எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 14 மார்ச், 2014

பெரம்பலூர் தி.மு.க. வேட்பாளர் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்


புதிய தமிழகம் கட்சியின் திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சத்திரம் பஸ் நிலையம் அருகே நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் சங்கர்,புறநகர் மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாழையூர் குணா, சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்கு புதிய தமிழகம் கட்சி கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்து பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டினை முறையாக பின்பற்றாததாக கூறி அதற்கு தமிழக அரசை கண்டித்தும், தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரமகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பத் கமிஷன் அறிக்கையை திரும்ப பெற வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீமானூர்பிரபு கலந்து கொண்டு பேசுகையில், சாதாரண குடும்பத்ததில் பிறந்த நான் பெரம்பலூர் தொகுதி வேட்பாளாராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளேன். என்னை வெற்றி பெற செய்தால் உங்களில் ஒருவனாக இருந்து உங்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தருவேன். அதனால் என்னை புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக நினைத்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து ஆதரவு திரட்டினார்.
கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் தினகரன், நம்பிராஜ், பிச்சை முத்து, துறையூர் முருகானந்தம், புள்ளம்பாடி முருகானந்தம், தம்பிதுரை, பகுதி செயலாளர் அசோக்தேவேந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் அசோக், சிறுபான்மை நலப்பிரிவு ஐதர்அலி, அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக