எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 25 மார்ச், 2014

கடையநல்லூரில் ஸ்டாலின்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையிலுள்ளது..


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையிலுள்ளது. திமுக ஆட்சியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெறவில்லை. கொலை, கொள்ளை, வழிப்பறிகள் பெருகிவிட்டன. கடையநல்லூர் நகராட்சியில் திமுக ஆட்சியில் ரூ. 22 கோடி மதிப்பில் புதிய குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. திருமலைக்கோவிலுக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது. எனவே திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு வாக்களியுங்கள் என்றார்.

புதியதமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி, தொகுதி பொறுப்பாளர் மைதீன்கான் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் கருப்பசாமிப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செரீப், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் சைபுன்னிஷாசேகனா, துணைத் தலைவர் ராஜையா, நகரச் செயலர் முகமதுஅலி, ஒன்றியச் செயலர் காசிதர்மம்துரை, சொக்கம்பட்டி திமுக நிர்வாகிகள் பிள்ளையார்பாண்டி, சண்முகையா,கிருஷ்ணசாமிப்பாண்டியன்,செல்லச்சாமி, செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக