எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 31 மார்ச், 2014

கடையநல்லூா் மேலக்கடையநல்லூா் பகுதியில் நாடாா் சமுதாய தலைவா்களிடம் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் ஆதரவு கேட்டபோது...

கடையநல்லூா் முத்துகிருஷ்ணாபுரம் வன்னியா் சமுதாய தலைவா்களிடம் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் ஆதரவு கேட்டபோது..

செங்கோட்டையில் புதியதமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு..

செங்கோட்டை, : செங்கோட்டையில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி முக் கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் புதியதமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி செங்கோட்டை, மேலூர் பகுதியில் அனைத்து சமுதாய தலைவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலுர் பகுதி அருந்ததியர் சமுதாய நாட்டாமை பழனி, தேவேந்திரகுல நாட்டாமை சந்தா னம், ஆதிதிராவிட சமுதாய நாட்டாமை பரமசிவம் ஆகியோரை சந்தித்து தமக்கு ஆதரவு திரட்டி னார். 
தொடர்ந்து செங் கோட்டை பள்ளிவாசல் பகுதியில் அப்துல்காதர், சேக்அலி, சலீம், பாஞ்ச், கரீம் மற்றும் பலரிடம் கிருஷ்ணசாமி வாக்குகேட்டார். 
பின்னர் நகரின்முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். உடன் செங் கோட்டை நகர திமுக செய லாளர் ரகீம் மற்றும் கூட் டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கடையநல்லூா் கிருஷ்ணாபுரத்தில் கோனாா் சமுதாயம், பிள்ளைமாா், தேவா், ஆசாாி, செட்டியாா் சமுதாயம் என அனைத்து சமுதாய தலைவா்களிடம் ஒரே இடத்தில் சந்தித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் ஆதரவு கேட்டபோது...

கடையநல்லூா் மேலக்கடையநல்லூா் பகுதியில் தேவா் சமுதாய தலைவா்களிடம் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் ஆதரவு கேட்டபோது...

குற்றாலத்தில்‬ வழக்கறிஞா்கள் பிாிவு ஆலோசணைக் கூட்டத்தில் தென்சுடா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு..

குற்றாலத்தில்‬ வழக்கறிஞா்கள் பிாிவு ஆலோசணைக் கூட்டத்தில் தென்சுடா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு..

தென்காசி தொகுதியில் இதுவரை இருந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த10, 15 ஆண்டுகளில் இத்தொகுதிக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. இந்த தொகுதியை முன்னேற்ற அதிகமான இடைவெளியை போட்டுவிட்டாா்கள். இந்த இடை வெளியை நான் புா்த்தி செய்ய வேண்டும். அதுதான் எனது லட்சியம்.
MLA, MP இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே மக்களின் பிரதிநிதிதான். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினா் என்பது ஒரு அமைச்சருக்கு சமமாகும். நமது தேவைகளை புா்த்தி செய்ய தமிழக அமைச்சா்களையும் தொடா்புகொள்ளலாம்.
தோ்தல் நடைமுறைகளை அனைத்தையும் வழக்கிறஞா்கள் பிாிவு முன்னிலைப் படுத்தி செயல்பட வேண்டும். எனது வெற்றிக்கு வழக்கறிஞா்கள் பிாிவு என் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்களிடம் கேரண்டியுடன் வாக்கு சேகாியுங்கள். உங்களுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்.

‎குற்றாலத்தில்‬ நடைபெற்ற வழக்கறிஞா்கள் பிாிவு ஆலோசணைக் கூட்டத்தில் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு..

கேரளாவில் மேற்கு தொடா்ச்சி மலையில் 30,000 டிம்சி தண்ணீா் உற்பத்தியாகி வீனாக அரபிக்கடலில் கலக்கிறது. அத்தண்ணீரை வைத்து கேரளா விவசாயம் ஒன்றும் செய்வதில்லை. இத்தொகுதியில் வலுவான ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் அமைந்தால் ஒரு டிம்சி தண்ணீராவது கொண்டுவரலாம். அவ்வாறு நடந்தால் தென்காசி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் முன்னேறலாம்.
இந்திய நாட்டில் ஒரு மோசமான பிரதமா் அமைந்தாலும் கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் வலுவாக அமைந்தால் அத்தொகுதி நல்ல வளா்ச்சி அடையும். ஆனால் ஒரு நல்ல பிரதமா் அமைந்து ஒரு மோசமான நாடாளுமன்ற உறுப்பினா் அமைந்தால் அத்தொகுதி வளா்ச்சி அடையாது.
தென்காசி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் பலபோ் வேலை பாா்க்ககூடிய தொழிற்சாலைகள் கொண்டுவருவேன்.
எனது வெற்றியின் பிரதிபலிப்பு நெல்லை,தூத்துக்குடி,விருதுநகா் போன்ற பெரும்பான்மையான மாவட்டங்களின் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

கடையநல்லூாில் இஸ்லாமியா் சமுதாய தலைவா்களிடம் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் ஆதரவு கேட்டபோது..

ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார துஷ்பிரயோகத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்கின்றனர்: டாக்டர். கிருஷ்ணசாமி..

திருநெல்வேலி மாவட்ட திமுக வழக்குரைஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஜோசப்ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசியதாவது,
தென்காசி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பாராளுமன்றஉறுப்பினர்கள் யாரும் குறிப்பிடத்தக்க சாதனைகளை மேற்கொள்ளவில்லை. எந்தவொரு தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. இந்த 50 ஆண்டு கால இடைவெளியை நிரப்பிடும் வகையில் நான் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

ஆளும் கட்சியினர் பணபலத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் நம்பி தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர். தென்காசி மக்களவை தொகுதியில் சிலவாக்குசாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தேர்தலில் வழக்குரைஞர் அணியினர் பறக்கும்படை போல் செயல்பட்டு வெற்றிக்காக உழைத்திட வேண்டும் என்றார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் சில வாக்குசாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் முயற்சி: டாக்டர்.கிருஷ்ணசாமி

தென்காசி மக்களவை தொகுதியில் சிலவாக்குசாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது என டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட திமுக வழக்குரைஞர் பிரிவு ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ஜோசப்ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.வழக்குரைஞர்கள் ஆபாத்துகாத்தான்,திருமலையப்பன்,ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திமுக தலைமையிலான ஜனநாயகூட்டணி வேட்பாளர் டாக்டர்.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு பேசியதாவது,
தென்காசி தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பாராளுமன்றஉறுப்பினர்கள் யாரும் குறிப்பிடத்தக்க சாதனைகளை மேற்கொள்ளவில்லை. எந்தவொரு தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை.இந்த 50ஆண்டுகால இடைவெளியை நிரப்பிடும் வகையில் நான் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.ஆளும்கட்சியினர் பணபலத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் நம்பி தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்ததேர்தலில் வழக்குரைஞர் அணியினர் பறக்கும்படை போல் செயல்பட்டு வெற்றிக்காக உழைத்திட வேண்டும் என்றார் அவர்.திமுக வழக்குரைஞர் பிரிவு மாநில அமைப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
வழக்குரைஞர்கள் ஆ.வெங்கடேசன்,ரஹ்மான்,ராஜேஷ் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.வழக்குரைஞர்கள் ஈ.ராஜா,பொன்துரைசாமி,சண்முகையா, விடுதலை சிறுத்தைகள்கட்சியின் மாவட்ட செயலர் துரையரசு,ஒன்றிய செயலர் சந்திரன், புதியதமிழகம் கட்சியின் மாவட்ட செயலர் அரவிந்தராஜா,வழக்குரைஞர் பாஸ்கர், பவுன், மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார்,ஒன்றிய செயலர் சந்திரன்,வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.முன்னதாக வழக்குரைஞர் லூக்ஜெயகுமார் வரவேற்றார்.

கடையநல்லூா் மேலக்கடையநல்லூா் பகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் ஆதரவு கேட்டபோது...

சனி, 29 மார்ச், 2014

கூடுதல் வாக்குகளில் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்: கூட்டணி கட்சிகளிடம் கிருஷ்ணசாமி பேச்சு ..




 

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் நடைபெற்றது. செயல்வீரர்களின் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளை திமுக எம்எல்ஏ மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் பேசிய வேட்பாளர் கிருஷ்ணசாமி, திமுக தலைவர் கலைஞர் நீ வெற்றி பெறுவாய் என்று என்னை ஆசிர்வதித்து அனுப்பியுள்ளார். அதற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு கூடுதல் மெஜாரிட்டி வாக்குகளில் வெற்றி பெற வேண்டும். இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக செல்கிறது. அதில் ஒரு சதவீதம் தண்ணீரை கிழக்கே திருப்பினால் தென்காசி தொகுதியில் பல பகுதிகள் வளம்பெறும். என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த திட்டத்தை கொண்டுவர நான் பாடுபடுவேன் என்றார்.

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுகக் கூட்டம்.

விருது நகர்:-லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்து எம்.பியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் குற்றாலத்தை சர்வதேச சுற்றுலா தலமாக்குவேன் என்று தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்;கடந்த 40ஆண்டுகாலமாக தென்காசி தொகுதியில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை நான் வெற்றி பெற்றால் மேற்க்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாய் கேரளமாநிலக் கடலில் கலக்கும் 30ஆயிரம் டி.எம்.சி.தண்ணீரை கிழக்கு நோக்கித்திருப்பிவேன்.இதன் மூலம் வறட்சியாய் இருக்கும் தென்மாவட்டங்களை வளமான பகுதியாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன்.மேலும் நம் பகுதியில் எலுமிச்சை,திராட்சை,மலர்கள் மதிப்புக் கூட்டக் கூடிய பொருட்களாக மாற்றமுடியாத நிலையுள்ளது.இதனை மாற்றிட முயற்சிகொள்வேன்.குற்றாலத்தை உலக அளவில் சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன் விருதுநகர்-கொல்லம் அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க செய்து மின் பாதையாக மாற்றி தென்மாவட்டங்கள் பொருளாதாரத்தில் உயர முயற்சி மேற்கொள்வேன் என்றார் அவர்.

தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுகக் கூட்டம்


தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரது அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் நடைபெற்றது. செயல்வீரர்களின் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளை திமுக எம்எல்ஏ மைதீன்கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வேட்பாளர் கிருஷ்ணசாமி, திமுக தலைவர் கலைஞர் நீ வெற்றி பெறுவாய் என்று என்னை ஆசிர்வதித்து அனுப்பியுள்ளார். அதற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு கூடுதல் மெஜாரிட்டி வாக்குகளில் வெற்றி பெற வேண்டும். இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக செல்கிறது. அதில் ஒரு சதவீதம் தண்ணீரை கிழக்கே திருப்பினால் தென்காசி தொகுதியில் பல பகுதிகள் வளம்பெறும். என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த திட்டத்தை கொண்டுவர நான் பாடுபடுவேன் என்றார்.

புதிய தமிழகம், ம.ம.க. வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்..

சென்னை: தனி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி தொடர்ந்து வழக்கில் பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், மனித நேய மக்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சி வழக்கு


மக்களவைத் தேர்தலில் தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் வழங்கக் கோரி புதிய தமிழகம் கட்சி தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சின்னத்தில் எங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதே போன்று, தங்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாரயாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 28) விசாரணைக்கு வந்தன.
தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார். இந்த மனுக்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் கோரி புதிய தமிழகம் கட்சி வழக்கு


மக்களவைத் தேர்தலில் தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் வழங்கக் கோரி புதிய தமிழகம் கட்சி தாக்கல் செய்த வழக்கில், தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சின்னத்தில் எங்கள் கட்சிக்கு தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதே போன்று, தங்கள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாரயாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 28) விசாரணைக்கு வந்தன.
தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜரானார். இந்த மனுக்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வியாழன், 27 மார்ச், 2014

அருவி தொகுதியில் அனல்! தென்காசி சர்வே.........


பாஸ்கர் முத்துராமன்
பாஸ்கர் முத்துராமன்
குளுகுளு குற்றாலத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் தென்காசி தனித் தொகுதியில் தேர்தல் அனல் ஆரம்பித்துவிட்டது. தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதி எங்களுக்குத் தான் என்கிற ரீதியில் தேர்தல் வேலைகளில் பரபரப்பு காட்டத் தொடங்கியிருக்கின்றனர் புதிய தமிழகம் கட்சியினர். இதனால் கூட்டணி உடன்பாடு அறிவிக்கப்படும் முன்னரே புதிய தமிழகம் சார்பில் தேர்தல் வேலைகள் தொடங்கி விட்டன.
தொகுதி சீரமைப்பில் அம்பை, ஆலங்குளம், என இரண்டு நெல்லை மாவட்ட
மோகன் அருணாச்சலம்
மோகன் அருணாச்சலம்
தொகுதிகளை இழந்த தென்காசி தொகுதியில் புதிதாக இணைந்திருப்பவை விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிப்புத்தூரும், ராஜபாளயமும். எனவே தற்போது தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் என்று ஆறு தொகுதிகளுடன் முகம்மாறி நிற்கிறது தென்காசி தொகுதி. இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருவில்லிப்புத்தூர் என்ற மூன்று தொகுதிகளும் தனித் தொகுதிகள். இந்த ஆறு தொகுதிகளிலுமே அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளுமே வென்றிருக்கின்றன.
ராம் மோகன்
ராம் மோகன்
எந்தக் கட்சியுமே கூட்டணியை முடிவு செய்யாத நிலையில் தற்போது தென்காசியில் தேர்தல் வேளைகளில் பட்டையைக் கிளப்புவது புதிய தமிழகம் மட்டுமே. தனித் தொகுதியான இங்கு தலித் சமுதாய வாக்குகள் 23 சதவீதமும், தேவர் சமுதாய வாக்குகள் 17 சதவீதமும், நாடார் சமுதாய வாக்குகள் 12 சதவீதமும் உள்ளன. இதுதவிர தென்காசி, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளும் கணிசமாக உள்ளன. கிறிஸ்தவ வாக்குகள் பரவலாக உள்ளன.
இதே தொகுதியை குறி வைத்து 1998&ம் முதலே களமிறங்கி நான்கு தேர்தல்களை சந்தித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி. 1998 தேர்தலில் தனியாகவே 1.40 லட்சம் வாக்குகள், 1999 தேர்தலில் த.மா.கா.வுடன் இணைந்து 1.86 லட்சம் வாக்குகள், 2004 தேர்தலில் 1.11 லட்சம் வாக்குகள், இறுதியாக கடந்த தேர்தலிலும் தனியாகவே 1.16 லட்சம் வாக்குகள் பெற்று தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமாகியுள்ள கிருஷ்ணசாமி இந்தமுறை தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் எளிதாக வெல்வார் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர் புதிய தமிழகம் கட்சியினர்.
தென்காசி தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் கிருஷ்ணசாமி. தென்காசி தொகுதியின் பல்வறு கிராமங்களில் புதிய தமிழகம் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, அனைத்து கிராமங்களிலும் புதிய தமிழகம் கட்சிக் கிளைகள் உருவாக்கப் பட்டுள்ளன. கடந்த டிசம்பர் 15ல் தென்காசியில் கட்சியின் 17&வது ஆண்டு விழாவை கொண்டாடி ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருக்கிறார் கிருஷ்ணசாமி. காலியாக உள்ள சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது புதிய தமிழகம் கட்சி.
இந்த நிலையில்தான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கிருஷ்ணசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு களம் இறங்காமல் தனது மகள் டாக்டர் சங்கீதாவை தென்காசி தொகுதியில் நிறுத்தலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.
இது குறித்து வழக்கறிஞரும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாருமான பாஸ்கர் மதுரத்திடம் பேசினோம். ‘‘கூட்டணியே இல்லாமல் கடந்த நான்கு தேர்தல்களிலும் சராசரியாக எங்கள் டாக்டர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வரை வாங்கியிருக்கிறார். இதுவரை தென்காசி தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர்கள் எதுவுமே உருப்படியாக செய்ததில்லை என்பதை முன்னிறுத்தியே பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் டாக்டர் செல்லும்போது மக்கள் ஆரவார வரவேற்பு கொடுப்பதோடு மனமுவந்து தேர்தல் நிதியும் கொடுக்கின்றனர். எனவே இந்தமுறை வெல்வது உறுதி. டாக்டர் ஐயா களம் இறங்குவதையே நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.
அ.தி.மு.க. கூட்டணி தரப்பில் தேர்தல் வேலைகள் இதுவரை தொடங்கப்படாவிட்டாலும் இந்தமுறை தென்காசியை கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுக்காமல் அ.தி.மு.க.வே தன் வசம் வைத்து களம் இறங்கும் முனைப்பு தெரிகிறது. அ.தி.மு.க சார்பில் முன்னாள் அ.தி.மு.க. எம்.பி முருகேசனின் மனைவியும், நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளருமான வசந்தி முருகேசன் அல்லது முன்னாள் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. கோபால கிருஷ்ணன் களமிறங்கலாம் என்று பரவலான பேச்சிருக்கிறது.
அடுத்ததாக தென்காசியை குறி வைக்கும் தேசியக் கட்சி பா.ஜ.க. கடந்த
மக்களுடன் கிருஷ்ணசாமி
மக்களுடன் கிருஷ்ணசாமி
1999&ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ஆறுமுகம், அ.தி.மு.க வேட்பாளர் முருகேசனிடம் வெறும் 889 வாக்குகளில் தோற்றுப்போனார். இதனால் பா.ஜ.க. தென்காசி தொகுதியில் தனக்கு பலமான வாக்கு வங்கி இருப்பதாக நம்புகிறது. தென்காசி தொகுதியில் பா.ஜ.க போட்டியிட்டால் மாநில செயற்குழு உறுப்பினர் சாரதா பாலகிருஷ்னன் அல்லது அய்யா வழிப் பாடகர் சிவச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தப் பட வாய்ப்புகள் இருக்கின்றன.
சாரதா பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘கடந்த வருடங்களில் தென்காசி தொகுதியில் பா.ஜ.க. சிறப்பான வளர்ச்சி பெற்றிருக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் அதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். எனது சமுதாயம் சார்ந்த பறையர் சமுதாய இன மக்களே தென்காசி தொகுதியில் வெற்றியை நிர்ணயம் செய்வார்கள் என்பது கடந்த இரு தேர்தல்களிலும் நிருபிக்கப்பட்டிருக்கிறது. எங்களது களப்பணி வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது’’ என நம்பிக்கையோடு பேசுகிறார்.
தென்காசி தொகுதியில் காங்கிரஸுக்கு இருக்கும் செல்வாக்கையும் யாரும் புறக்கணிக்க முடியாது. 1977 முதல் 1996 வரை தொடர்ந்து ஆறுமுறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வலம் வந்தவர் மறைந்த முன்னர் அமைச்சர் அருணாசலம். அருணாசலம் 1999 தேர்தலில் தோற்றபிறகு காங்கிரஸ் சார்பில் இதுவரை வேட்பாளர் நிறுத்தப்படாத
சாரதா பாலகிருஷ்ணன்
சாரதா பாலகிருஷ்ணன்
நிலையில் இந்தமுறை காங்கிரஸ் சார்பில் அருணாச்சலத்தின் மகன் மோகன் நிறுத்தப்படலாம் என்கிறார்கள். மோகன் சார்பில் நம்மிடம் பேசிய ராம்மோகன், ‘‘மோகன் மாநில எஸ்.சி.எஸ்.டி.அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அருணாச்சலத்தை கடந்த 1998 தேர்தலில் கிருஷ்ணசாமி தான் போட்டியிட்டதன் மூலம் தோற்கடிக்க முடிந்தது. ஆனால், இன்றுவரை அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதைத்தான் சாதி அரசியல் மூலம் கிருஷ்ணசாமியால் செய்ய முடிந்தது. இனியும் கிருஷ்ணசாமியால் வெல்ல முடியாது. காரணம் வெறும் சாதியை மட்டுமே நம்பி ஏமாற மக்கள் ஒன்றும் ஏமாளிகளல்ல. காங்கிரஸ் வேட்பாளர் தென்காசியில் சாதி மத பேதமின்றி வெல்வது உறுதி’’ என்றார் உறுதியாக.
அ.தி.மு.க.வின் வாக்குக் வங்கியாகக் கருதப்படும் தேவர் வாக்கு வங்கி கணிசமாக உள்ள தென்காசி தொகுதியில் அந்த வாக்குகளை தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் பெறமுடியுமா? பிரிந்து கிடக்கும் தலித் சமுதாய வாக்கு வங்கி முழுமையாக டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுமா? என்பதுதான் இப்போது புதிய தமிழகம் கட்சியின் முன்னிற்கும் கேள்விகள். இவை அனைத்தையும் தகர்த்து புதிய தமிழகம் வெல்ல முடியுமா என்பதற்கு வரும் வாரங்களில் ஏற்படப்போகும் தேர்தல் கூட்டணிதான் பதில் சொல்ல வேண்டும்.

செவ்வாய், 25 மார்ச், 2014

டாக்டர் கிருஷ்ணசாமி : எங்களை வெளியேற்றியதால் வலதுகரத்தை இழந்ததாக ஜெ., உணருவார்'



 கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற புதிய தமிழகம், இரு இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., உறவு கசந்து விட்டதால், இந்த தேர்தலில், தி.மு.க., அணியில், புதிய தமிழகம் இடம் பெற்று, தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறது. அணி மாற்றம் மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து, தென் மாவட்டங்களின் தலித் சமூகத்தவரின் கட்சியாக கருதப்படும் புதிய தமிழகத்தின் நிறுவனர், தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: >ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி என்ன சாதித்தார்? ஏன் எம்.பி.,யாக விரும்புகிறார்? ஆட்சியில் யார், எந்த கட்சி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எம்.எல்.ஏ., வலுவானவாஆக இருந்தால், தொகுதியை வளப்படுத்தலாம்.என் எம்.எல்.ஏ., தொகுதி நிதி அனைத்து தரப்பிற்கும் போய் சேர்ந்துள்ளது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதை தடுத்து நிறுத்தி உள்ளேன். மணல் கொள்ளையை தடுத்துள்ளேன்.நிலத்தடி நீரை, தனியார் நிறுவனங்கள் உறிஞ்சிய போது, ஐகோர்ட்டில் நானே வழக்கு தொடர்ந்ததுடன், நேரில் ஆஜராகி வாதாடி தடுத்து நிறுத்தி உள்ளேன்.
தென்காசி தொகுதியில், பலமுறை போட்டியிட்டு உள்ளீர்கள். இந்த முறையாவது வெற்றி பெறுவீர்களா?

இத்தொகுதியில், அனைத்து தரப்பு மக்களிடமும் அறிமுகமான வேட்பாளர் நான் தான். இத்தேர்தலில் கூட்டணி ஒரு பலம்; வேட்பாளர் அறிமுகம் மற்றொரு பலம். இரு பலமும் எனக்கு, தேர்தலில் கண்டிப்பாக வெற்றியை தரும்.

அ.தி.மு.க., அணியிலிருந்து எதற்காக வெளியேறினீர்கள்? 
கூட்டணியில் இடம் பெற்றிருந்த நிலையில், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில், எங்களுக்கு, 'சீட்' கொடுக்கவில்லை. 'கூட்டணி தொடரவில்லை, ஆதரவு தொடர்கிறது' என, அ.தி.மு.க., தெரிவித்தது.மக்கள் பிரதிநிதி என்ற, முறையில், என் தொகுதி மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுப்பார்கள் என, நம்பித் தான், எம்.எல்.ஏ.,க்களாக மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்றனர்.சட்டசபையில், அரசு செயல்பாடுகளை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. ஆளுங்கட்சி கொண்டு வரும் எந்த திட்டங்களையும், விமர்சனம் செய்யாமல், ஆலோசனை என்ற பெயரில் கூட கருத்து சொல்ல முடியாத நிலையை அ.தி.மு.க., உருவாக்கியது. சட்டசபையில் பேசவும் அனுமதிப்பதில்லை.

இப்போது தி.மு.க., கூட்டணியில் எப்படி உணர்கிறீர்கள்? 
வென்டிலேட்டர், ஜன்னல் இல்லாத, காற்று இல்லாத அறையில் இருந்ததை போன்று அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தேன். இப்போது, நான்கு பக்கம் ஜன்னல் திறந்த, காற்றோட்டமான அறையில் சுதந்திரமாக இருக்கிறேன்.

அடிக்கடி அணி மாறுவது, உங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்யாதா? 
அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, புதிய தமிழகம் வெளியேறியது, ஆதிதிராவிட மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 'சாதாரண காரணங்களுக்காக, கிருஷ்ணசாமி வெளியேற மாட்டார்' என, எண்ண வைத்துள்ளது.

புதிய தமிழகத்திற்கு, தமிழகத்தில் எந்தளவுக்கு ஓட்டு வங்கியுள்ளது? 
இருபது தொகுதிகளில், 60 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஓட்டுகள் உள்ளன. கூட்டணியிலிருந்து எங்களை போன்றவர்களை வெளியேற வைத்ததன் மூலம், வலது கரத்தை இழந்ததை போல ஜெ., உணருவார். இதன் விளைவு வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.

புதிய தமிழகத்திற்கு, எல்லா கிராமங்களிலும் முறையான அமைப்புகள் இல்லையே? 
மாநிலம் முழுவதும், பரவலாக தொண்டர்கள் உள்ளனர். கண்ணுக்கு புலப்பட மாட்டார்கள். 90 சதவீத கிராமங்களில் கிளைகள் உள்ளன.

திருமாவளவனுக்கு, இரண்டு தொகுதிகள், உங்களுக்கு, ஒன்று. வருத்தம் இல்லையா?

சந்தோஷமே. ஒருவர், இரு இட்லிகள் சாப்பிடுவார். மற்றொருவர், மூன்று இட்லிகள் சாப்பிடலாம். அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு சாப்பிட முடியும். எனவே ஒரு தொகுதி ஒதுக்கியதில், வருத்தப்பட ஒன்றுமில்லை.

ஒரே அணியில் புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதே? 
ஏற்கனவே மூப்பனார் தலைமையில், 1999ல், மூன்றாவது அணி அமைந்த போது, இரு கட்சிகளும் அதில் இடம் பெற்றன. 2004ல், மக்கள் கூட்டணி ஏற்பட்ட போதும், 2001 தேர்தலில், தி.மு.க., கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் காக்கும் விஷயத்தில் நானும், திருமாவளவனும், ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் லட்சியம் ஒன்றே.

தேர்தலில் எதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வீர்கள்? 
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜாதி மோதல்களால் தென்தமிழகத்தில் அமைதி குலைந்தது. நான் ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ., ஆன பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த மோதல்களும் நடக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளேன். அமைதி காக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையை, மாநிலம் மட்டுமின்றி, நாடு முழுவதற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் லட்சியம்.

இத்தொகுதியில் வெற்றி பெற்றால், என்ன செய்வதாக உத்தேசம்? 
தென்காசி தொகுதி, இதுவரை, 14 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. காங்., 9, த.மா.கா., 1, அ.தி.மு.க., 2, கம்யூ., 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் இந்த தொகுதி எந்த வளர்ச்சியையும் காணவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரில், 30 டி.எம்.சி., வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் இல்லை. ரயில்வே திட்டங்கள் பெரியளவில் இல்லை. செங்கோட்டை - புனலூர் அகல பாதை பணிகளில் மெத்தனம் நிலவுகிறது. இதற்காக லோக்சபாவில் என் குரல் வலுவாக ஒலிக்கும்.

உங்கள் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் அதிருப்தியில் உள்ளாரா?
என்னால் அவரை திருப்திப்படுத்த இயலாது. அந்தளவு எனக்கு சக்தியில்லை. அவர் விலைக்கு வாங்கப்பட்டாரா, வழுக்கி விழுந்தாரா என, தெரியவில்லை. அவர் கட்சி உறுப்பினராக இருக்கிறார்.

எதற்காக அவர் உங்களிடமிருந்து சென்றார்? 
எதிர்க்கட்சி தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும், ஏழு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதற்காக சென்றார்கள், அதே காரணம் தான்.

அழகிரி பிரச்னையால் ஏற்பட்ட சலசலப்பு தி.மு.க., மற்றும் கூட்டணியை பாதிக்குமா?
கருணாநிதி தலைமையில், ஸ்டாலின் ஒத்துழைப்புடன், மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை முன் எப்போதும் இல்லாத அளவு தி.மு.க., கட்டுக்கோப்பாக இருப்பதாகவே கருதுகிறேன்; கூட்டணிக்கும் பாதிப்பில்லை.

தி.மு.க., கூட்டணியில் காங்., இடம் பெறாதது பலவீனமா? 
காங்., உட்பட எந்த கட்சியும் வராததால், தி.மு.க., கூட்டணிக்கு பலவீனம் இல்லை.

சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., கூட்டணி தொடருமா? 
லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கூட, எங்கள் பிரசாரம் சட்டசபை தேர்தல் பிரசாரமாகவும் இருக்கும்

தென்காசியில் முந்துகிறார் கிருஷ்ணசாமி..



புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 1 லட்சம் வாக்கு களுக்கு மேல் டாக்டர் கிருஷ்ணசாமி பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஒன்றரை லட்சம் முஸ்லிம் வாக்குகள் நிரம்பியிருக்கும் தென்காசி தொகுதியில் ம.ம.க. வலுவான ஒரு கட்சியாக உள்ளது. தமுமுக வலுவான சமுதாய அமைப்பாகவும், அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆதரவு பெற்ற அமைப்பாகவும் உள்ளது குறிப்பிடத் தக்கது. டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தமுமுக, மமக நிர்வாகிகளும் தொண்டர்களும் பம்பர மாக பணியாற்றி வருகின்றனர்.


தென்காசி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் மமக மற்றும் தமுமுகவினர் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை ம.ம.க. மாவட்டச் செயலாளர் பாளை ரபீக், பொருளாளர் செய்யது அலி தலைமையில் தொகுதி முழுவதும் பிரச்சாரப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. ஜமாஅத் சந்திப்பு, முக்கியப் பிரமுகர்கள் சந்திப்புகள் நடந்து வருகின்றன. ம.ம.க.வின் நிலைப்பாட்டை ஜமாஅத் தார்களும், சமுதாயப் பிரமுகர்களும் வரவேற்று புதிய தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.



இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கம் பெரிய அளவில் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். கூட்டணி பலமாக இருந்தாலும் கடந்த முறை வெற்றி பெற்ற சி.பி.ஐ. வேட்பாளர் அப்பாத்துரை 5 வருடமாக தொகுதியை எட்டிப்பார்க்காததாலும் உருப்படியான பணிகள் ஏதும் செய்யாததாலும் கடுப்பில் இருக்கும் மக்கள் ­ங்கத் துக்கு ஓட்டளிக்க விரும்ப மாட்டார்கள்.


டாக்டர் கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும் ஆதரவு உள்ளதுடன் ம.ம.க. வினரின் ஆதரவும் சேர்ந்துள்ளதால் வெற்றி பெறுவது நிச்சயம். முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் தமுமுகவின் செயல்பாடுகளால் கவரப் பட்ட நடுநிலை வாக்குகள் கிருஷ்ண சாமியை கரையேற்றி விடும் என்பதே தென்காசியின் தற்போதைய கள நிலவரம்

கடையநல்லூரில் ஸ்டாலின்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையிலுள்ளது..


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையிலுள்ளது. திமுக ஆட்சியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெறவில்லை. கொலை, கொள்ளை, வழிப்பறிகள் பெருகிவிட்டன. கடையநல்லூர் நகராட்சியில் திமுக ஆட்சியில் ரூ. 22 கோடி மதிப்பில் புதிய குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. திருமலைக்கோவிலுக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டது. எனவே திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு வாக்களியுங்கள் என்றார்.

புதியதமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி, தொகுதி பொறுப்பாளர் மைதீன்கான் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் கருப்பசாமிப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செரீப், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் சைபுன்னிஷாசேகனா, துணைத் தலைவர் ராஜையா, நகரச் செயலர் முகமதுஅலி, ஒன்றியச் செயலர் காசிதர்மம்துரை, சொக்கம்பட்டி திமுக நிர்வாகிகள் பிள்ளையார்பாண்டி, சண்முகையா,கிருஷ்ணசாமிப்பாண்டியன்,செல்லச்சாமி, செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக காற்று இல்லாத அறை; திமுக நான்கு பக்கம் ஜன்னல்- டாக்டர் கிருஷ்ணசாமி ..

சென்னை: எங்களை வெளியேற்றியதால் வலதுகரத்தை இழந்ததாக ஜெயலலிதா உணர்வார் என்று புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இடம் பெற்ற புதிய தமிழகம் இரு இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. உறவு கசந்து விட்டதால் இந்த தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம் பெற்று தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறது. அணி மாற்றம் மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து தென் மாவட்டங்களின் தலித் சமூகத்தவரின் கட்சியாக கருதப்படும் புதிய தமிழகத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு முன்னணி நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி. கேள்வி: ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி என்ன சாதித்தார்? ஏன் எம்.பி.யாக விரும்புகிறார்? பதில்: ஆட்சியில் யார் எந்த கட்சி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எம்.எல்.ஏ. வலுவானவாஆக இருந்தால் தொகுதியை வளப்படுத்தலாம்.என் எம்.எல்.ஏ. தொகுதி நிதி அனைத்து தரப்பிற்கும் போய் சேர்ந்துள்ளது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் பட்டதை தடுத்து நிறுத்தி உள்ளேன். மணல் கொள்ளையை தடுத்துள்ளேன்.நிலத்தடி நீரை தனியார் நிறுவனங்கள் உறிஞ்சிய போது ஐகோர்ட்டில் நானே வழக்கு தொடர்ந்ததுடன் நேரில் ஆஜராகி வாதாடி தடுத்து நிறுத்தி உள்ளேன். கேள்வி: தென்காசி தொகுதியில் பலமுறை போட்டியிட்டு உள்ளீர்கள். இந்த முறையாவது வெற்றி பெறுவீர்களா? பதில்: இத்தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் அறிமுகமான வேட்பாளர் நான் தான். இத்தேர்தலில் கூட்டணி ஒரு பலம்; வேட்பாளர் அறிமுகம் மற்றொரு பலம். இரு பலமும் எனக்கு தேர்தலில் கண்டிப்பாக வெற்றியை தரும். கேள்வி: அ.தி.மு.க. அணியிலிருந்து எதற்காக வெளியேறினீர்கள்? பதில்: கூட்டணியில் இடம் பெற்றிருந்த நிலையில் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் எங்களுக்கு 'சீட்' கொடுக்கவில்லை. "கூட்டணி தொடரவில்லை ஆதரவு தொடர்கிறது" என அ.தி.மு.க. தெரிவித்தது. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் என் தொகுதி மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுப்பார்கள் என நம்பித் தான் எம்.எல்.ஏக்களை மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்றனர். சட்டசபையில் அரசு செயல்பாடுகளை விமர்சனம் செய்யாமல் இருக்க முடியாது. ஆளுங்கட்சி கொண்டு வரும் எந்த திட்டங்களையும் விமர்சனம் செய்யாமல் ஆலோசனை என்ற பெயரில் கூட கருத்து சொல்ல முடியாத நிலையை அ.தி.மு.க. உருவாக்கியது. சட்டசபையில் பேசவும் அனுமதிப்பதில்லை. கேள்வி: இப்போது தி.மு.க. கூட்டணியில் எப்படி உணர்கிறீர்கள்? பதில்: வென்டிலேட்டர் ஜன்னல் இல்லாத, காற்று இல்லாத அறையில் இருந்ததை போன்று அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தேன். இப்போது நான்கு பக்கம் ஜன்னல் திறந்த காற்றோட்டமான அறையில் சுதந்திரமாக இருக்கிறேன். கேள்வி: அடிக்கடி அணி மாறுவது உங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்யாதா? பதில்: அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து புதிய தமிழகம் வெளியேறியது ஆதிதிராவிட மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "சாதாரண காரணங்களுக்காக கிருஷ்ணசாமி வெளியேற மாட்டார்" என எண்ண வைத்துள்ளது. கேள்வி: புதிய தமிழகத்திற்கு தமிழகத்தில் எந்தளவுக்கு ஓட்டு வங்கியுள்ளது? பதில்: இருபது தொகுதிகளில் 60 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஓட்டுகள் உள்ளன. கூட்டணியிலிருந்து எங்களை போன்றவர்களை வெளியேற வைத்ததன் மூலம் வலது கரத்தை இழந்ததை போல ஜெ. உணருவார். இதன் விளைவு வரும் தேர்தலில் எதிரொலிக்கும். கேள்வி: புதிய தமிழகத்திற்கு எல்லா கிராமங்களிலும் முறையான அமைப்புகள் இல்லையே?பதில்: மாநிலம் முழுவதும் பரவலாக தொண்டர்கள் உள்ளனர். கண்ணுக்கு புலப்பட மாட்டார்கள். 90 சதவீத கிராமங்களில் கிளைகள் உள்ளன. கேள்வி: திருமாவளவனுக்கு இரண்டு தொகுதிகள் உங்களுக்கு ஒன்று. வருத்தம் இல்லையா? பதில்: சந்தோஷமே. ஒருவர் இரு இட்லிகள் சாப்பிடுவார். மற்றொருவர் மூன்று இட்லிகள் சாப்பிடலாம். அவரவர் உடம்புக்கு ஏற்றவாறு சாப்பிட முடியும். எனவே ஒரு தொகுதி ஒதுக்கியதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. கேள்வி: ஒரே அணியில் புதிய தமிழகம் விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளதே? பதில்: ஏற்கனவே மூப்பனார் தலைமையில் 1999ல் மூன்றாவது அணி அமைந்த போது இரு கட்சிகளும் அதில் இடம் பெற்றன. 2004ல் மக்கள் கூட்டணி ஏற்பட்ட போதும் 2001 தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளன. ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் காக்கும் விஷயத்தில் நானும் திருமாவளவனும் ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் லட்சியம் ஒன்றே. கேள்வி: தேர்தலில் எதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வீர்கள்? பதில்: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜாதி மோதல்களால் தென்தமிழகத்தில் அமைதி குலைந்தது. நான் ஓட்டப்பிடாரத்தில் எம்.எல்.ஏ. ஆன பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த மோதல்களும் நடக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளேன். அமைதி காக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையை மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். கேள்வி: இத்தொகுதியில் வெற்றி பெற்றால் என்ன செய்வதாக உத்தேசம்? பதில்: தென்காசி தொகுதி இதுவரை 14 லோக்சபா தேர்தல்களை சந்தித்துள்ளது. காங். 9 த.மா.கா. 1 அ.தி.மு.க. 2 கம்யூ. 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் இந்த தொகுதி எந்த வளர்ச்சியையும் காணவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரில் 30 டி.எம்.சி. வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் இல்லை. ரயில்வே திட்டங்கள் பெரியளவில் இல்லை. செங்கோட்டை - புனலூர் அகல பாதை பணிகளில் மெத்தனம் நிலவுகிறது. இதற்காக லோக்சபாவில் என் குரல் வலுவாக ஒலிக்கும். கேள்வி: உங்கள் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அதிருப்தியில் உள்ளாரா? பதில்: என்னால் அவரை திருப்திப்படுத்த இயலாது. அந்தளவு எனக்கு சக்தியில்லை. அவர் விலைக்கு வாங்கப்பட்டாரா வழுக்கி விழுந்தாரா என தெரியவில்லை. அவர் கட்சி உறுப்பினராக இருக்கிறார். கேள்வி: எதற்காக அவர் உங்களிடமிருந்து சென்றார்? பதில்: எதிர்க்கட்சி தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் ஏழு தே.மு.தி.க. - எம்.எல்.ஏ.க்கள் எதற்காக சென்றார்கள் அதே காரணம் தான். கேள்வி: அழகிரி பிரச்னையால் ஏற்பட்ட சலசலப்பு தி.மு.க. மற்றும் கூட்டணியை பாதிக்குமா? பதில்: கருணாநிதி தலைமையில் ஸ்டாலின் ஒத்துழைப்புடன் மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை முன் எப்போதும் இல்லாத அளவு தி.மு.க. கட்டுக்கோப்பாக இருப்பதாகவே கருதுகிறேன்; கூட்டணிக்கும் பாதிப்பில்லை. கேள்வி: தி.மு.க. கூட்டணியில் காங். இடம் பெறாதது பலவீனமா? பதில்: காங். உட்பட எந்த கட்சியும் வராததால் தி.மு.க. கூட்டணிக்கு பலவீனம் இல்லை. கேள்வி: சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடருமா? பதில்: லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கூட எங்கள் பிரசாரம் சட்டசபை தேர்தல் பிரசாரமாகவும் இருக்கும்.

தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு பாடுபடுவோம் தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் பேச்சு..


கடையநல்லூர்,
தென்காசி பாராளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் கூறினார்.
செயல்வீரர்கள் கூட்டம்
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது முகம்மது தலைமை தாங்கினார். நகர செயலாளர் முகம்மது அலி வரவேற்றார். தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன், தென்காசி தொகுதி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, மைதீன்கான் எம்.எல்.ஏ., தங்கவேலு எம்.பி. ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:–
வெற்றிக்கு பாடுபட வேண்டும்
ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணசாமி பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குரல் எழுப்பியவர். தி.மு.க. தலைவர் கருணாநிதி 5 பிரதமர்களை அடையாளம் கட்டியவர். நம்பியவர்களுக்கு கைவிடாத இயக்கம் தி.மு.க. ஆகும். தென்காசி பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணசாமியை வெற்றி பெறச் செய்தால் சமூக நல்லிணக்கம் ஏற்படும். எனவே ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் பேசினார்.
பல்வேறு திட்டங்கள்...
வேட்பாளர் கிருஷ்ணசாமி பேசுகையில், புதிய தமிழகம் கட்சி தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைய மனித சங்கிலி போராட்டம் நடத்தியது. என்னை வெற்றி பெறச் செய்தால், தென்காசி தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவேன். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு செயல்வீரர்கள் பாடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், வி.கே.பி. சங்கர், மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, ஒன்றிய செயலாளர்கள் துரை, பரமசிவன், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி
புளியங்குடி கண்ணா திரையரங்கில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் முன்னிலை வகித்தார். நகர தி.மு.க. செயலாளர் செல்வக்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், கருப்பசாமி பாண்டியன் பேசுகையில், நாம் போர்க்கால வேகத்தோடு பணியாற்ற வேண்டும். நமது வேட்பாளரின் வெற்றியை நோக்கி நமது தேர்தல் பிரசார பயணம் அமைய வேண்டும். நமது வேட்பாளர் மக்களுக்காக போராடக்கூடிய குணம் படைத்தவர். டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு ஏராளமான நன்மைகள் செய்வார். அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் காதர்மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் துரையரசன், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் இன்பராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், முத்தையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தீவிர பிரச்சாரம் ..

சங்கரன்கோவில்: தென்காசி பகுதி மக்களுக்காக, வேலை இல்லாதவர்களுக்காக தென்காசி பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என திமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தென்காசி தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கான செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசியதாவது, "தென்காசி தொகுதியில் வேலை இல்லா திண்டாடத்தை போக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்,. விவசாய நிலங்கள் பயன் பெற பாசன வசதி, செண்கபவல்லி அணைக்கட்டை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்வேன். குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஆகிய ஓன்றிய பகுதிகளில் வறட்சியை போக்க மேற்கு தொடர்ச்சி அணையீின் திட்டங்களை செயல்படுத்துவேன். விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்புவேன். மாவட்டத்தில் பலர் வேலை இல்லாததால் வேலை தேடி வெளி மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்புவர். ஆகவே திமுக கூட்டணிக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட தோழமை கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதனால் தென்காசி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. இனி அடுத்தடுத்து தலைவர்களும் வர இருப்பதால் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தீவிர பிரச்சாரம்

‎கடையநல்லூாில்‬ திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் தென்சுடா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு

மாலை 5மணி வரை அனைவரையும் கொண்டு வந்து ஓட்டு போட வைக்க வேண்டும். நமது சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

தோ்தலுக்கு பணம் கொடுப்பவா்களை நாம் தடுத்து விட்.டாலே நமது வெற்றியை யாராலும் தடுத்திட முடியாது. இத்தொகுதியின் வெற்றி மட்டும் போதாது. 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். கலைஞா் அவா்கள் கை காட்டுகிறா்வா்தான் மதவாதத்திற்கு அப்பாற்பட்டு பாரத பிரதமராக வரவேண்டும். 

ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி..செயல்வீரர்கள் கூட்டம்..

ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளார் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.டி. அதிக வாக்கு வித்தியாசத்தில் எவ்வாறு வெற்றிபெறச் செய்வது தொடர்பாக சட்ட மன்றத் தொகுதிகள் வாரியாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தோழமைக் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று (23.3.14) சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர் கூட்டம் சங்கரன்கோவில் கிருஷ்ணா அரங்கில் திரையரங்கில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இதில் தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர் திரு.கருப்பசாமிபாண்டியன், தி.மு.க. தென்காசி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு.டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஆவுடையப்பன் உள்ளிட்ட திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி, புதிய தமிழகம் முதலிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

‎கடையநல்லூாில்‬ நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் தென்சுடா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு..

தென்காசி தொகுதியில் தொழில் வளம், வணிக வளம், கல்வி வளம், மருத்துவ வளம் பெருக வேண்டும். இதை நான் நிச்சயமாக புா்த்தி செய்வேன். நாடாளுமன்றத்தில் அனைத்து தரப்பு மக்களுக்காக எனது குரல் வலுவாக ஒலிக்கும்.

நான் எப்போதும் தொடா்பு எல்லைக்கு அப்பாற்பட்டு இருக்க மாட்டேன். எப்போதும் தொடா்பு எல்லைக்குள் இருப்பேன். என்னை யாா் வேண்டுமானாலும் எந்த பிரச்சணைக்காகவும் தொடா்பு கொள்ளலாம். என் மீது நம்பிக்கை வையுங்கள் . தென் தமிழகத்தை முதல்நிலை தொகுதியாக மாற்றுவோம்.

சனி, 22 மார்ச், 2014

தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்: கிருஷ்ணசாமி பேட்டி


புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இதற்காக எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தேவை இல்லை. அதற்கு கால அவகாசம் உள்ளது. விரைவில் தென்காசி தொகுதியில் பிரசாரம் செய்வேன். தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

தென்காசி தொகுதியில் எனக்கும், பாஜவுக்கும் தான் போட்டி டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு -

கடையநல்லூர், : ‘தென்காசி தொகுதியில் புதிய தமிழகத்திற்கும், பாஜவுக்கும் தான் போட்டி உள் ளது. அதிமுக களத்திலேயே இல்லை’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். 
 நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் தென்காசி பாராளுமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட் பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்காசி தொகுதி தேர்தல் பொறுப் பாளர் மைதீன்கான் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ரசாக், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது முகமது, செயலாளர் அப்துல் லத்தீப், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சேட்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: 
தென்காசி தொகுதியை பொறுத்தவரை புதிய தமிழகத்திற்கும், பாஜவிற்கும் தான் போட்டி உள்ளது. அதிமுக களத்திலேயே இல்லை. தென்காசி தொகுதி யில் தங்கச்சுரங்கம் போல் இயற்கை வளம் இருந்த போதும் தகுதியான, திறமை வாய்ந்த எம்.பி.க்கள் அமையாததால் இத்தொகுதி இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 
இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்த போதிலும் அவர்களின் நலனுக்காகவும், மறுவாழ்விற்காகவும் எவ்வித ஆக்கபூர்வ மான திட்டமும் செயல்படுத்தப்படாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் உரிமை யை பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் இஸ் லாமிய மக்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார். 
தென்காசியில் நடந்த கூட்டத்திற்கு முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷா தலைமை வகித்தார். மமக மாவட்ட தலைவர் மைதீன்சேட்கான் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில், தமுமுக மாவட்ட செய லாளர் நயினார்முகம்மது, தங்கவேலு எம்.பி., உட்பட பலர் கலந்து கொண்டனர். 
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  மாவட்ட செயலாளர் துரைஅரசு தலைமையில் கூட்டம் நடந்தது. புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்மாவட்ட துணைத் தலைவர் செய்யது பட்டாணி தலைமையில் அறிமுக கூட்டம் நடந்தது. - 

தென்காசி தொகுதியில் எனக்கும், பாஜவுக்கும் தான் போட்டி டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு -

கடையநல்லூர், : ‘தென்காசி தொகுதியில் புதிய தமிழகத்திற்கும், பாஜவுக்கும் தான் போட்டி உள் ளது. அதிமுக களத்திலேயே இல்லை’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். 
 நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் தென்காசி பாராளுமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட் பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்காசி தொகுதி தேர்தல் பொறுப் பாளர் மைதீன்கான் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ரசாக், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது முகமது, செயலாளர் அப்துல் லத்தீப், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சேட்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: 
தென்காசி தொகுதியை பொறுத்தவரை புதிய தமிழகத்திற்கும், பாஜவிற்கும் தான் போட்டி உள்ளது. அதிமுக களத்திலேயே இல்லை. தென்காசி தொகுதி யில் தங்கச்சுரங்கம் போல் இயற்கை வளம் இருந்த போதும் தகுதியான, திறமை வாய்ந்த எம்.பி.க்கள் அமையாததால் இத்தொகுதி இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 
இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்த போதிலும் அவர்களின் நலனுக்காகவும், மறுவாழ்விற்காகவும் எவ்வித ஆக்கபூர்வ மான திட்டமும் செயல்படுத்தப்படாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் உரிமை யை பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் இஸ் லாமிய மக்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார். 
தென்காசியில் நடந்த கூட்டத்திற்கு முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷா தலைமை வகித்தார். மமக மாவட்ட தலைவர் மைதீன்சேட்கான் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில், தமுமுக மாவட்ட செய லாளர் நயினார்முகம்மது, தங்கவேலு எம்.பி., உட்பட பலர் கலந்து கொண்டனர். 
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  மாவட்ட செயலாளர் துரைஅரசு தலைமையில் கூட்டம் நடந்தது. புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்மாவட்ட துணைத் தலைவர் செய்யது பட்டாணி தலைமையில் அறிமுக கூட்டம் நடந்தது. - 

தென்காசி தொகுதியில் எனக்கும், பாஜவுக்கும் தான் போட்டி டாக்டர் கிருஷ்ணசாமி பேச்சு -

கடையநல்லூர், : ‘தென்காசி தொகுதியில் புதிய தமிழகத்திற்கும், பாஜவுக்கும் தான் போட்டி உள் ளது. அதிமுக களத்திலேயே இல்லை’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். 
 நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் தென்காசி பாராளுமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட் பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தென்காசி தொகுதி தேர்தல் பொறுப் பாளர் மைதீன்கான் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ரசாக், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது முகமது, செயலாளர் அப்துல் லத்தீப், மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சேட்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: 
தென்காசி தொகுதியை பொறுத்தவரை புதிய தமிழகத்திற்கும், பாஜவிற்கும் தான் போட்டி உள்ளது. அதிமுக களத்திலேயே இல்லை. தென்காசி தொகுதி யில் தங்கச்சுரங்கம் போல் இயற்கை வளம் இருந்த போதும் தகுதியான, திறமை வாய்ந்த எம்.பி.க்கள் அமையாததால் இத்தொகுதி இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. 
இப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணிபுரிந்த போதிலும் அவர்களின் நலனுக்காகவும், மறுவாழ்விற்காகவும் எவ்வித ஆக்கபூர்வ மான திட்டமும் செயல்படுத்தப்படாததால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வெளிநாடுகளில் பணிபுரிபவர்களின் உரிமை யை பாதுகாக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் இஸ் லாமிய மக்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார். 
தென்காசியில் நடந்த கூட்டத்திற்கு முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷா தலைமை வகித்தார். மமக மாவட்ட தலைவர் மைதீன்சேட்கான் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில், தமுமுக மாவட்ட செய லாளர் நயினார்முகம்மது, தங்கவேலு எம்.பி., உட்பட பலர் கலந்து கொண்டனர். 
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  மாவட்ட செயலாளர் துரைஅரசு தலைமையில் கூட்டம் நடந்தது. புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்மாவட்ட துணைத் தலைவர் செய்யது பட்டாணி தலைமையில் அறிமுக கூட்டம் நடந்தது. - 

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி..பிரசாரம்

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி..பிரசாரம்

குற்றாலத்தை சர்வ தேச சுற்றுலாதலமாக்குவேன்- தென்காசி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ..



விருதுநகர்: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்து எம்.பியாக குற்றாலத்தை சர்வ தேச சுற்றுலாதலமாக்குவேன்- தென்காசி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் குற்றாலத்தை சர்வதேச சுற்றுலா தலமாக்குவேன் என்று திமுக கூட்டணியில் போட்டியிடும் தென்காசி தொகுதி வேட்பாளர் புதியதமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தென்காசி லோக்சபா தொகுதியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமணமண்டபத்தில் திமுக கூட்டணிகட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. திமுக மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றக் கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது; கடந்த 40ஆண்டுகாலமாக தென்காசி தொகுதியில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை நான் வெற்றி பெற்றால் மேற்க்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாய் கேரளமாநிலக் கடலில் கலக்கும் 30ஆயிரம் டி.எம்.சி.தண்ணீரை கிழக்கு நோக்கித்திருப்பிவேன். இதன் மூலம் வறட்சியாய் இருக்கும் தென்மாவட்டங்களை வளமான பகுதியாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன். மேலும் நம் பகுதியில் எலுமிச்சை,திராட்சை,மலர்கள், மதிப்புக் கூட்டக் கூடிய பொருட்களாக மாற்றமுடியாத நிலையுள்ளது. இதனை மாற்றிட முயற்சிகொள்வேன். குற்றாலத்தை உலக அளவில் சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன்,விருதுநகர்-கொல்லம் அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க செய்து மின் பாதையாக மாற்றி தென்மாவட்டங்கள் பொருளாதாரத்தில் உயர முயற்சி மேற்கொள்வேன் என்றார்.