எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 26 ஜூன், 2011

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மழைக் காலத்திற்குள் அனைத்து குளங்கள், கால்வரத்துக்கள் சரி செய்ய நடவடிக்கை- டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேட்டி

 


"பொதுமக்கள் கூலிக்கு வேலை செய்வதாக நினைத்து இதனை செய்யக் கூடாது. நமது கிராமத்தின் விவசாயம் செழிக்கவும்குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்று எண்ணி வேலை செய்ய வேண்டும்"
ஓட்டப்பிடாரம் தொகுதியில் மழைக் காலத்திற்குள் அனைத்து குளங்கள், கால்வரத்துக்கள் சரி செய்ய நடவடிக்கை-
 ஓட்டப்பிடாரம் அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.  குளங்கள் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்தார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அதனைத் தொடர்ந்து அனைத்து பாசன குளங்கள் மற்றும் கால்வரத்துக்களை கடந்த இரண்டு வார காலமாக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.கிருஷ்ணசாமி பார்வையிட்டு பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை குலசேகரநல்லூர்  ஊராட்சிக்கு உட்பட்ட ஓசநூத்து துக்கன்குளத்தில் குளங்கள் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். 
துக்கன்குளத்தில் இருந்து ஆரம்பிக்கும் கால்வரத்து குணவங்குளம், செவல்குளம், மலர்குளம், பெரியகுளம் உள்ளிட்ட ஏழு குளங்கள் நிரம்பும் வகையில் சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ளது. ஆகவே இந்த கால்வரத்துகளையும், குளங்களையும் தூர்வார வேண்டும் எனவும், நான்கு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத துக்கன்குளம் சீரமைக்கப்படவும் டாக்டர்.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இந்தக் குளத்தினை சீரமைத்திட  ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அதனைப் பார்வையிட்டு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மண்வெட்டி எடுத்து மண் தோண்டிய டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களது குறைகளையும் சம்பள விபரங்களையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுமக்கள் கூலிக்கு வேலை செய்வதாக நினைத்து இதனை செய்யக் கூடாது. நமது கிராமத்தின் விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்று எண்ணி வேலை செய்ய வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள அளவிற்கு வேலை செய்து 120 ரூபாய் சம்பளத்தினை எல்லோரும் பெற வேண்டும். நமது கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணி வேலை செய்ய வேண்டும். தமிழக அரசு விவசாயத்தினை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
 அதனை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டால்தான் விவசாயம் செழிக்கும். இப்பகுதியில் புதியம்புத்தூர் மலர்குளம், ஓட்டப்பிடாரம் பெரியகுளம் உள்ளிட்ட குளங்கள் பெருகினால் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இன்னும் சிலநாட்களில் மழைக்காலம் துவங்கி விடும் அதற்கு முன்பு குளங்கள்கால்வரத்துக்கள் தூர்வாரப்பட்டுமறு சீரமைப்பு செய்து விவசாயத்திற்கான தண்ணீர் தேவைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.  ஆய்வின் போது ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஆணையாளர் ராஜாமணிபொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராஜன்ஒன்றிய உதவிப் பொறியாளர் எஸ்.ஜே.ரவிஊராக வேலை வாய்ப்பு திட்டத்தின் ஒன்றிய பணி  மேற்பார்வையாளர்  மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகளும்ஒன்றிய கவுன்சிலர் கண்ணன்புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கனகராஜ்ஒன்றிய செயலாளர் பாபுமாவட்ட விவசாய அணி செயலாளர் பட்டவராயன்மாவட்ட இணை செயலாளர் எல்.கே.முருகன்புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முனியசாமிஓட்டப்பிடாரம் நகர செயலாளர் மனோகரன்சுடலைமணிசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக