எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 6 மார்ச், 2014

தென்காசி: திமுக கூட்டணி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி!



மக்களவைத் தேர்தலில் தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது:-
தென்காசியில் நடைபெற்ற கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக் குழு கூட்டத்தில், தென்காசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று ஒருமனதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி அங்கு போட்டியிடுகிறேன். விரைவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன். திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளேன்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் எனது சட்டப்பேரவை பதவியை ராஜிநாமா செய்ய கால அவகாசம் உள்ளது. அதனால் உடனடியாக ராஜிநாமா செய்யமாட்டேன். திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம் என்றார் அவர்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் கிருஷ்ணசாமி ஏற்கெனவே 4 முறை போட்டியிட்டுள்ளார். தற்போது 5 முறையாகப் போட்டியிட உள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினராக 1996-2006 காலத்தில் இருந்துள்ளார். தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி
பிறந்த நாள் : 03.04.1952
பெற்றோர்: கருப்புசாமி - தாமரை அம்மாள்.
சொந்த ஊர்: மசக்கவுண்டர் புதூர், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை,

(பழைய கோவை மாவட்டம்) திருப்பூர் மாவட்டம்.
கல்வி: எம்.பி.பி.எஸ்., எம்.டி., படித்தவர்.
மனைவி: டாக்டர் வி.வி. சந்திரிகா, மகள்: சங்கீதா ஓம்நாத், மகன்: ஷ்யாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக