மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வரலாற்று ரீதியாக தமிழகத்தினுடைய ஒரு பகுதியாக இருந்து 1974-ஆம் ஆண்டு 1976-ஆம் ஆண்டுகளில் அன்றைய ஆட்சியில் இருந்தவர்கள் தமிழகத்தினுடய எல்லையைக் காப்பாற்றுவதற்கு மைய அரசினிடத்திலே சரியான ஆதாரங்களை எடுத்து வைக்கத் தவறியதன் விளைவாக கச்சத் தீவு அன்று இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. அந்தக் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதனுடைய விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழக மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இன்று ஆயிரக்கணக்கான கடலோர மீனவர்களிடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று சொன்னால் அது கச்சத் தீவு இலங்கை வசம் இருக்கிற காரணத்தினால்தான் இதை மீட்டெடுக்க வேண்டுமென்று தமிழகத்திலே பல்வேறு தரப்பிலேயிருந்து குரல் எழுப்பப்பட்டாலும் கூட நமது மதிப்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கிலே தமிழக அரசுனுடைய வருவாய்த் துறையும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானம் நேற்று எவ்வாறு இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்டதோ அதுபோல் இது இரண்டாவது மைல்கல் ஆகும் என்பதை நான் சுட்டிக்காட்டி (மேசைத் தட்டும் ஒலி) இந்த அவையிலேயே தனியாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் சிறப்புடையதாக இருக்கும் என்று வாழ்த்தி இந்தத் தீர்மானத்தை ஆதரித்து விடைபெறுகிறேன். வணக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக