திங்கள், 14 அக்டோபர், 2013
சனி, 12 அக்டோபர், 2013
ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு அளித்து நிரப்ப வேண்டும்....
நெல்லையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை இளநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்
29 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதித்தேர்வில் 60 சதவீதம் மார்க்
பெற்றவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 69 சதவீத இடஒதுக்கீடு முறை
இங்கு பின்பற்றப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. பின்னடைவு ஆசிரியர்
காலிப்பணியிடங்களை தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு அளித்து நிரப்ப வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
நடக்கும்.
தாதுமணல் அள்ளுவதற்கு
அரசு நிரந்தரத்தடை விதிக்க வேண்டும். இயற்கை வளத்தை கொள்ளையடிப்பவர்கள்
மீது அரசு இரக்கம் காட்டக்கூடாது. தாதுமணல் அள்ள தடை விதித்ததால் பல ஆயிரம்
பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் என்பதை ஏற்க முடியாது. கிரானைட் தொழில்,
தாமிரபரணி மணல் கொள்ளை, கடத்தல் மூலமாகவும் பலர் வேலைவாய்ப்பு பெறலாம்.
தொழில் சட்டப்பூர்வமாக நடக்கிறதா என பார்க்க வேண்டும்.
தாதுமணல்
அள்ளுவதற்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு
போராட்டங்கள் நடக்கின்றன. இப்பிரச்னையில் தன் நிலைப்பாட்டை அரசு தெரிவிக்க
வேண்டும். ககன்தீப்சிங் பேடி அறிக்கையை வெளியிட வேண்டும். தாதுமணல்
விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வல்லநாட்டில்
தனியார் இன்ஜி., கல்லூரி முதல்வரை மாணவர்கள் கொலை செய்த சம்பவம்
கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டும்.
கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் பொறுப்பு கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு திமுக தலைவர் எழுதிய கடிதத்தை நான்
பார்க்கவில்லை. இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னையில் வரும் 18ம்
தேதி நடக்கும் மாவட்டப்பொறுப்பாளர்கள், அரசியல் உயர்மட்டக்குழு
உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பார்லிமென்ட் தேர்தல்
நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கட்சித்தலைவர்
என்ற முறையில் தென்காசி தொகுதியில் மக்களை சந்தித்து வருகிறேன்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் செல்லப்பா, மேற்கு மாவட்டச்செயலாளர் அரவிந்தராஜா உடன் இருந்தனர்.
நெல்லையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை இளநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 29 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதித்தேர்வில் 60 சதவீதம் மார்க் பெற்றவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 69 சதவீத இடஒதுக்கீடு முறை இங்கு பின்பற்றப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. பின்னடைவு ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு அளித்து நிரப்ப வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.
தாதுமணல் அள்ளுவதற்கு அரசு நிரந்தரத்தடை விதிக்க வேண்டும். இயற்கை வளத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது அரசு இரக்கம் காட்டக்கூடாது. தாதுமணல் அள்ள தடை விதித்ததால் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் என்பதை ஏற்க முடியாது. கிரானைட் தொழில், தாமிரபரணி மணல் கொள்ளை, கடத்தல் மூலமாகவும் பலர் வேலைவாய்ப்பு பெறலாம். தொழில் சட்டப்பூர்வமாக நடக்கிறதா என பார்க்க வேண்டும்.
தாதுமணல் அள்ளுவதற்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. இப்பிரச்னையில் தன் நிலைப்பாட்டை அரசு தெரிவிக்க வேண்டும். ககன்தீப்சிங் பேடி அறிக்கையை வெளியிட வேண்டும். தாதுமணல் விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வல்லநாட்டில் தனியார் இன்ஜி., கல்லூரி முதல்வரை மாணவர்கள் கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டும். கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் பொறுப்பு கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு திமுக தலைவர் எழுதிய கடிதத்தை நான் பார்க்கவில்லை. இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னையில் வரும் 18ம் தேதி நடக்கும் மாவட்டப்பொறுப்பாளர்கள், அரசியல் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பார்லிமென்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கட்சித்தலைவர் என்ற முறையில் தென்காசி தொகுதியில் மக்களை சந்தித்து வருகிறேன்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் செல்லப்பா, மேற்கு மாவட்டச்செயலாளர் அரவிந்தராஜா உடன் இருந்தனர்.
திங்கள், 30 செப்டம்பர், 2013
ஓட்டப்பிடாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்..
ஓட்டப்பிடாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள்களை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வழங்கினார்.
இலவச சைக்கிள்

ஓட்டப்பிடாரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறளுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வ.உ.சிதம்பரனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விழாவுக்கு ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் விஜயன் வரவேற்று பேசினார்.
கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.
விழாவில் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், 65 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 30 ஊனமுற்றோருக்கான இலவச மூன்று சக்கர சைக்கிள், 150 ஊனமுற்றோருக்கு தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது புதிய தமிழகம் மாநில இளைஞரணி செயலாளர் வக்கீல் மதுரம் பாஸ்கர், மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் கனகராஜ், கட்சி நிர்வாகிகள் பட்டவராயன், செல்லப்பா, கண்ணன், மாவட்ட ஊனமுற்றோருக்கான ஒருங்கினைப்பாளர் ராஜசெல்வி, யூனியன் ஆணையாளர் சசி சிவானந்தம், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் லதா மாசாணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)