எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 13 ஜூன், 2013

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வருகையைத் தடுக்க போலீஸ் தீவிர வாகன சோதனை


ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் புதிய தமிழக கட்சி தலைவர், மருத்துவர் கிருஷ்ணசாமி வருகையைத் தடுக்க, நேற்றும்(புதன் கிழமை), இன்றும்(வியாழக்கிழமை) போலீஸார், தீவிர வாகன சோதனை நடத்தினர். 
இமானுவேல் சேகரன் நினைவு நாளை, அரசு நிகழச்சியாக கொண்டாடுதல், பள்ளர் இனத்தை தேவேந்திர குலத்தில் சேர்த்தல், அருந்ததியர் இட ஒதுக்கீடு வரைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில், ஜூன்.13(வியாழக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக, அந்த கட்சியின் தலைவர், மருத்துவர் ஆர்.கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல், புல்லந்தை, தேவிபட்டினம், போகலூர், பேரையூர் ஆகய 5 ஊர்களில் உண்ணாவிரதம் நடைபெறுவதாகவும், இதில் தானும் கலந்து கொள்வதாகவும் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார்.
ஆனால் உண்ணாவிரதத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்ததோடு, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் கிருஷ்ணசாமி நுழையக் கூடாது என்ற முறையி்ல 144 தடை உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் க.ந்நத குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயி்லவாகணன் ஆகியோர் அறிவித்திருந்தனர். ஆனாலும் தடையை மீறி ராமநாதபரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, தனது கட்சியினரை உண்ணாவிரதம் இருக்கச் செய்வேன் என்றும் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
எனவே நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் எந்த வழியிலாவது இருந்து கிருஷ்ணசாமி நுழைவதைத் தடுக்க ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து கமுதி பகுதியில், அருப்புக்கோட்டை சாலையில் கிழாமரத்துப்பட்டி என்ற இடத்திலும், சாயல்குடி அருகே தூத்துக்குடி சாலையில் கன்னிராஜபுரம் என்ற இடத்திலும், பார்த்திபனூர் அருகே நரிக்குடி சாலையில் பிடாரி சேரி என்ற இடத்திலும், அ.பரலை என்ற இடத்திலும் பலத்த போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. இதே போன்று பரமக்குடி, ராமநாதபுரம், தேவிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். சோதனைச் சாவடிகள் அமைத்து நேற்று பகல் முதல் இரவு வரையிலும் பின்னர் மறு நாளும் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்களில் கிருஷ்ணசாமி உள்ளாரா? என்று கடும் சோதனை போட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக