எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 5 ஜூன், 2011

தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேட்டி

 


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவரும், ஓட்டப்பி்டாரம் தொகுதியின் எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நெல்லை வந்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து ஓட்டப்பிடாரம் மற்றும் நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளில் புதிய தமிழகம் வெற்றி பெற்றுள்ளது.

30 நாட்களுக்குள் ஓட்டப்பிடாரம் பகுதியில் தடையில்லா குடிநீர், தேவையான போக்குவரத்து,சீரான மின்விநியோகம் கிடைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.

நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் வல்லநாடு,தெய்வச்செயல்புரம்,புதுக்கோட்டை மற்றும் வாகைகுளம் ஆகிய அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல வேண்டும் என போக்குவரத்து மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.

சமச்சீர் கல்வி என்பது திமுக ஆட்சியில் பொதுப்பாட திட்டத்தைப் போலவே உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு அரசு கல்லூரிகளை தேர்வு செய்யும் பெற்றோர் பள்ளி கல்விக்கு மட்டும் தனியார் பள்ளிகளை நாடுவதற்கு காரணம் அங்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் இருப்பது தான்.

எனவே தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளுக்கும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் சமச்சீர் கல்வி தானாக கிடைக்க வழி பிறக்கும்.

கல்விக்கூடங்களில் அதிக அளவு பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதில் தமிழக அரசு நேரடியாக தலையிட வேண்டும் என சட்டப்பேரவையில் நான் வலியுறுத்துவேன் என அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக