எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 6 மார்ச், 2014

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!




தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழகம் சார்பில் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெற்றுள்ளது. அண்மையில் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தென்காசி தொகுதியில், வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, "கட்சியின் உயர்நிலைக்குழு எடுத்த முடிவின்படி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நானே போட்டியிடுகிறேன்" என்றார்.

தற்போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கிருஷ்ணசாமி, அந்த பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக