எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 5 ஜூன், 2011

புதியம்புத்தூர் : ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ டாக்டர்.க.கிருஷ்ணசாமி புதியம்புத்தூர் மலர்குளத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

 


ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் ஓட்டப்பிடாரத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகமாக ஓட்டப்பிடாரம் பள்ளியில் பொது மக்களிடம் மனு பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியை நிறைவு செய்த பின்பு புதியம்புத்தூர் மலர்குளத்திற்கு திடீர் விசிட் செய்தார். 

மலர்குளத்திற்கு அருகிலிருந்து தனியார் ராட்சத போர்வெல் அமைத்து தொழிற்சாலைகளுக்கு லாரி தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்கும்படி பொதுமக்கள் அவரிடம் வற்புறுத்தியிருந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எம்எல்ஏ குடிநீர் கொண்டு செல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி மலர் குளத்திற்கு எம்எல்ஏ விசிட் செய்தார். எம்எல்ஏ வருவது தெரிந்ததும் லாரி தண்ணீர் விற்பனை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 200க்கும் அதிகமான புதியதமிழகம், அஇஅதிமுக., கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் எம்எல்ஏ, மலர் குளத்திற்குள் சென்றபோது ஒரு போர்வெல் லாரி 16 விட்டத்தில் ராட்சத போர்வெல் அமைத்துக் கொண்டிருந்தது. பொதுமக்கள் ஆத்திரமடைந்து எம்எல்ஏ.,விடம் முறையிட்டனர்.எம்எல்ஏ யூனியன் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு பேசினார். முறையாக அனுமதி வழங்கப்பட்டுத்தான் இந்த போர்வெல் போடப்பட்டுக்கொண்டிருப்பதாக ஆணையாளர் தெரிவித்தார். புதியம்புத்தூர் குடிநீர் போர் வெல்லுக்கு அருகில் இந்த போர்வெல் போடப்படுவது குறித்து பொதுமக்கள் எதி ர்ப்பு தெரிவித்தனர். போடப்பட்டுள்ள போர்வெல் வழக்கத்திற்கு மாறாக 16 விட்டத்தில் போடப்படுவது பொதுமக்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போர்வெல் வீரபாண்டியபுரம் பஞ்சாயத்திற்கு குடிநீர் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், வீரபாண்டியபுரம் பஞ்சாயத்திற்கு குடிநீருக்கு கொண்டு செல்லப்படுவதுடன் அருகிலுள்ள தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். 

எம்எல்ஏ பொதுமக்களை சமாதானப்படுத்தி புதியம்புத்தூர் குடிநீர் போர்வெல்லிலிருந்து 500 அடி தூரம் தள்ளி போர்வெல் போடச் சொல்லியுள்ளதாக தெரிவித்து விட்டு எம்எல்ஏ புறப்பட்டுச் சென்றார். எம்எல்ஏ புறப்பட்டு சென்ற பின்பு பொதுமக்கள் போர்வெல் போட்டுக் கொண்டிருந்த லாரி மற்றும் போர்வெல் தொழிலாளிகளிடம் எதிர்ப்பு தெரிவித்து போர் போடுவதை நிறுத்தும்படி கூறினர். உடனே போர்வெல் லாரி அங்கிருந் து புறப்பட்டு சென்றது. ஏற்கனவே ஓட்டப்பிடாரத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனியார் போர்வெல் உரிமையாளர் ஒருவர் புதியம்புத்தூர் மலர் குளத்திற்குள் லாரிகளை நிறுத்தி தண்ணீர் பிடிப்பது குறித்து புகார் தெரிவித்தனர்.

எம்எல்ஏ கிருஷ்ணசாமி அவர்கள் ஓட்டப்பிடாரம் தாசில்தாரிடம் இது குறித்து பேசினார். தாசில்தார் மணி 23ந் தேதிக்கு மேல் மலர்குளத்தில் வைத்து தண்ணீர் பிடித்தால் அந்த லாரி பறிமுதல் செய்யப்படும் என்று எம்எல்ஏ கிருஷ்ணசாமி அவர்களிடம் உறுதியளித்தார்.இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக