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தி வருகிற 20–ந் தேதி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. துணை அலுவலகம் (யுனிசெப்) முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் கட்சி பேதமின்றி நிர்வாகிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு டாக்டர்.க. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள்தெரிவித்தார்

சனி, 9 மார்ச், 2013

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா சபை நிறுவிட வேண்டும்- ஜெனிவா மாநாடு.


லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று அழித்த ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா சபை நிறுவிட வேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறுகின்ற ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையையும்,போர் விதிமுறை மீறல்கள்,இன அழிப்பு நடவடிக்கைகளை விசாரிக்கவும் வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மாநாடு,ஜெனிவா நகரில் நடைபெற்றது.






இந் நிகழ்வில் தமிழகத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவரும்,உலக பாதுகாப்பு செயலகத்தின் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன், ம.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, முன்னாள் திட்டக்குழுதலைவர் நாகநாதன்,புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன், டாக்டர்.தாயப்பன்  லண்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அயர்லாந்து பிரதிநிதிகள், மலேசியா, இத்தாலி, பிரான்ஸ், கனடா பா.உ, தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மொறிசியஸ் பிரதிநிதிகள், இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேந்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட, குறிப்பாக தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.