சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்தார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். இன்று ஜி.கே. வாசனை அவர் சந்தித்துப் பேசினார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, டாக்டர் கிருஷ்ணசாமி இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஜி.கே.வாசன் கூறியதாவது:- தமிழகத்தின் ஒட்டு மொத்த நலன் காக்க தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார். இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் இல்லை. தமிழக மக்களின் பிரச்சனையில் அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு தமிழகத்துக்கு நியாயமான தீர்வு பெற ஒன்று சேர உள்ளோம். டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்த நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது. சமீப காலமாக தமிழக மக்களுக்கு அண்டை மாநிலம் மற்றும் அருகில் உள்ள நாடால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்' என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, ‘தி.மு.க. தலைவரை நேற்று சந்தித்தேன். அதே போல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இன்று சந்தித்து உள்ளேன். இந்த சந்திப்பு அரசியல் நோக்கத்திற்கான சந்திப்பு அல்ல. தேசிய அக்கறை மற்றும் தமிழகத்தின் நலனுக்காக நடந்த சந்திப்பு. தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். தமிழகத்தின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.
வியாழன், 7 மே, 2015
செவ்வாய், 5 மே, 2015
கருணாநிதி-டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு: தமிழக பிரச்சினைகளுக்காக புதிய கூட்டமைப்பு தொடக்கமா?
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.
அதன்பிறகு நிருபர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியை சந்தித்து தமிழகத் தின் முக்கிய பிரச்சினைகள், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். காவிரி, முல்லை பெரி யாறு பிரச்சினைகள், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை என அண்டை மாநிலங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தமிழக அரசின் செயலற்ற தன்மையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக இருவரும் விவாதித்தோம்.
ஈழத் தமிழர்களுக்காக ‘டெசோ’ அமைப்பு உள்ளது. அதுபோல தமிழக பிரச்சினைகளுக்காக அரசியலை மறந்து இணைந்து செயல்பட புதிய கூட்டமைப்பு தொடங்குவது குறித்தும் பேசினோம். தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. அதுகுறித்து தேர்தல் நேரத்தில் பேசுவதுதான் சரியாக இருக்கும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
விஜயகாந்த் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து கேட்டபோது, ‘‘தமிழர் பிரச்சினை களுக்காக எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் யார் ஈடுபட்டாலும் வரவேற்கத் தக்கதே’’ என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.
கருணாநிதியுடன் டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு அரசியல் சார்பற்ற புதிய இயக்கத்திற்கு ஆதரவு கேட்டார்...

சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, அரசியல் சார்பற்ற புதிய இயக்கத்திற்கு ஆதரவு கேட்டார்.
கருணாநிதியுடன் சந்திப்புதி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
பின்னர் வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அண்டை மாநில பிரச்சினைதமிழ்நாடு அண்டை மாநிலங்களுடன் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. ஆந்திராவுடன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது மற்றும் செம்மர கடத்தல் பிரச்சினைகளையும், கர்நாடகாவுடன் காவிரியின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினையையும், கேரளாவுடன் முல்லைப்பெரியாறு பிரச்சினையையும் சந்தித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இது தொடர்பாக போராட்டங்கள் நடத்துவதோடு விட்டுவிடுகின்றன. எனவே, தமிழர்கள் நலன் காக்க ஒருங்கிணைந்த அரசியல் சார்பற்ற அமைப்பு அவசியம் என்பதை உணர்ந்து புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
கருணாநிதி ஆதரவுஅதற்கு ஆதரவு திரட்டும் வகையில் முதல் முயற்சியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினேன். அவரும் இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற இயக்கம் அவசியம் என்று கூறி என்னை பாராட்டினார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு சட்டத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அண்டை மாநில பிரச்சினைகள் மட்டுமல்லாது இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்த்தும் புதிய இயக்கம் போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பதில்களும் வருமாறு:–
தேர்தல் பற்றி பேசவில்லைகேள்வி:– தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதுபற்றி எதுவும் பேசினீர்களா?.
பதில்:– புதிய இயக்கத்திற்கு ஆதரவு கேட்கத்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது.
கேள்வி:– புதிய இயக்கம் தொடங்குவதாக சொல்கிறீர்கள். செயல்பாடு எப்படி இருக்கும்?.
பதில்:– இந்த புதிய இயக்கத்தில் பிரச்சினைகளுக்கு சட்டப்படி தீர்வுகாண குழு அமைக்கப்படும். அவர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
பதவி விலக வேண்டும்கேள்வி:– தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே?.
பதில்:– தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அரசு அதிகாரிகளே கீழுள்ள அதிகாரிகளை மிரட்டி தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். தற்போது, அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. எனவே, ஆட்சியாளர்களும், தமிழக ஆளுநரும் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

கோபாலபுரத்தில் கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கோபால புரத்தில் அவரது வீட்டில் இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு முடிந்ததும் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக காவிரி, முல்லைப் பெரியாறு, மேகதாது, செம்மரக் கடத்தல் பிரச்சனைகள் பற்றி பேசினோம்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் நலன் காக்க புதிய அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக எல்லா கட்சி தலைவர்களையும் சந்திப்பேன். அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்.
இது தேர்தலுக்கான சந்திப்பு அல்ல, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது. அப்போது பேசுவது தான் சரியானது.
தமிழர் பிரச்சனைகளுக்காக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் யார் ஈடுபட்டாலும் வரவேற்கத்தக்கதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருணாநிதியுடன் டாக்டர் கிருஷ்ணசாமி திடீர் சந்திப்பு ஏன்?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து,கருணாநிதியுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக உள்ள தனி அமைப்பு போல், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கும் இணைந்து செயல்படக்கூடிய விதத்தில் புதிய கூட்டமைப்பு ஒன்றை தொடங்குவது குறித்து பேசியதாக அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருவதாகவும், இதனை தடுக்கத் தவறிய ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கருணாநிதியை திடீரென டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசியிருப்பது, கூட்டணிக்கான அச்சாரம் என்றே கூறப்படுகிறது.
ஆளுநர் ரோசய்யாவை மாற்ற வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செயலற்று கிடக்கும் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்காததால் தமிழக ஆளுநர் ரோசய்யாவை மாற்ற வேண்டும். தமிழகத்தை செம்மையாக்க, செழுமையாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. அண்டை மாநிலங்களால் தமிழகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதற்கு நிரந்தர குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளை இணைத்து போராட புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக திமுக தலைவர் கலைஞரை சந்திக்கிறோம் என்றார்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில்105 கவுரவ கொலைகள் நடைபெற்றுள்ளன: கிருஷ்ணசாமி பேட்டி...

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 105 கவுரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அரசியல் சார்பற்ற மக்கள் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த மக்கள் இயக்கம் மூலம் கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகள், மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் நாளை திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளேன்.
தமிழகத்தில் ஒரு சதவீதம் மட்டும்தான் சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன. இதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாத குடும்ப உறுப்பினர்கள் கூலி ஆட்களை வைத்து கவுரவக் கொலைகளை செய்கின்றனர். கடந்த ஓராண்டில் 150 கவுரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)