ஓட்டபிடாரம் தொகுதியில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியங்கள் வங்கி முலம் பயிர்கடன்கள் பெற்று தருவதற்கு நடவடிக்கை என்று MLA டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். புதுகோட்டை சத்யா மகாலில் ஓட்டபிடாரம் தொகுதி விவசாய வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.ஓட்டபிடாரம் தொகுதி MLA டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.ஒன்றிய அ தி மு க விவசாய அணி செயலாளர் VPR சுரேஷ் முன்னிலை வகித்தார்.வேளாண்மை துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் தோட்ட கலைத்துறை உதவி இயக்குனர்கள் அல்பர்ட்,கனகராஜ்,வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் சங்கர்ராஜ்,இளநிலை பொறியாளர் சிதம்பரம்,கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் அசோகன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.புதிய தமிழகம் மாவட்ட செயலர் கனகராஜ்,ச ம க ஒன்றிய செயலர் ஜெகன் விவசாய சங்க தலைவர்கள் நிகோலஸ்,பிள்ளை முத்து,முருகேசன்,உட்பட விவசாயிகள் பலர் கருத்தாய்வில் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து MLA கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில் கடந்த 2006 முதல் 5 ஆண்டுகள் விவசாயம் மிகவும் குறைந்து விட்டது.விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் விவசாயம் செய்யவில்லை சரியான நேரத்தில் விதைகள் உரமானியம்,வங்கிகள் முலம் பயிர்கடன்கள்,உரமானியம் உட்பட பல்வேறு வசிதிகளை மேம்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது என்றும் கிருஷ்ணசாமி கூறினார்,அதனை தொடர்ந்து மானியவிலையில் உர முடைகள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக