எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 26 நவம்பர், 2013

நிர்வாக வசதிக்காக தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


நிர்வாக வசதிக்காக தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
தென்காசி, நவ. 24–
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றாலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பரமக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து நடத்திய நீதி விசாரணை அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 30–ந்தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 40–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த பகுதியில் கிடைக்கும் ஈத்தலை வெட்டி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழில் அவர்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக ஈத்தல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது கண்டனத்துக்குரியது. தடையை ரத்து செய்து தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் எவ்வளவோ மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. அதே போல் நெல்லையில் இருந்து தென்காசியையும் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்தேன். இம்மாத இறுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். வருகிற டிசம்பர் 15–ந் தேதி முதல் 3 மாதங்கள் விழித்திரு தமிழா, எழு தமிழா என்ற கோஷத்துடன் மாநிலம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக