எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 31 மார்ச், 2014

ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார துஷ்பிரயோகத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்கின்றனர்: டாக்டர். கிருஷ்ணசாமி..

திருநெல்வேலி மாவட்ட திமுக வழக்குரைஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஜோசப்ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசியதாவது,
தென்காசி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பாராளுமன்றஉறுப்பினர்கள் யாரும் குறிப்பிடத்தக்க சாதனைகளை மேற்கொள்ளவில்லை. எந்தவொரு தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. இந்த 50 ஆண்டு கால இடைவெளியை நிரப்பிடும் வகையில் நான் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

ஆளும் கட்சியினர் பணபலத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் நம்பி தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர். தென்காசி மக்களவை தொகுதியில் சிலவாக்குசாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தேர்தலில் வழக்குரைஞர் அணியினர் பறக்கும்படை போல் செயல்பட்டு வெற்றிக்காக உழைத்திட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக