ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட 90 சதவீத கிராமங்களில் சாலைகள் அமைத்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பல கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள் இல்லை.
கீழ கோடாங்கிப்பட்டி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வசதியில்லாமல் இருக்கின்றனர். மம்சாபுரம் பேரூராட்சியில் அம்மச்சியார்புரம் காலனி மக்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.
பாட்டக்குளத்தில் எனது காருக்கு பின்னால் வந்த காரை, சமூக விரோதிகள் தாக்கியதில் பூமுடிராஜன் என்பவர் காயமடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் இன்று வரை கைது செய்யவில்லை.
மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை உருவாக்க, சுற்றுப்பயணம் செய்ய ஆரம்பித்த நாளில் இருந்து இது போன்ற சம்பவம் நடந்து வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க கூடாது.
சமுதாய நல்லிணக்கம் வெறும் தேர்தல் கோஷமாக இருந்துவிட கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். சமுதாய நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக