எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 5 ஜூன், 2011

2011ஒட்டப்பிடாரம் தொகுதி - ஒரு பார்வை

 









ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுழக்கமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்க¤ய வ.உ.சிதம்பரனார், சுதந்திரத்துக்கு வீர முழக்கமிட்ட வீரன் சுந்தரலிங்கம் போன்ற தியாக சீலர்கள் பிறந்த தொகுதி ஒட்டப்ப¤டாரம். இதற்கு சாட்சியாக வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தூத்துக்குடி, திருச்செந்தூர் வரும் சுற்றுலா பயணிகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் பார்வையிட்டு செல்கின்றனர். வறட்சியான தொகுதி என்பதால் பலர் பிழைப்¢பு தேடி வெளியூருக்கு இடம் பெயர்ந்து விட்டனர். வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது என்று கட்டபொம்மன் முழக்கமிட்ட இந்த மண்ணில் மானாவாரி விவசாயம்தான் நடந்து வருகிறது. இந்த தொகுதிக்கு பெருமை அளிப்பது ‘குட்டி திருப்பூர்’ என அழைக்கப்படும் புதியம்புத்தூர். இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனி தொகுதி ஒட்டப்ப¤டாரம். ஒட்டப்பிடாரம் தொகுதி 1962ல் உருவானபோது பொது தொகுதியாக இருந்தது. 1962ல் நடந¢த தேர்தலில் ராமகிருஷ்ண நாயக்கர்(காங்கிரஸ்) வென்றார். 1967ல் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியாக மாறிய பின்னர், நடந்த தேர்தலில் எம்.முத்தையா(சுதந்திரா) வெற்றி பெற்றார். 1971ல் எம்.முத்தையா(பார்வர்ட் பிளாக்), 1977ல் ஒ.எஸ்.வேலுச்சாமி(காங்கிரஸ்), 1980ல் எம்.அப்பாத்துரை(கம்யூனிஸ்டு), 1984ல் ஆர்.எஸ்.ஆறுமுகம்(காங்கிரஸ்), 1989ல் எம்.முத்தையா(திமுக), 1991ல் ராஜமன்னார்(அதிமுக), 1996ல் டாக்டர் கிருஷ்ணசாமி(ஜனதா), 2001ல் ஏ.சிவபெருமாள்(அதிமுக), 2006ல் மோகன்(அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவதால், ஸ்டார் அந்தஸ்தை தொகுதி பெற்றுள்ளது. தற்போது திமுக வேட்பாளர் சி.எஸ்.ராஜா, புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ வேட்பாளர் முத்துபலவேசம், பகுஜன் சமாஜ் வேட்பாளர் சந்திரா மற்றும் சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.



டாக்டர் கிருஷ்ணசாமியை பொறுத்தவரை 1996ல் முதன் முதலாக ஒட்டப்பிடாரத்தில் வெற்றி பெற்ற பின்னர் 2001, 2006 ஆகிய சட்டசபை தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். 1998, 1999, 2004, 2009 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி(தனி) தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2006 தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட¢பாளராக போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக வேட்பாளர் மோகனிடம் தோல்வியை தழுவினார். 1996 முதல் ஒவ்வொரு சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிடும் வழக்கத்தை கொண்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த தேர்தலிலும் களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா, முதன் முதலாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒரு லட்சத்து 63,343 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 82,125 பேர் ஆண்கள். 81,218 பேர் பெண்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக