எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 21 ஜூன், 2011

டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ஓட்டப்பிடாரம் தொகுதி பாசன குளங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்

 


புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் கருத்தரங்கை ஒட்டி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பல குளங்கள், கால்வரத்துகள், ஓடைகள் தூர் வாரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுக்கோட்டையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உப்போடை பல ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை ஒட்டி டாக்டர். கிருஷ்ணசாமி கோரம்பள்ளம் குளம், காலான்கரைகுளம், அத்திமரப்பட்டி தாம்போதி பாலம், குலையன்கரிசல்  48 கண் மதகு, கூட்டாம்புளி குளம், பேய்க்குளம் குளம், பாசன விவசாய மடையான ஆறுமுகமங்கலம் குளம், தருவைக்குளம் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான உப்போடை பல ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மணல் மற்றும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை வெளியேற்றும் 'ஸ்லாக்' எனப்படும் அபாயக் கழிவுமண்  கொட்டப்பட்டு மேடாக்கி வைத்திருப்பதை நேரில்  பார்வையிட்டு  உடனே நடவடிக்கை எடுத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பாசன குளங்களுக்கு நீர்வரத்தை தடுப்பது சட்ட விரோத செயல் எனவும் உடனே அதற்கு நோட்டிஸ் வழங்கவும் அறிவுறுத்தினார். உடன் உதவி செயற்பொறியாளர் விஜயராஜன், தாமிரபரணி வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் துரைசிங் கங்காதரன், தாமிரபரணி வடிநில பாசன பிரிவு அலுவலர் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.    





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக