எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 15 ஜூன், 2011

தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை .

பட்டியல் வகுப்பினர்   மக்களுக்கு இட ஒதுக்கீடு. கடந்த 50 ஆண்டுகாலாக முறையாக அமலாக்கப்படாததால் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் எத்தனை சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் கூட இன்னும் அந்த மக்களுடைய வாழ்க்கைத்தரம் முழுமையாக உயர்ந்தபாடில்லை. நிலமற்றவர்கள் என்ற கணக்கு பார்த்தால், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கக்கூடியவர்கள் என்று கணக்கெடுத்தால் அதில் பட்டியல் வகுப்பினர் மக்களிலே பெரும்பாலானவர்கள். எனவே குறிப்பாக பல்வேறு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள பின்னடைவு பணியிடங்கள், இலட்சக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்கள் அரசு பதவிகள் இருக்கின்றன. எனவே அந்தப் பின்னடைவுப் பணியிடங்களை எல்லாம் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும் அதுவும் குறிப்பாக உயர் பதவிகளிலே வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
      தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஒரு பல்கலைகழகத்தில் கூட பட்டியல் வகுப்பினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக இல்லை. அரசு செயலாளர்கள் 34 பேர்களில் ஒரிருவர் மட்டும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்களிடத்திலேதான் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைக்க முடியும்.. சமுதாய நலனுக்கு எப்படியெல்லாம் அவர்கள் குரல் கொடுக்கிறார்களோ, உற்ற துணையாக விளங்குகிறார்களோ அதேபோல பட்டியல் வகுப்பினர் மக்களுடைய நிலை உயர வேண்டுமென்று சொன்னால் அவர்கள் ஒருவரால் தான் சாத்தியம் ஆகும்.
      இன்னும் கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் ஆளுநர் உரையிலே வேண்டிக்கொள்வது பட்டியல் வகுப்பினர் மக்களுக்கு, தேவேந்திர குல மக்களுக்கு, ஆதிதிராவிட மக்களுக்கு, அருந்ததிய மக்களுக்குக் கூட கூடுதல் பொறுப்பு கொடுத்து நீங்கள் தான் ஒரு அடையாளத்தை உருவாக்கித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளிலே பட்டியல் வகுப்பினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த சமுதாய மதிக்கப்படும். தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு சமுதாய புரட்சி ஏற்பட வேண்டுமென்றுச் சொன்னால் அது அம்மா அவர்களால் தான் முடியும். அதன் காரனமாகத்தான் இந்தப் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக