எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 29 மார்ச், 2014

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுகக் கூட்டம்


தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் நடைபெற்றது. செயல்வீரர்களின் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளை திமுக எம்எல்ஏ மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வேட்பாளர் கிருஷ்ணசாமி, திமுக தலைவர் கலைஞர் நீ வெற்றி பெறுவாய் என்று என்னை ஆசிர்வதித்து அனுப்பியுள்ளார். அதற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு கூடுதல் மெஜாரிட்டி வாக்குகளில் வெற்றி பெற வேண்டும். இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக செல்கிறது. அதில் ஒரு சதவீதம் தண்ணீரை கிழக்கே திருப்பினால் தென்காசி தொகுதியில் பல பகுதிகள் வளம்பெறும். என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த திட்டத்தை கொண்டுவர நான் பாடுபடுவேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக