எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 31 மார்ச், 2014

செங்கோட்டையில் புதியதமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு..

செங்கோட்டை, : செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி முக் கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி செங்கோட்டை, மேலூர் பகுதியில் அனைத்து சமுதாய தலைவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலுர் பகுதி அருந்ததியர் சமுதாய நாட்டாமை பழனி, தேவேந்திரகுல நாட்டாமை சந்தா னம், ஆதிதிராவிட சமுதாய நாட்டாமை பரமசிவம் ஆகியோரை சந்தித்து தமக்கு ஆதரவு திரட்டி னார். 
தொடர்ந்து செங் கோட்டை பள்ளிவாசல் பகுதியில் அப்துல்காதர், சேக்அலி, சலீம், பாஞ்ச், கரீம் மற்றும் பலரிடம் கிருஷ்ணசாமி வாக்குகேட்டார். 
பின்னர் நகரின்முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். உடன் செங் கோட்டை நகர திமுக செய லாளர் ரகீம் மற்றும் கூட் டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக