புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் பொன்விழா மைதானத்தில் ஜுன்,25,26 நாட்களில் கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடபட பொதுக்குழு உறுப்பினர்கள் 1200 பேர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
1)குடும்ப ஆட்சி,அனைத்து துறைகளிலும் ஊழல்,அபரிவிதமான விலைவாசி ஏற்றம்,அனைத்து அரசு துறைகளும் செயல்படாத தன்மை போன்றவற்றிலிருந்து 2011 சட்டமன்ற தேர்தல் மூலம் தாய் தமிழகத்தை விடுவித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கும் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான புதிய தமிழகம்,தே.மு.தி.க, சி.பி.ஐ(எம்),சி.பி.ஐ,சமத்துவ மக்கள் கட்சி,மனித நேய மக்கள் கட்சி,பார்வர்டு பிளாக்,அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்,இந்திய குடியரசு கட்சி,கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளின் தலைவர்கள்,அனைத்து மட்ட பொருப்பாளர்கள் அனைவருக்கும் புதிய தமிழகம் மாநில பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
2)2011-ல் மக்கள் விரோத தி.மு.க ஆட்சியை அகற்றி, ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள அ.இ.அ.தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிர முனைப்பு காட்டுவது பாராட்டுக்குரியது. இதே வேகத்தை தொடர்ந்து காட்டிட புதிய தமிழகம் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
3)தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு செப்டம்பர் மாதத்தில் மாநில மாநாடு நடத்த புதிய தமிழகம் பொதுக்குழு முடிவு செய்கிறது.
4)இந்திய மக்களின் அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணமாக விளங்குகின்ற ஊழலை வேரோடு களைய புதிய தமிழகம் கட்சி மக்கள் இயக்கம் ஒன்றை நடத்துவதென புதிய தமிழகம் பொதுக்குழு முடிவு செய்கிறது.
5) தென் தமிழகத்தின் கல்வி,தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் அனைத்து சமுதாயத்தினரும் சமமான வாய்ப்பை பெற்றிடும் பொருட்டு அனைத்து சமுதாய மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு அனைத்து கிராமங்கள் நகரங்களில் அடுத்த மூன்று மாதத்தில் சமூக நல்லினக்க குழுக்கள் உருவாக்குவதென புதிய தமிழகம் பொதுகுழுக் முடிவு செய்கிறது.
6)1982 ஆம் ஆண்டு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்கான அந்தந்த மாநில பட்டியலின மக்களின் ஜனத்தொகைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதி அந்த அடிப்படையில் வரும் நிதிநிலை அறிக்கையில் 18% நிதியை உட்கூறு சிறப்பு திட்ட நிதியாக ஒதுக்கிட தமிழக அரசை புதிய தமிழகம் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
7)தி.மு.க ஆட்சியில் அனைத்து துறைகளிலும் மலிந்துவிட்ட ஊழல் குறித்து துறை வாரியாக தனி தனியாக விசாரணைக் கமிஷன் மேற்கொள்ளப்பட புதிய தமிழகம் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக