எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 20 டிசம்பர், 2016

புதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்தல்...!!!.

புதியதமிழகம் கட்சி சந்தித்த முதல் பாராளுமன்ற தேர்தல்...!!!.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு அரசியல் இயக்கமாக ,புதிய தமிழகம் இயக்கம் 1997 டிசம்பர் 15ம் தேதி துவங்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் 1998 ஜனவரி மாதம் நடைபெற்றது. இயக்கம் துவங்கிய ஒரே மாதத்தில் தேர்தலை சந்தித்தது.
போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் வாக்கு நிலவரம்.
தென்காசி :1,23,900..(.டாக்டர் . க .கிருஷ்ணசாமி .. M .D .M .L .A )
சிவகாசி :1,06,726.
நெல்லை :86,500.
இராமநாதபுரம் :53,542.
பெரியகுளம் :20,219.
திண்டுகல் :20,126. ...தொடரும் ....

தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்...!!!.

தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்...!!!. மாவட்ட வாரியாக தேதி மற்றும் நடைபெறும் இடங்கள்.... மாவட்ட ஒன்றிய , நகர பொறுப்பாளர்கள் தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை வெற்றியடைய , அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டுகிறோம் ...!!!.
💥பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்.
💥எம் இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
💥மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
💥தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.
ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
*நவம்பர்-25 நெல்லை.
*டிசம்பர்-03 தூத்துக்குடி
.
*டிசம்பர்-05 விருதுநகர்
.
*டிசம்பர்-10 இராமநாதபுரம்
.
*டிசம்பர்-15 திருச்சி
.
*டிசம்பர்-17 மதுரை
.
*டிசம்பர்-19 திண்டுகல்
.
*டிசம்பர்-24 தேனி.
*டிசம்பர்-27 கரூர்
.
*ஜனவரி-05 தஞ்சாவூர்
.
*ஜனவரி-06 திருவாரூர்.
*ஜனவரி-07 பெரம்பலூர்.
*ஜனவரி-08 நாமக்கல்
.
*ஜனவரி-09 சேலம்
.
*ஜனவரி-10 ஈரோடு
.
குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மாலை மூன்று மணிக்கு பேரணி துவங்குகிறது.
ஓரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க, அரசியல் அதிகாரம் வென்றெடுக்க, அரசியல் பாகுபாடின்றி அலைகடலென திரண்டு வாரீர்

துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்..... டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் பேட்டி

துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்..... டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் பேட்டி ............................இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நெல்லை, திண்டுக்கல், வால்பாறை, கோத்தகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு, தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளது. இந்த இடங்களை நிரப்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில், இரண்டு பல்கலைக்கழகங்களில் பட்டியலின சமுதாயத்தினரை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற வர வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலிப்பதைத் தடுக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள்

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்..

...27.12.15 அன்று கரூர் மாவட்டத்தில்....மாலை மூன்று மணிக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் ... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் டாக்டர். க கிருஷ்ணசாமி ..M .D .M .L .A .,அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. தேவேந்திர குல வேளாளர்களின் உ ரிமைகளை மீட்க அணிதிரள்வீர் ...!!!.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள்

வாசுதேவநல்லூா் பாக்கியராஜ் படுகொலை வழக்கு ..!!!..........சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல்....!!!.

.....................................நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே உள்ள சங்குபுரம் கிராமத்தை சோ்ந்த பாக்கியராஜ் கடந்த 12.10.15 அன்று மா்மமான முறையில் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா். ஆனால் வாசுதேவநல்லுா் போலிசாா் சந்தேக மரணம் என்றும் மின்னல் தாக்கி இறந்து விட்டாா் என்றும் வழக்கை திசை திருப்ப முயன்றனா். ஆனால் இப்பிரச்சணையை புதிய தமிழகம் கட்சி தலையிட்டதன்போில் டாக்டா் அய்யா அவா்களின் ஆணைக்கினங்க மாநில இளைஞரணி செயலாளா் திரு. பாஸ்கா் மதுரம் அவா்களின் முயற்சியில் பாக்கியராஜ் மரணம் கொலை வழக்காக மாற்றகோாியும், சிபிசிஐடி விசாரணை கோாியும் மதுரை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய்பட்டுள்ளது.
நன்றி - தி இந்து நாளிதழ்