எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 1 செப்டம்பர், 2011

செங்கொடி உடலுக்கு நடிகர்கள் சத்தியராஜ், சேரன், டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி













ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 28.08.2011 அன்று காஞ்சீபுரத்தில் மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த இளம்பெண் செங்கொடி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தீக்குளித்து இறந்தார்.



தகவல் கிடைத்ததும் பல்வேறு கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்பு நிர்வாகிகள், சினிமா உலக பிரமுகர்கள் ஏராளமானோர் காஞ்சீபுரத்திற்கு விரைந்து வந்து செங்கொடிக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.



அவரது உடல் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்களம்பாடி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள மக்கள் மன்ற அலுவலகத்தில் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.

செங்கொடியின் உடல் அடக்கம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை நிறுத்த கோரும் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்ததால் உடல் அடக்கத்தை ஒரு நாள் தள்ளிவைக்க மக்கள் மன்றம் முடிவு செய்தது. அதன்படி நேற்று வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தது. 8 வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.



இதனை அடுத்து செங்கொடியின் உடல் அடக்கம் இன்று (31.08.2011) நடக்கிறது. இதில் பங்கேற்க கட்சி தலைவர்கள், தமிழர் அமைப்பு நிர்வாகிகள் காஞ்சீபுரத்தில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.



செங்கொடியின் உடலுக்கு நடிகர் சத்தியராஜ், இயக்குநரும் நடிகருமான சேரன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக