எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 6 மார்ச், 2014

தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி: புதிய தமிழகம் கட்சி அறிவிப்பு


 


திமுக தலைமையில் அமையப்பெற்றுள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
ஜனநாயக முற்போக்கு கூட்டணி தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்து முடிவு செய்ய, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை மாநில தலைமை அலுவலகத்தில் 06.03.2014 வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் தென்காசி தொகுதியின் வேட்பாளராக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை நிறுத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது என்று அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக