எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 21 செப்டம்பர், 2015

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

..தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் டாக்டர் .அய்யா அவர்களின் எழுச்சி உ ரை...20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இவ்விழா இன்று உலக அளவில் பேசப்படுகிறது. இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அல்லது நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என 20 வருடங்களாக கோரி வருகிறோம். சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.
2010 இல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியபோது, பிரிந்து கிடக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம்.
இந்த 3 கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்ததால் கூட்டணி வைத்தோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு :.......தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். அதனுடைய அடிப்படையில் தான் மக்களையும் பார்த்தார்கள். குறிஞ்சி என்று அழைக்கப்படக்கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மலைவாழ் மக்கள். முல்லை என்று அழைக்கப்படக்கூடிய மலையினுடைய அடிவாரத்திலே வாழ்ந்த மக்கள் இடையர்கள். ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் மருதநில மக்கள், அவர்கள் தான் தேவேந்திரகுல வேளாளர்கள், அவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.
இந்த அரசு இந்த தமிழ் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்று சொன்னால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சமமான அங்கீகாரம் கொடுக்காமல் நீங்கள் தமிழகம் என்று சொல்லிக்கொள்வதிலோ தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அர்த்தமே கிடையாது என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.
எனவே இந்த அரசு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது, வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த தினம் வரப்போகிறது, அதற்குள்ளாக நிச்சயமாக இந்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று நான் கருதுகிறேன். இல்லையென்றாலும் புதிய தமிழகம் அதைப் போராடிப் பெறும் என்பதையும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன். புதிய தமிழகத்திற்கு போராட்டம் என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் போராடாமல் கொடுக்க வேண்டியதுதான் அரசுக்கு அழகு என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் கிலோ கணக்கிலே எதோ தங்கமெல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால் நாங்கள் இப்போது கேட்பது ஒரு சிறிய அடையாளம் மட்டும் தான். நாங்கள் வேறொன்றும் புதிதாகக் கேட்கவில்லை, தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற ஒரு சிறிய அடையாளம், தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுதல் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவை மூன்று தான் நாம் கேட்கக் கூடிய மிக முக்கியமான கோரிக்கைகள்.
எனவே இந்த மூன்று கோரிக்கைகளையும் இன்றைய அரசு எஞ்சி இருக்கக்கூடிய காலகட்டங்களில் நிறைவேற்றித் தரும், இல்லையென்று சொன்னால் நிறைவேற்றித் தரக்கூடிய அரசை உருவாக்கித் தரக்கூடிய சக்தி புதிய தமிழகத்திற்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!...

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!... எந்த ஒரு வன்முறை சம்பவத்திற்கும் இடம் தராமல் அமைதியாக .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .. "தேவேந்திரர் பண்பாட்டு கழகம் " ஏற்பாடு செய்த சீருடை அணிந்த தொண்டர்கள் அலைகடல் என வந்த கூட்டத்தை கட்டுபடுத்தினர் ... காவல் துறை வெறும் பார்வையாளர்களாக இருந்தனர் ... கட்டுப்பாடு , சுய ஒழுக்கம் , அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்கள் , தலைவர்களின் சிறப்பான வழிகாட்டல்கள் ,தேவேந்திரர் சமுகத்தின் நடவடிக்கைகளை அனைத்து தமிழ் சமூகமும் பாராட்டித்தான் ஆக வேண்டும் ... நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட மக்களையா 2011ல் சுட்டு கொன்றோம். என்று நினைக் கிறார்கள் .... அன்று காலை முதல் மாலை வரை காவல்துறைக்கு வேலையே இல்லை .. இது ஒன்று போதாதா அரசு விழாவாக அறிவிக்க ...பல்வேறு அமைப்பினர் வரவேற்பு பதாகைகள் வைத்து இருந்தனர் .. அதில் பெரும்பாலும் "தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை ".. மதுரை விமான
நிலையத்திற்கு "இம்மானுவேல் சேகரன் பெயர் ".. தியகியாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நிறைவை தருகின்றன .... இறுதியாக பல்வேறு தடைகளை தாண்டி வீர வணக்கம் செலுத்திய குரலற்றவர்களின் குரல் .. டாக்டர் . க .கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் நம் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் நிறைவுரை ஆற்றினார்

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் .

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் விவாதம் .டாக்டர் கிருஷ்ணசாமி:- பட்டியல் இனத்தில் 6 உட்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவினரை ஒரே பிரிவினராக தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க உத்தரவிட வேண்டும்.
அமைச்சர் ந.சுப்பிரமணியன்:- இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலியபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதுபற்றி இப்போது பேசமுடியாது.
டாக்டர் கிருஷ்ணசாமி:- தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்ததினம், மறைந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும். அவரைப் பற்றி இந்த அவையில் அண்ணா, “இம்மானுவேல் சேகரனை ஒரு வீரனாக கருத வேண்டும். அவரை நாட்டு சரித்திரத்தில் குறிப்பிட வேண்டும்” என்று பேசியிருக்கிறார். மதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு .

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு ..... "திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்" - பேரறிஞர் அண்ணா.
நேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
ஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.
மேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
மேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!!

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!! (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி:

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..செப். 17–ராமநாதபுரம்,.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. [மதியம் 2.00 மணி }.அவர் அந்த நேரத்தில் வராமல் சற்று தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து காட்டுபரமக்குடி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்த ரத்தினேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் விசாரணை நடத்தி டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?.....பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல், தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது பரமக்குடி போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினமான செப்.11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் மாலையில் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நினைவிடத்தின் முன்பாகவே கூட்டம் நடத்தி அதில் ஒலிபெருக்கியிலும் பேசினார். ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் காலதாமதமாக வந்தமைக்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் மீது பரமக்குடி நகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

காலச்சுவடுகள் .......இந்திய முதல் குடிமகன் பிரணாப் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறிய முதல் தமிழக அரசியல் கட்சி தலைவர் ... டாக்டர் . க . கிருஷ்ணசாமி .. M.D .M .L .A ., அவர்கள் ..

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஆகஸ்ட்31_தேவேந்திரகுல_மக்களின்_தன்னெழுச்சி _நாள்!


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் ..தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளத்தில் 1995 ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காவல் துறையினரால் தேவேந்திரகுல மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
கொடியங்குளம் கிராமத்திற்க்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நிவாரணம் கிடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.அதன் காரணமாக அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
சாதிய வன்முறைகளுக்கு சரியான பதிலடி எதிரியின் போர் உத்திகளையே நாமும் கையாள வேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழிகாட்டுதலால் தென் தமிழகத்தில் ‘தாக்கினால் திருப்பித் தாக்குவோம்’ புதிய உத்தி பின்பற்றப்பட்டது.
அச்சமயத்தில் தென் தமிழகத்தில் பெரும் பாலான கிராமங்களில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு திரட்டினார்.சுற்றுப் பயணத்தின் இருந்த எழுச்சி, பலரது கவனம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பக்கம் திரும்பியது.
இந்த கொடியங்குளம் கலவரத்திற்க்கு பிறகு தான் தென்தமிழகத்தில் உள்ள தேவேந்திரகுல மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராட துவங்கினார்கள்.

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் 1995, ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், கொடியங்குளம் எனும் குக்கிராமத்தில் தமிழக காவல்துறையினர் குற்றவாளியைப் பிடிக்கப் போகிறோம் என்று கூறி ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய கொடிய சம்பவம் நிகழ்ந்த கொடியங்குளம் கறுப்பு தினம் இன்று. கடந்த ஒராண்டு காலமாக வட தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதி ஆதிக்கத்தின் தொடக்கப் புள்ளியான 2012 நவம்பர் 7 அன்று நிகழ்ந்த தருமபுரி கலவரத்துக்கான விடை, விடுதலை கொடியங்குளத்தில் தான் இருக்கிறது. உண்மையில் இந்தக் ‘கொடியங்குளம் கலவரத்தில் தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். அதுவரையில் சமூக நல்லிணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி ஒடுக்குமுறைகளை கடைப்பிடித்து வந்த ஆதிக்க சாதியினர் 1995-க்குப் பிறகு சமூக உரிமையை, சம நீதியை ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.
1995, ஆகஸ்ட் 31--இல் குற்றவாளியை பிடிக்கப்போகிறோம் என்று கூறி தமிழக காவல்துறையினர் கொடியங்குளம் கிராமத்தில் புகுந்தனர். ஆனால் சென்றது காவல்துறையினர் அல்ல, காவல்துறையினர் போன்று வேடமிட்ட காட்டுமிராண்டிகள் என்பது பின்புதான் தெரிய வந்தது. கிராமத்திற்குள் புகுந்தவர்கள் குற்றவாளிகளை தேடுவதை விட்டுவிட்டு வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். வீடுகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பணமும், நகைகளும் களவாடப்பட்டன. பின்புதான் தெரிந்தது அந்த காவல்துறையினர் அனைவரும் கள்ளர்கள் என்று. சூறையாடப்பட்ட கிராமத்திற்கு நீதிகேட்டு அன்றைய தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தனது போராட்டத்தை ஆரம்பித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பதிக்கப்பட்ட கிராமத்தை பார்வையிட அன்றைய முதல்வர் நேரில் வந்த போது ஒட்டுமொத்த கிராமமே முதல்வர் சந்திப்பை புறக்கணித்தது. அவர் கொண்டு வந்த நிவாரண நிதியையும் அம்மக்கள் திருப்பினர். அவர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்பதை நிரூபித்தார்கள். மாறாக தென் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் வண்டி வண்டியாக அனுப்பி வைத்தனர். இதற்குமேல் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறி, வந்த நிவாரண பொருட்களை பக்கத்து கிராமங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த வரலாறு கொடியங்குளத்தில் தான் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையோடு வாழ்கிறோம் என்பதை நிரூபித்துக் காட்டினர். தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தது. ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்க கொட்டம் அடக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தலைநிமிர்வு உண்டானது. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக புதிய தமிழகம் எனும் அரசியல் கட்சி உருவானது. 1995 முதல் 2000 முதல் தேவேந்திரகுல மக்கள் முன்னெடுத்த சமூக சமநீதிக்கான போராட்டத்தில் பல உயிர்கள் களபலியாயின. அவர்களின் உயிர் தியாகத்தால் தான் இன்று தென்தமிழகம் யாருக்கும் தலைவணங்காமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. கொடியங்குளம் கறுப்பு தினமான இன்று சமூக சம உரிமைப் போராட்டத்தில் களப்பலியான தியாகி பிலிப் அந்தோணி, தியாகி ஆலந்தா சண்முகம் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் நமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் .... புதிய தமிழகம் கட்சித் தலைவர். டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .,M .L .A .,அவர்கள் ..


கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வு மையம் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 5.5 கோடி வாக்காளர் கள் இருக்கும்போது, வெறும் 3 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்துவது யதார்த்தத்துக்கு புறம்பானதாக உள்ளது. எனவே, இது ஒட்டுமொத்த வாக்காளர்களின் கருத்துகளை பிரதிபலிக்காது.
தமிழகத்தில் இருக்கும் மதங்கள், சாதிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் செல்வாக்குகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் எண்ணங்களை பதிவு செய்வதைவிட, ஆய்வு மேற்கொள்பவர்களின் கருத்துகளை மக்கள் மனதில் திணிப்பதுபோல இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளன.

டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31..

டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31.. 
புராதன கால பொதுவுடைமை
சமுதாயத்திற்கு பிறகு குடும்பம், தனிச் சொத்து அரசுகள் உருவாகின. ஆண்டான் அடிமை, ஜமீன் முறைகள் எதேச்சதிகார அரசு, குடியரசு, முடியரசு, பாட்டாளி வர்க்க
சோசலிச அரசு, பாசிஸ்ட்ட அரசு என பல வகை அரசுகள் தோன்றின. இவற்றில் குடியரசே பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு அமைப்பாக
இருக்கிறது. மக்களுக்காக மக்களே மக்களால் உருவாக்கப்பட்ட அரசு குடியரசு ஆகும். பாட்டாளி வர்க்க சோசியலிஸ அரசு மற்றும் குடியரசு தவிர அரசு
இயந்திரம் பெரும்பாலான மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறை கருவியாக இருந்து வந்திருகிறது.
விதி விலக்குகளாக முடியரசு குடியரசை போல செயல்படலாம். சர்வாதிகாரி கூட ஜனநாயக
வாதியாக செயல்படலாம் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆனால் ஒரு ஜனநாயக
குடியரசு சர்வாதிகார பாசிஸ அரசைப் போல செயல்படுவதை அந்நாட்டு மக்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் எத்தனை பிளவுகளாக இருந்தாலும் அரசு
இயந்திரம் எச்சார்பற்றதாக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே நியதி ஆகும். அண்மையில் ஈராக், லிபியா, சிரியா, துனிசியா, எகிப்து, ஏமன் போன்ற
நாடுகளில் அதிபர்கள் அந்நாட்டில் உள்ள ஒரு குழுவுக்கு ஆதரவாக இன்னொரு குழுவை அடக்கி ஒடுக்கிட அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர்களின் ஆட்சி
அதிகாரம் பறிக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மக்களே கண்முன்னே கண்டித்த சம்பவங்களையும் உலகறியும்.
1991 முதல் 1996 வரையிலும் தமிழகத்தினுடைய
இன்று முதல்வராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்கள் தான் அன்றும் முதல்வர். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் , முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களால்
தாக்கப்பட்டது தொடர்ந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம் பட்டி மற்றும் வீரசிகாமணியைச் சார்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜூலை 27-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் தென் தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர்களை கொச்சைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் எண்ணற்ற போஸ்ட்டர்கள்
ஒட்டப்பட்டன. தேவேந்திர மக்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஓட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு ஆதரவோடு ஒவ்வொரு மாவட்டமாக பந்த்கள் நடைபெற்றது. தென் தமிழகம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் முக்குலத்தோர் தேவேந்திர குல வேளாளர் மோதல்கள் உருவாகின. நெல்லையில் ஜங்சனை சார்ந்த ராமர், லட்சுமணர் என்ற தேவேந்திரர்கள் படு கொலைக்கு ஆளானார்கள். துத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகளில் தனியாக பயணம் செய்த ஆண்,பெண் இருபாலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் அருகே உள்ள ஆலந்தா என்ற கிராமத்தைச் சார்ந்த பலவேசம் மற்றும் துணைவியார் இருவரும் பட்டப்பகலிலே கொலை செய்யப்பட்டார்கள். தேவேந்திர மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்தது. அவருடைய நிலம் மற்றும் புலங்களில் முக்குலத்தோரின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அழியாட்டம் செய்யப்பட்டன. எஞ்சியவைகளை விட்டு வைக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து கொள்ளையடித்து சென்றனர். மணியாட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் வாழ்வா?சாவா? என்ற நிலைக்கு
தள்ளப்பட்டார்கள்.
கொடியங்குளத்தை சுற்றி உள்ள 80-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல ஊர் நாட்டாமைகளின் கூட்டம் நடைபெற்றது. அடுத்து இரண்டாவது நாளில் பெண்கள் போல மாறு வேடம் அணிந்த ஒரு கூலிப்படை மீண்டும் ஆலந்தாவிற்குள் நுழைந்தது. எச்சரிக்கையோடு இருந்த தேவேந்திரர்கள் கொலைகார கூலி கும்பலை 5 கிலோமீட்டருக்கு மேலாக விரட்டினார்கள். மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். மரணம் அடைந்த மூன்று பேரினுடைய வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அன்று மாவட்ட ஆட்சியர் பன்னீர் செல்வம் சென்றார். இந்த சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் -30.
BLOOD IS THICKER THAN WATER- இரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்று சொல்வார்களே அது போலதான்
பன்னீர் செல்வம் இரத்தம் துடித்தது. ஏறக்குறைய ஒருமாத காலத்திற்கு மேலாக தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த தாக்குதலுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் அந்த மூன்று மறவர்களின் 
மரணம் மட்டும் அவர்களுக்கு நெஞ்சை உறுத்தி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நான்கு ஐந்து மாவட்ட ஒட்டுமொத்த காவல்துறை கொடியங்குளத்தில் குவிக்கப்பட்டது. சென்னையை மையமாக வைத்து இயங்கிய அழகு செக்யுரிட்டி எனும் தனியார் நிர்வன அடியாட்களும் வரவழைக்கப்பட்டார்கள். காவல் துறையிடத்திலே லத்தியும், துப்பாக்கியும் தான் இருக்கும் என்பதையே பெரும்பாலான மக்கள் அறிவர். ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி நவீன ஆயுதங்கள் உட்பட்ட கோடாரி, வேல்கம்பு, அரிவாள்கடப்பாறை போன்ற கற்கால ஆயுதங்களுடன் கொடியங்குளம் சுற்றி வளைக்கப்பட்டது. வீட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் அடியாட்களாக வந்த செக்யுரிட்டி ஆட்களாலும் அடியாட்களைப் போல மாறிய காவலர்களாலும் விரட்டியடிக்கப்பட்டனர். வீடு வீடாக சென்று அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் நிர்மூலமாக்கினர். 10-15 ஆண்டுகள்
அரேபிய நாடுகளுக்கு சென்று அல்லும் பகலும் பாடுபட்டு வாங்கிய தங்களுடைய ஆசைப் பொருட்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினார். டிவி, ரேடியோக்கள், பேன், மிக்சி, கிரைண்டர் டேப்ரெக்கார்டுகள், இருசக்ர வாகனங்கள், பண்டபாத்திரங்கள் அனைத்தும் அந்த
இடத்தில்தூள்தூளாகின. பீரோக்களும், கட்டில்களும் கோடாரியால் துண்டாக்கப்பட்டன. வீடுகளின்
கதவுகள், ஜன்னல்கள் அத்தனையும் நொறுக்கிப் போடப்பட்டன. அவர்கள் மொசைக் தளங்களைக் கூட விட்டு வைக்க வில்லை. அரசு தபால் மற்றும் ரேசன் கடைகளையும் சூறையாடினர். ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, நாய்களையும் சுட்டுப் பொசுக்கினர் . வீட்டில் வைத்திருந்த சொற்ப தொகைகளையும், துணி மணிகளையும் விட்டு வைக்க வில்லை. உச்சக் கட்டமாக பொதுக் கிணற்றில் பெட்ரோலையும் ஊற்றினார். எதிர்த்தவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டன. இளம்பெண்களின் என்று கூட பார்கவில்லை. மக்களை கட்டிக் காக்க வேண்டிய அரசு மக்களின் சொத்துக்களை சூறையாடியது. சட்டப்படி நடக்க வேண்டிய உயர் அதிகாரிகளே சட்டத்தை காலில் போட்டு உதைத்தார்கள்.
தேவேந்திர குல மக்கள் மீதான தங்களுடைய நீண்ட நெடுநாளைய வன்மத்தை காவல் துறையின் மூலம் தீர்த்து கொண்டார்கள். கொடியங்குலத்தின் மீது நடத்திய தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மகிழ்விப்பதற்காகவும் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் இன்னொரு பிரிவினரின் மீது ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதமே அதுவாகும். கொடியங்குளம் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதன் முதலாக அந்த கிராமத்திற்குள் அடியெடுத்து வைத்தது நாம் தான்.
நீதி மன்றம் சென்று நீதியை நிலைநாட்டினோம் 
மக்கள் மன்றம் சென்று மக்களை தட்டி எழுப்பினோம். வெகுண்டெழுந்த தேவேந்திரர்கள் அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை அகற்றிக் காட்டினார்கள். 
அரச பயங்கர வாதம் அம்பலப்பட்டது.

புதன், 26 ஆகஸ்ட், 2015

ராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்!... டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A .,



ராமதாசின் வாலை ஒட்ட நறுக்குவோம்!... டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A .,
தென் தமிழகம் அடிக்கடி சாதிய மோதல்களுக்கு இலக்காகி அமைதி இழந்திருந்ததை நாடறியும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மதுரையை மையமாகக் கொண்ட தென் மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தேறின. அதில் தேவேந்திரகுல வேளாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் சிலைமான் என்ற இடத்தில் இரு சமுதாயங்களிடையே மோதல்; திருமங்கலம் குராயூரில் அடிக்கடி மோதல் மற்றும் கொலைகள்; உசிலம்பட்டி பகுதியில் மோதல்; நெல்லை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் பட்டியலின மக்கள் படுகொலை என தொடர்கதையாயின.
1957-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அதனால் தென் தமிழகமே கலவர பூமியானது. மேலும் 1997-ஆம் ஆண்டு விருதுநகரை மையமாக வைத்து வீரன் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் உருவாக்கப்பட்டபோது முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோர்க்கும் எண்ணற்ற மோதல்கள் ஏற்பட்டு உயிர்சேதமும் பெருத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. அப்பொழுதே தேவேந்திரகுல மக்கள் மதுரை விமான நிலையத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலமாக எழுப்பினர்.
சுந்தரலிங்கம் பெயரை நீக்வேண்டும் என்பதற்காகவே அம்பேத்கர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் இயங்கிவந்த போக்குவரத்துக்கழகங்களும் மாவட்டப் பெயர்களும் நீக்கப்பட்டன. தமிழக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேருந்துகள், கல்விநிலையங்கள், மாவட்டங்கள், அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு எதிர்காலத்தில் எந்தவொரு தலைவரின் பெயரையும் சூட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின்படியே கடந்த 18 வருடங்களாக எந்தவொரு தலைவரின் பெயரும் எதற்கும் சூட்டப்படாமல் இருந்தது. இதனால் தென் தமிழகத்தில் ஓரளவுக்கு அமைதி நிலவிவருகிறது .
அரசியல் காரணங்களுக்காக மீண்டும் தென் தமிழகத்தில் சிலர் சாதித் ‘தீ ’ மூட்ட முயற்சி செய்கின்றனர். மதுரை விமான நிலையத்துக்குக்கும் ஓடுபாதைக்கும் 1932, 1935, 1942, 1950, 1999 ஆகிய ஆண்டுகளில் தங்களது நிலங்களைக் கொடுத்தவர்கள் அதற்கு அருகேயுள்ள சின்ன உடைப்பு கிராமத்து தேவேந்திரகுல வேளாளர்கள் ஆவர். எனவே மதுரை விமான நிலையத்துக்கு பெயர் வைக்க வேண்டுமாயின் அதற்கு நிலங்களைக் கொடுத்த தேவேந்திரகுல மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரையே சூட்டவேண்டும்.
தென் தமிழகத்தில் நிலவும் சமூக சூழ்நிலைகளை நன்கு அறிந்திருந்தும் ஏதும் அறியாதவர் போல மீண்டும் முக்குலத்தோருக்கும் தேவேந்திர குல வேளாளருக்கும் மோதலை உருவாக்கி சிந்தும் இரத்ததின் மூலம் அரசியல் லாபம் தேட துடிக்கும் வகையிலேயே ராமதாஸ் சம்பந்தமே இல்லாமல் மதுரை விமான நிலைய பிரச்சினையை கிளப்புகிறார் .
வடமாவட்டங்களில் கெளரவக் கொலைகளை நிகழ்த்தி, ஆதி திராவிடர்களுக்கு (பறையர்கள்) எதிராக அணிதிரட்டியத்தை போல தென் தமிழகத்திலும் தேவேந்திர குல வேளாளருக்கு (பள்ளர்கள்) எதிராக முக்குலத்தோரை அணிதிரட்ட எண்ணுகிறார். அவருடைய முயற்சி எள்ளளவும் வெற்றி பெறாது. தென் தமிழக தேவேந்திரகுல மக்கள் ராமதாஸின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்தே அவரை ஏற்கனவே ஒதுக்கித் தள்ளினர். எனவே அவரது இந்த முயற்சியும் பலிக்காது. பா.ம.க.-வின் நரித்தனத்தை தென் தமிழகத்தில் காட்ட முற்பட்டால் அதன் வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதை புதிய தமிழகம் எச்சரிக்கிறது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம்!! இமயம் தொலைகாட்சியில் தேவேந்திரர் இனத்தின் இமயம் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி:


மதுரையில் அமிட்ஷா அவர்கள் கலந்துகொண்ட "தேவேந்திரகுல வேளாளர்" அரசு ஆணைக்கான மாநாட்டை வரவேற்கிறேன். கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுத்த அமிட்ஷா அவர்களை பாராட்டுகிறேன். 
மற்றபடி அவர்களின் நோக்கம் எப்படி இருந்தால் என்ன? தேவேந்திர குல மக்கள் புதிய தமிழகம் கட்சியால் அரசியல்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்றிவிட முடியாது.
தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும். தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன. நாங்கள் மருத நில மக்கள். நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகப்பெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது. எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர். எம் மக்களின் சமுக, பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உருவாக்கப்பட்டன.
நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள்? கள்ளன் மறவன் எப்படி தேவர் ஆனார்கள் தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள்? ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள், அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு அன்று வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர். எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர். தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம், யாரையும் அடக்கி, ஆண்டதாக வரலாறு இல்லை .

சங்கராபுரம் கலவரம் ....புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு................டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A .,

''சங்கராபுரம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, புதிய
தமிழகம் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்,'' என, கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D.M .L .A ., அவர்கள் .கூறினார்.கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவின்போது, ஆதி
திராவிடர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில், துரை ஈஸ்வரன் கொலையில் தொடர்புடையவர்களை ஒரு வாரத்துக்குள் கைது செய்யாவிடில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
'பாகுபலி' படத்தில் பகடை எனும் சமுதாயத்தினருக்கு எதிரான சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதை நீக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்னும், 48 மணி நேரத்துக்குள் வசனங்களை நீக்காவிடில், போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்

மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்......

..பள்ளர்,குடும்பர்,காலாடி,பன்னாடி,மூப்பர்,தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறபிக்க கோரியும்,நீதிபதி ஜனார்த்தனன் அவர்களின் அறிக்கையை வெளியிடக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் . மாண்புமிகு ..டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D..M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்... அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்:22-08-2015.
நேரம்:காலை 11 மணி.
இடம்:இராமநாதபுரம் மாவட்டம்.
ஒரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க அரசியல் அதிகாரம் வென்றெடுக்க தேவேந்திரகுல மக்களே... அழைக்கிறார் டாக்டர் அய்யா அவர்கள் .. அரசியல் பாகுபாடின்றி அலைக் கடல் என திரண்டு...
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!.

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

மது விலக்கு: சட்டமன்றத்தைக் கூட்ட டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தல்..........

மது விலக்கு: சட்டமன்றத்தைக் கூட்ட டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தல்................................விருதுநகர்: மது விலக்கு பிரச்னை தொடர்பாக உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் விருதுநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில், விருதுநகர் தேசபந்து மைதானத்தில், பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மதுப்போதை காரணமாக இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். எனவே மது, மக்கள் பிரச்னையாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பல்வேறு கட்சியினர், மாணவர்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு மவுனம் சாதித்து வருகிறது.
எனவே மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து கட்சியினரிடமும் அரசு விவாதிக்க வேண்டும் " என்றார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ மதுவுக்கு எதிராக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவதை வரவேற்கிறேன். அதே நேரம் சில இடங்களில் காவல்துறைக்கும், மாணவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் ரோட்டில் வந்து மதுவுக்கு எதிராக போராடுவதை கை விட்டு, ஒவ்வொரு ஊர்களிலும் வீதி வீதியாக சென்று, மதுவுக்கு எதிராக பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
வருகிற சட்டசபை தேர்தலில் மது பிரச்னை முக்கியமான பிரச்னையாக மக்கள் மன்றத்தில் முன் வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மதுவுக்கு எதிராக எந்த கட்சி குரல் கொடுத்தாலும், புதிய தமிழகம் அதை ஆதரிக்கும். பூரண மது விலக்கை அமல்படுத்துவது தொடர்பாக எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட்டால், அதை மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல முடியும்" என்றார்.

போராட்டத்தில் ஈடுபடாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி.M.D.M.L.A., ..

போராட்டத்தில் ஈடுபடாமல் பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி.M.D.M.L.A., .......................................................மாணவ, மாணவிகள் மதுவிலக்கு தொடர்பான போராட்டங்களில் ஈடுபடாமல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வரவேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை புதிய தமிழகம் கட்சியின் மகளிர் அணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி M.D.M.L.A., அவர்கள் தலைமை வகித்து பேசுகையில், இந்த ஆர்ப்பாட்டம் மகளிர் அணி சார்பில் நடைபெறகிறது. தமிழகத்தில் இந்த மதுக்கடையால் இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் ஆகியோரும் குடிப்பழகத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடிப்பழக்கத்தால் கல்லீரல் மண்ணீரல் ஆகியவை பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் தெருவிற்கே வந்து விடும் சூழ்நிலை இருக்கிறது.
இக்கட்சி தொடங்கியதிலிருந்தே மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பொதுமக்கள் இயக்கமாக மாறியதை தொடர்ந்து தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மது விலக்கை அமுல்படுத்தக்கோரி போராடும் அனைவருக்கும் எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். அதேபோல், மதுவிலக்கு பிரச்னை குறித்து மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபடாமல், பொதுமக்களுக்கு மது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமராஜ், மத்திய தலைவர் வெள்ளைச்சாமி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் அணியினர், கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்..

காலச்சுவடுகள் .....19:05:2014 ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பட்டியலில் இருந்து விடுபடுவது பற்றியும் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர் க.கிருஷ்ணடாமி M .D .M .L .A ., அவர்களின் சிறப்பு பேட்டி ...

காலச்சுவடுகள் .....19:05:2014 ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பட்டியலில் இருந்து விடுபடுவது பற்றியும் தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .டாக்டர்
க.கிருஷ்ணடாமி M .D .M .L .A ., அவர்களின் சிறப்பு பேட்டி ....தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்காக போராடி வருகின்றனர். அது போலவே காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாள்ப படுத்த வேண்டும் என்று இந்த சமூக மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.அது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை இந்த அரசாங்கம் ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களுக்கு மனசு வரவில்லை.
இதனால் வெறுப்புற்ற தேவேந்திர குல சமூக மக்கள், திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர் என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது என்பதை நினைத்து , வெறுப்புற்ற மக்கள் , அப்படியானால் இந்த பட்டியலில் இருந்தே விடுபட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
பட்டியலே வேண்டாம் என்றும் சொல்ல
ஆரம்பித்து விட்டனர். இதில் நியாயம் இருகின்றது..இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் தேவேந்திர குல மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப்பட்ட பட்டியலில் (SC ) இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக படித்தவர், படிக்காதவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கூறினார்

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. 20ல் ராமநாதபுரத்தில் போராட்டம்

ராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டாக்டா் கிருஷ்ணசாமி M.D.M.L.A.,.அவர்கள். ராமநாதபுரத்தில் நேற்று அளித்த பேட்டி: புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்டதில் இருந்தே பூரண மதுவிலக்கு கோரி பிரசாரம் செய்து வருகிறது. காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு பின் மதுவுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.
போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என அரசு நினைத்தால் அது தவறு. 1971ல் மதுவிலக்கை ரத்து செய்ததை எண்ணி வருத்தப்படுகிறேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். தேவேந்திரகுல மக்களை ஒருங்கிணைந்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. 20ல் ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

புறா' திட்டத்திற்கு கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி...M.D.M.L.A.,.அவர்கள்..

புறா' திட்டத்திற்கு கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி...M.D.M.L.A.,.அவர்கள்..ராமேஸ்வரம்: 'புறா' திட்டத்திற்கு அப்துல் கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள். வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் இல்லத்திற்கு வருகை தந்த அவர், அங்கு கலாமி சகோதரர முகம்மது முத்து மீரா மரைக்காயர் குடும்பத்தினரை சந்தித்து கலாமின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் நாட்டின் உச்ச பதவியை அடைந்தவர் டாக்டர் அப்துல்கலாம். அவரது நினைவிடத்தினை மாநில அரசு சிறப்புடன் அமைக்க வேண்டும். நகர் பகுதிகளை போன்றே கிராமங்களையும் உருவாக்கும் ‘புறா’ திட்டத்திற்கு மத்திய அரசு கலாமின் பெயரை சூட்ட வேண்டும்" என்றார்.

மது விலக்கு அமல் ரொம்ப சிரமம்! .....டாக்டா் கிருஷ்ணசாமி M.D.M.L.A.,.அவர்கள்.


....ராமநாதபுரம்: “மது விலக்கு என்பது கொள்கை அளவில் சாத்தியம். நடைமுறையில் சாத்தியமல்ல” என புதிய தமிழகம் நிறுவனர் .டாக்டா் கிருஷ்ணசாமி கூறினார்.அவர் கூறியதாவது:சசிபெருமாள் மரணத்திற்கு பின் மது விலக்கு போராட்டம் வலுத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மது 
விற்பனை வருமானத்தால் அரசின் திட்டங்கள் செயல்படுகின்றன என்பதில் மாற்று கருத்தில்லை; மது வருவாயால் எந்த அரசும் செயல்படவில்லை.முதல்கட்டமாக 'பார்'களை மூடலாம். மது விற்பனை நேரத்தை குறைக்கலாம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை மூடலாம்.
புதிய மது விலக்கு கொள்கையை அமல்படுத்த, சட்டசபை சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். மது விலக்கு என்பது கொள்கை அளவில் சாத்தியம்; நடைமுறையில் சாத்தியம் அல்ல.
மதுவுக்கு எதிராக மாணவர்கள் நேரடியாக களமிறங்கக்கூடாது; விழிப்புணர்வு பிரசாரம் செய்யலாம். கடந்த 1971ல் அரசின் பொருளாதார சிக்கலை தீர்க்க மது விலக்கை தி.மு.க., அரசு விலக்கிக் கொண்டதற்கு கருணாநிதி மன்னிப்பு கோருவது அவரது பெருந்தன்மை.
இலவசங்களை மக்கள் பயன்படுத்துவதில்லை. இலங்கை வசமுள்ள தமிழக விசைப்படகுகளை மீட்கவும், சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராமேஸ்வரம் பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சமாதியில் மலரஞ்சலி செலுத்திய கிருஷ்ணசாமி கூறியதாவது:ராமேஸ்வரம்:அவரது சமாதியில் மணி மண்டபம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். நகர்புறம் போல், கிராமங்களிலும் குடிநீர், விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் 'புரா' திட்டத்தை, கலாம் கொண்டு வந்தார்.
அதை நாடு முழுவதும் அமல்படுத்தி, 'அப்துல்கலாம்' என பெயர் வைக்க வேண்டும் என்றார்.
ராமேஸ்வரம் நகர் செயலாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

புதன், 5 ஆகஸ்ட், 2015

மதுரையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் பங்கேற்பு.

.....................................................................................பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பன்னாடி, வாதிரியார் ஆகிய உட்பிரிவு பட்டியல் இன சாதிகளை ஒருங்கிணைத்து ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிடக்கோரி மதுரையில் இன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாநகரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கர், மாட்ஷின், இரும்பொறை சேதுராமன், சிற்றரசு, முனியாண்டி, துரை தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் பேசியதாவது:–
இந்த போராட்டம் திடீரென நடத்தப்படும் போராட்டம் அல்ல. புதிய தமிழகம் கட்சி தொடங்கியதில் இருந்து இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. 1995–ம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டில் இந்த தீர்மானம்தான் முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தோம். 4½ ஆண்டுகள் ஆகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதற்காக 6 கட்டமாக போராட்டத்தை அறிவித்து முதல் கட்டமாக மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

தேவேந்திரகுல வேளாளர் உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வேண்டும்: டாக்டர் க.கிருஷ்ணசாமி M.D,M.L.A அவர்கள்.வலியுறுத்தல்..

..மதுரை,:''உட்ஜாதி பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கான அரசாணை வெளியிட வேண்டும்,'' என மதுரையில் புதிய 
தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி M.D,M.L.A அவர்கள் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:புதிய தமிழகம் சார்பில், பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பர் மற்றும் தேவந்திர குலத்தான் என அழைக்கப்படும் உட்ஜாதி பிரிவு மக்களை தேவேந்திர குல வேளாளர் என ஒருங்கிணைத்து அரசாணை வெளியிட வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அடிப்படையில் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, முற்படுத்தப்பட்டோர், பிற்பட்டோர் பட்டியலில் இன வகுப்பு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ள குறிப்பிட்ட ஜாதிகளை ஒருங்கிணைத்து அருந்ததியினர் என அறிவித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள பள்ளர் உள்ளிட்ட ௬ ஜாதிகளை இணைத்து தேவந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ௬ கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறோம். இதில் முதல்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக்க கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில்ஆக., 5ம் தேதி ஆர்ப்பாட்டம்...

பட்டியல் இன பிரிவில் இடம் பெற்றுள்ளவர்களை, தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரி, ஆகஸ்டு 5ம் தேதி, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த, புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.கோவையில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக்க கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தமிழக சட்டசபையில் பலமுறை பேசியும், வெளிநடப்பு செய்தும் பலனில்லை. கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஆறு கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக, மதுரையில் ஆகஸ்ட் 5ம் தேதி எனது தலைமையில், காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத மிகப்பெரிய இழப்பாகும். இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியவர். மக்களின் ஜனாதிபதி என இவரை அழைப்பதே பொருத்தம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

காலச்சுவடுகள்

காலச்சுவடுகள் .. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா .....டாக்டர் ..கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லநாடு கிராமத்தில் வி.டி.வி.டி. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழா இன்று நடந்தது. கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான மருத்துவர் கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். வல்லநாடு பகுதியில் வாழும் அனைத்து சமூக மக்களும் "இதுவரை மாட்டுக்கொட்டகையாக இருந்த இடத்தை மாணவர்கள் கல்விகற்க கூடிய மாளிகையாக (வகுப்பறை கட்டிடம்) மாற்றிய டாக்டர் அய்யாவிற்கு நன்றி" என்று ஒருசேர பாராட்டினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து சமூக பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், ஆசிரிய பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்றவுடன் முதல் முதலில் இந்த பள்ளி கட்டிடத்துக்காக ரூ.25 இலட்சம் நிதி ஒதுக்கிய டாக்டர் அய்யாவிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

காலச்சுவடுகள் ...செவ்வாய், மார்ச் 10,2015,

காலச்சுவடுகள் ...செவ்வாய், மார்ச் 10,2015,...ஓட்டப்பிடாரம் பகுதியில் ரூ.34½ லட்சம் செலவில் வளர்ச்சி பணிகளை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி பணிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமீனாட்சிபுரம் மற்றும் செவல்குளம் ஆகிய கிராமங்களில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.4¾ லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் அணையாளர் வசந்தா தலைமை தாங்கினார். யூனியன் கூடுதல் அணையாளர்உலகநாதன் முன்னிலை வகித்தனார்.
ரூ.34½ லட்சம்
புதிய தமிழகம் கட்சி நிறுவனரும், எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி, அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
முன்னதாக வெள்ளப்பட்டி, அனந்தமாடன் பச்சேரி, கொள்ளங்கிணறு ஆகிய கிராமங்களில் ரூ.13¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அயிரவன்பட்டியில் ரூ.3½ லட்சம் செலவில் சிமெண்ட் சாலை உள்பட மொத்தம் ரூ.34½ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழாவில் மாநில தொண்டர் அணி செயலாளர் லட்சுமண பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் கருப்பசாமி, கண்ணன், ராமராஜன், கதிரேசன், புதிய தமிழகம் பாராளுமன்ற பொறுப்பாளர் பட்டவராயன், மாநில செய்தி தொடர்பாளர் பாபு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன், குலசேகரநல்லூர் பஞ்சாயத்து செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்....

காலச்சுவடுகள் ..சனி 9, பிப்ரவரி 2013....

காலச்சுவடுகள் ..சனி 9, பிப்ரவரி 2013....
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் உமரிக்காடு, நல்லூர், வாழவல்லான், குரங்கனி, ஏரல், முப்பிலிபட்டி, ஓசனூத்து, புதியம்புத்தூர், கவர்னகிரி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு குடிநீர் என்ற போர்வையில் கடத்தப்பட்டு வந்தது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து, நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, பொது மக்கள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை எழுந்தது. ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகளவு சுரண்டப்பட்டு, அபாய கட்டத்தில் உள்ளதாக மத்திய குடிநீர் வழங்கல் துறை எச்சரிக்கை விடுத்தது. பெரும்பாலான மக்களுக்கு சிறுநீரக கோளாறுகளும், சுகதாரமற்ற தண்ணீரால் பல நோய்களும் ஏற்பட்டது. சாலைகள் பாதிக்கப்பட்டு, விபத்துகள் அதிகளவில் நடந்து வந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் நிலத்தடி நீர் கொள்ளையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி சட்டசபையில் மூன்று முறை தனது தொகுதியில் நிலத்தடி நீர் சுரண்டலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ஆர்ப்பாட்டம், சைக்கிள் பேரணி, மறியல் போராட்டங்களை நடத்தினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து நிலத்தடி நீர்க் கொள்ளையைக் கண்டித்து போராடினர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நிலத்தடி நீர் கொள்ளைக்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்க கோரி 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ”குடிநீர் லாரி உரிமையாளர் சங்கம்” என்று பெயர் வைத்து ஆழ்குழாய் கிணறு மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் நிலத்தடி நீர் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவானது.
இதையடுத்து ஓட்டப்பிடாரம் வட்டத்தில் தண்ணீர் லாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படுவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் உத்தரவிட்டுள்ளார். அவர் தண்ணீர் விற்பனை செய்கின்ற நபர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், "ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், குலசேகரநல்லூர், ஜம்புலிங்கபுரம், பசுவந்தனை, சிந்தலகட்டை, சில்லாநத்தம், வேப்பலோடை ஆகிய இடங்களில் பட்டா நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தனியார் தொழிற்சாலைகளுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
வறட்சி, விவசாயம் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகள் காரணமாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் போராட்டங்கள் நடத்தினர். இதனால் ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தருவைக்குளம், புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் காவல் நிலையங்களில் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து வணிக நோக்கத்தில் விற்பனை செய்பவர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்கள் கொடுத்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. இதனால் பொதுமக்களின் நலனுக்காக, சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ன் படி அனுமதியின்றி வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்வது நிரந்தரமாக தடை செய்யப்படுகின்றது. இந்த தடையை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நகல்கள் நிலத்தடி நீர் எடுக்கின்ற 37 பேருக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் ஓட்டப்பிடாரம் பகுதியில் தண்ணீர் லாரிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்..

காலச்சுவடுகள் ..(29/07/2013).....தூத்துக்குடி....விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை: டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

காலச்சுவடுகள் ..(29/07/2013).....தூத்துக்குடி....விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை: டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு................................................................புதிய தமிழகம் கட்சி நிறுவனரும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம், தன் தொகுதி விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகளுடன் வந்து மனு கொடுத்துள்ளார்.
பின்னர், நிருபர்களிடம் பேசும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், எட்டையபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் கம்பு, சோளம், மிளகாய் போன்ற மானாவாரி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால், இதில் ஐந்தில் ஒரு பகுதி கூட விளைச்சல் அளிக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் தலையாரிகள், வி.ஏ.ஓ.க்கள் பதிவேட்டில் விவசாயம் செய்த நிலங்களையும் தரிசு நிலங்களாக குறித்துள்ளனர்.
இதனால், சுமார் பத்து ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிக்கு வறட்சி நிதியாக 100 முதல் 500 ரூபாய் வரையே கிடைத்துள்ளது. ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பரிவல்லிக்கோட்டை ஓனமாகுளம், அயிரவன்பட்டி, கொல்லங்கிணறு ஆகிய 40 கிராம விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
சில கிராமங்களில் வறட்சி நிவாரணம் வழங்க வி.ஏ.ஓ.க்கள் லஞ்சம் கேட்கிறார்கள். வறட்சி நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும். அதேபோல், லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள பல கிராமங்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் தேவேந்திர குல மக்கள் வாழ்கின்றனர். அந்த பகுதிகளில் கிராம சாலைகள் நீண்ட காலமாக பழுதாகி உள்ளது. இதனால், பேருந்துகள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவதில்லை. எனவே பாரத் நிர்மாண் திட்டம் அல்லது மாவட்ட ஆட்சியரின் பொது நிதியில் இருந்து சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆட்சியரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்’’ என்றார்.

தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரி, ஆகஸ்டு 5ம் தேதி, மதுரையில் ஆர்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரி, ஆகஸ்டு 5ம் தேதி, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த, புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.
கோவையில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக்க கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
தமிழக சட்டசபையில் பலமுறை பேசியும், வெளிநடப்பு செய்தும் பலனில்லை. கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஆறு கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக, மதுரையில் ஆகஸ்ட் 5ம் தேதி எனது தலைமையில், காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத மிகப்பெரிய இழப்பாகும். இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியவர். மக்களின் ஜனாதிபதி என இவரை அழைப்பதே பொருத்தம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..


டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..

... எனது முகநூல் மற்றும் இணைய தள சேவையை பாராட்டி கடைய நல்லூர் புதிய தமிழகம் நண்பர் ஒரு கணினியை வழங்கினார் .... மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களின் பொற்கரங்களால் எனக்கு வழங்கினார்கள் ..ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி என்னை பாராட்டிய . மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..

டாக்டர் அய்யாவிற்கு நன்றி ..!!!!!!!..... எனது முகநூல் மற்றும் இணைய தள சேவையை பாராட்டி கடைய நல்லூர் புதிய தமிழகம் நண்பர் ஒரு கணினியை வழங்கினார் .... மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களின் பொற்கரங்களால் எனக்கு வழங்கினார்கள் ..ஆலோசனையும் அறிவுரையும் வழங்கி என்னை பாராட்டிய . மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

தாமிரபரணியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவு அஞ்சலி!...

....................நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியான மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தியதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி, இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போதைய த.மா.கா தலைவரான ஜி.கே மூப்பனார், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
ஆட்சியர் அலுவலகம் அருகில் பேரணி வந்தபோது காவல்துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினர். அப்போது பேரணியில் வந்தவர்கள் தடியடிக்கு பயந்து அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு ஓடினர். ஆனால், போலீஸார் அங்கும் விரட்டியதால் ஆற்றுக்குள் குதித்தனர். இதில், நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் காவலர்கள் தடியடியில் காயமடைந்தவர்கள் 17 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
இப்படி உயிரிழந்தவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை முதலாகவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சமுதாய அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய தேவேந்திரகுல கூட்டமைப்பு, தமிழ்ப்புலிகள், நாம் தமிழர், ஆதித்தமிழர் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கேற்றதால் ஒவ்வொரு அமைப்புகளுக்கும் தனித்தனியாக காவல்துறையினர் நேரம் ஒதுக்கினர். அதன்படி, தலைவர்கள் தங்களது தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நெல்லையில் பல்வேறு சமுதாயப் பிரமுகர்களும் ஒரே சமயத்தில் குவிந்ததால் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் .................தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை வெளியிடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்....பள்ளர்,குடும்பர்,காலாடி,பன்னாடி, தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைத்திடும் அரசானை பிறப்பிக்க கோரியும்,நீதிபதி ஜனார்த்தனன் அவர்களின் அறிக்கையை வெளியிடக் கோரியும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்:06-08-2015.
நேரம்:காலை 11 மணி.
இடம்:இராமநாதபுரம் மாவட்டம். ...

கொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல் ஊறுவிளைவிக்கும் கருத்துகளை டாக்டர் ராமதாஸ் பரப்புகிறார்.....டாக்டர் . க . கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,.

.....................மதுரை, : கொள்கை, லட்சியம் எதுவும் இல்லாமல், சமுதாயத்துக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துகளை டாக்டர் ராமதாஸ் பரப்பி வருகிறார் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லபட்டி சாலையில் கடந்த 15ம் தேதி பட்டாசு ஆலைக்கழிவுத் தீயில் ஜீப் சிக்கி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயமடைந்தனர். இதை சாலை விபத்தாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டாசு ஆலை கழிவுகளால் ஏற்பட்ட விபத்தை சாலை விபத்தாக பதிவு செய்து மூடி மறைக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் நஷ்டஈடு பெற முடியாமல் பரிதவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. கொள்கை, லட்சியம் இல்லாத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ் சமுதாய மக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் கருத்துக்களை பரப்பி வருகிறார். திரைப்படங்கள் எந்த சமூகத்தையும் உயர்த்தியும், தாழ்த்தியும் எடுக்கக்கூடாது நடுநிலையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாநில இளைஞரணி செயலாளர் பாஸ்கர் மருதம் உடனிருந்தார்.

சனி, 25 ஜூலை, 2015

''பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .,M .L. A .,..

..................சிவகாசி பள்ளபட்டியில் சாலையில் கொட்டப்பட்ட பட்டாசு கழிவுகளால் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனம் சிக்கியதில் ஜூலை 15ல் நான்கு பெண்கள் பலியானார்கள். எட்டு பேர் உடல் கருகினர். கவனக்
குறைவாக, வேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பட்டாசு கழிவுகளில் தீப்பிடித்ததால் தான் விபத்து நேர்ந்தது. உண்மையை போலீசார் மறைத்து விட்டனர். எனவே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நஷ்டஈடு வழங்க ஜாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது.
தேவேந்திரர், பள்ளர், குடம்பர், காலாடி, மூப்பர், பன்னாடி ஆகிய இனங்களை தேவேந்திர குல வேளாளர் பட்டியலுடன் சேர்க்க வேண்டும், என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினேன்.அதை தற்போது வரை நிறைவேற்றவில்லை.
மது விலக்கை அமல்படுத்துவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பது ராமதாஸ் விருப்பம். வேற்று ஜாதியினரை திருமணம் செய்வோரை கவுரவக் கொலை செய்ய ராமதாஸ் துாண்டுகிறார். மது விலக்கு வரக்கூடாது என்பதில் ராமதாஸ் கவனமாக உள்ளார், என்றார்.

'பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .,M .L. A .,

.......மதுரை,: ''பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார்.மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:சிவகாசி பள்ளபட்டியில் சாலையில் கொட்டப்பட்ட பட்டாசு கழிவுகளால் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனம் சிக்கியதில் ஜூலை 15ல் நான்கு பெண்கள் பலியானார்கள். எட்டு பேர் உடல் கருகினர். கவனக்
குறைவாக, வேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பட்டாசு கழிவுகளில் தீப்பிடித்ததால் தான் விபத்து நேர்ந்தது. உண்மையை போலீசார் மறைத்து விட்டனர். எனவே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நஷ்டஈடு வழங்க ஜாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது.
தேவேந்திரர், பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், பன்னாடி ஆகிய இனங்களை தேவேந்திர குல வேளாளர் பட்டியலுடன் சேர்க்க வேண்டும், என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினேன். அதை தற்போது வரை நிறைவேற்றவில்லை.
மது விலக்கை அமல்படுத்துவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பது ராமதாஸ் விருப்பம். வேற்று ஜாதியினரை திருமணம் செய்வோரை கவுரவக் கொலை செய்ய ராமதாஸ் துாண்டுகிறார். மது விலக்கு வரக்கூடாது என்பதில் ராமதாஸ் கவனமாக உள்ளார், என்றார்.
இளைஞரணி பொதுச் செயலாளர் பாஸ்கர்மதுரம், நிர்வாகிகள் பவுன்ராஜ், சிற்றரசு, பாஸ்கர் உடனிருந்தனர்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் அஞ்சலி..!!!!!.

தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் அஞ்சலி..!!!!!.....புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் கிருஷ்ணசாமி...... M .D .M .L .A . அவர்கள் :., தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாரமிபரணி ஆற்றுக்கு சென்றனர். சந்திப்பு அண்ணா சிலை அருகே கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்றனர். அவர்கள் மத்தியில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவர்கள் :பேசினார். பின்னர் அங்கிருந்து ஆற்றுக்கு சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வி.கே.அய்யர், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார், நிர்வாகிகள் இன்பராஜ், மகேஷ், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் :நிருபர்களிடம் கூறியதாவது:–
15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும், கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும், 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றது. அப்போது போலீசாரின் தாக்குதலில் 17 பேர் உயிர் இழந்தனர்.
அவர்களுக்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17 பேருடைய நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு நினைவிடம் அமைக்க தாமிரபரணி ஆற்றங்கரையில் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்.
பாலியல் குற்றங்கள்
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. சிறுமிகள், பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியில் வனிதா என்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினால் எங்களை பேச அனுமதிப்பதில்லை. சட்டசபையில் எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்திற்கு அங்கு மதிப்பு கிடையாது. இந்த நிலை தொடர்ந்தால், வருகின்ற சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.