எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

முதுகுளத்தூரில் 3 நாள் உண்ணாவிரதம் : டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு

ராமநாதபுரம், செப்.22 (டிஎன்எஸ்) சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, முதுகுளத்தூரில் 3 நாள் உண்ணா விரதம் இருக்கப்போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி எம்.எல்.ஏ. ராமநாதபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பரமக்குடியில் கடந்த 11-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தேவையற்றது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கான சட்ட விதிமுறைகள் எதையும் போலீசார் கையாளவில்லை. கொடிய குற்றங்களை புரிந்தவர்களுக்கு கோர்ட்டு மூலம் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று போராடி வரும் இந்த காலக்கட்டத்தில் பரமக்குடியில் 100 பேர், 200 பேர் கொண்ட கும்பல் மறியலில் ஈடுபட்டதற்காக துப்பாக்கி சூடு நடத்தி 6 பேர் உயிரை பறித்துள்ளனர். இதற்கு காரணமான டி.ஐ.ஜி. சந்திப்மிட்டல், துணை கமிஷனர் செந்தில்வேலன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

பரமக்குடி கலவரம் தொடர்பாக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் தலைமையிலான விசாரணை உண்மையை வெளி கொண்டுவர உதவாது. எனவே 2 அமர்வு நீதிபதிகளை கொண்ட குழுவை அமைத்து பரமக்குடி கலவரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். சமூக ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் லாபம்தேட சிலர் முயன்று வருகிறார்கள். அவர்களுக்கு யாரும் துணை போகக்கூடாது. உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். தனித்து போட்டியிடுவதா? கூட்டணியா? என்பதை பின்னர் அறிவிப்போம்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நான் 3 நாள் உண்ணாவிரதம் இருக்ப்போகிறேன். உண்ணாவிரதம் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார். (டிஎன்எஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக