மதுரையில் அமிட்ஷா அவர்கள் கலந்துகொண்ட "தேவேந்திரகுல வேளாளர்" அரசு ஆணைக்கான மாநாட்டை வரவேற்கிறேன். கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தின் இரண்டு பிரதான திராவிட கட்சிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுத்த அமிட்ஷா அவர்களை பாராட்டுகிறேன்.
மற்றபடி அவர்களின் நோக்கம் எப்படி இருந்தால் என்ன? தேவேந்திர குல மக்கள் புதிய தமிழகம் கட்சியால் அரசியல்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்றிவிட முடியாது.
தேவேந்திர குல வேளாளர் என்ற எங்கள் அடையாளம் மீட்கப்பட வேண்டும். தமிழகத்தில் நிலத்தின் அடிப்படையில் தான் சமூகங்கள் இருந்தன. நாங்கள் மருத நில மக்கள். நாயக்கர் ஆட்சியின் வருகையால் தான் மிகப்பெரிய பின்னடைவை தேவேந்திரர் சமுகம் சந்தித்தது. எம் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன நிலமற்ற விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர். எம் மக்களின் சமுக, பண்பாட்டை சிதைக்கும் வகையில் பாளையப்பட்டுகள் உருவாக்கப்பட்டன.
நாயக்கர்களுக்கு துணை நின்ற சமுதாயங்கள் தேவேந்திர குல மக்கள் மீது எட்டு வகையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
அந்த வடுகர்கள் எப்படி நாயக்கர் ஆனார்கள்? கள்ளன் மறவன் எப்படி தேவர் ஆனார்கள் தீண்டாமையால் அதிக அளவு பதிப்புக்கு உள்ளான சாணார் சமுகம் எப்படி நாடார் ஆனார்கள்? ஆங்கிலேயர்கள் பட்டியல் இனத்தில் சாணார்களை சேர்த்தபோது லண்டன் வரை சென்று பட்டியல் மாற்றத்தை வலியுறுத்தினார்கள், அதில் வெற்றியும் பெற்றனர். ஆனால் தேவேந்திர குல சமுகத்திற்கு அன்று வலிமையான தலைமை இல்லாத காரணத்தினால் எங்களின் விருப்பத்திற்க்கு மாறாக பட்டியல் இனத்தில் சேர்த்தனர். எல்லாரும் தங்களை ஆண்ட பரம்பரையினர் என்று கூறுகின்றனர். தேவேந்திரர் சமுகம் மருத நிலத்தில் ஆட்சி செய்த சமுகம், யாரையும் அடக்கி, ஆண்டதாக வரலாறு இல்லை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக