எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 5 ஜூன், 2011

ராஜபக்சேவை தண்டிக்க முதல் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்-டாக்டர்.கிருஷ்ணசாமி

 


2011 மே 24 அன்று ஓட்டல் பாம்குரோவில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது புதிய தமிழகம் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி எம்.டி.,எம்.எல்.ஏ.அவர்கள் பேசியது...
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற குடும்ப ஆட்சிஅபரிமிதமான விலைவாசி உயர்வுமணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளைதொடர் மின்வெட்டு மற்றும் 2ஜி அலைக்கற்றை ஊழல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வெறுப்புற்ற தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியை அறவே ஒதுக்கி அ.தி.மு.க. கூட்டணிக்கு தங்களின் அமோக ஆதரவை நல்கி இருக்கின்றனர்.
எந்தெந்த அவலங்கள் கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றனவோ அவற்றிற்கெல்லாம் இப்போது நல்ல தீர்வினை எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டிலும் தமிழக முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததும் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் முன்வைத்திருக்கும் 7 திட்டங்கள் வரவேற்கத்தக்கதே.
எனினும் கடந்த ஐந்தாண்டுகால சமூக வாழ்க்கையில் தமிழகம்  பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய பின்னடைவை அடைந்திருக்கிறது.  இதனைச் சரிசெய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.  உள்ளாட்சி பிரதிநிதிகள் தி.மு.க. கூட்டணியைச் சார்ந்தவர்கள் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற பிறகு குடிநீர்தெருவிளக்கு பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.  ஏற்கனவே உள்ளாட்சிகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
அடுத்து வரும் 3, 4 மாதங்களும் வறட்சி மாதங்களாகும்.  அதனால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.  செயல்படாத உள்ளாட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் ஒழிய தீர்வு வராது.  இது குறித்து ஆட்சியாளர்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்.
27.5.11 அன்று அவைத்தலைவர் தேர்வுக்குப் பிறகு ஆளுநர் உரையிலும் இதற்கான தீர்வினை எதிர்பார்க்கிறோம்.  தொடர்ந்து நடைபெறும் சட்டமன்றப் பேரவைத் தொடரிலும் குறிப்பாக கடந்த2 ஆண்டுகளாக தமிழக மக்களை உறுத்திவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்க்கிறோம்.
2009ஆம் ஆண்டு ஈழத்தில் தங்களின் சுய உரிமை நிலைக்காக போராடிய தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்டும்கடலில் தள்ளப்பட்டும்  கொல்லப்பட்டனர்.  3லட்சம் பேர் முள்ளிவாய்க்காலில் சிறைப்பட்டனர்.  15 லட்சம் பேர் உலகமெங்கும் இன்னும் அகதிகளாக உள்ளனர்.  இந்தக் கொடிய செயலைச் செய்த ராஜபக்சே அரசை கண்டித்து ஐ.நா. கடுமையாக சாடியுள்ளது.  இப்படிப்பட்ட ராஜபக்சேவை சட்டப்படி நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையின் முதல் தொடரிலேயே ராஜபக்சேவை தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் பேரவையில் நாங்கள் தமிழக அரசை வலியுறுத்துவோம்.
நேற்று ராஜபக்சே இலங்கை மக்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  அதுவும் ஒருதலையாக இருந்துவிடக்கூடாது என்று எண்ணுகிறோம். சிங்களவர்கள் தான் இலங்கை மக்கள்சிங்களம் தான் இலங்கை மொழிஸ்ரீலங்கா தான் சிங்கள நாடு என்று ஒருதலைபட்சமாக இருந்துவிடாமல் அனைத்திலும் உரிமையுள்ள தமிழர்களுக்கும் இந்தப் பயிற்சியில் சம உரிமை வழங்கவேண்டும்.  அப்போதுதான் எஞ்சியுள்ள தமிழர்களாவது மானத்தோடும் மரியாதையோடும் வாழ முடியும்.   ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்க இந்தியா வழங்கியிருக்கும் உதவிகளை இதுபோன்ற செயல்களுக்கு பயன்படுத்துகிறார்களா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்-.  மேலும் அங்கு நிலவும் உண்மைச் சூழலைக் கண்டறிய தமிழக அரசு தமது சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை இலங்கைக்கு தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்-.
தேர்தல் அறிக்கையில் தமிழக முதல்வர் அறிவித்த கேபிள் டிவி கட்டண மானிய விலையை உடனே அமுலுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் கேபிள் இணைப்பு-கள் ஒரே நிறுவனத்திடம் ஏகபோகமாக இருந்ததுசில்லரை வணிகம்தொழில் என்று ஒரு குடும்பத்தின் பிடியில் ஐந்தாண்டுகள் நிகழ்ந்த அனைத்து அவலங்களுக்கும் அந்தக் குடும்பமே காரணம்-. அதனால் கேபிள் டிவியை அரசே செயல்படுத்தி அதனை மக்கள் நிறுவனமாக மாற்ற வேண்டும்.  ஒரே நிறுவனத்தின் ஏகபோகத்தை தடுக்க வேண்டும். 
வரும் சட்டமன்றத் தொடரில் தென் தமிழகத்தில் தொழில்வளம்வணிகம்போக்குவரத்து பெருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஆணையத்தை உருவாக்கிச் செயல்பட புதிய தமிழகம் குரல் கொடுக்கும்.
சமூகப் பிணக்குகளால் பாதிப்படைந்திருக்கும் தென்தமிழகத்தில்  சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பிற வளர்ச்சிகளுக்கு அடிப்படையானவற்றை செய்வோம்.  மேலும் புதிதாக தொடங்கப்படும் தொழில் வளங்களை வடமாவட்டங்களில் தொடங்காமல் இனி தென்தமிழகத்திலும் தொடங்கி வளம்கூட்ட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்போம்.
சாலை விபத்தில் அகால மரணமடைந்த அமைச்சர் மரியம்பிச்சையின் மரணம் குறித்து முதல்வர் அவர்கள் மர்ம மரணம் என்றும் அதனை துல்லியமாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
மேலும் புதிய தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டிய விவரங்கள் குறித்து வரும் ஜுன் 18, 19 ஆகிய இரு தேதிகளில் மாநில் தழுவிய இருநாள் கருத்தரங்கம் மற்றும் பொதுக்குழு நடத்த உள்ளோம்.  இடம் பற்றிய விவரத்தை விரைவில் அறிவிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக