புறா' திட்டத்திற்கு கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும்: கிருஷ்ணசாமி...M.D.M.L.A.,.அவர்கள்..ராமேஸ்வரம்: 'புறா' திட்டத்திற்கு அப்துல் கலாம் பெயரை மத்திய அரசு சூட்ட வேண்டும் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள். வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள். நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் இல்லத்திற்கு வருகை தந்த அவர், அங்கு கலாமி சகோதரர முகம்மது முத்து மீரா மரைக்காயர் குடும்பத்தினரை சந்தித்து கலாமின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்து தனது உழைப்பால் நாட்டின் உச்ச பதவியை அடைந்தவர் டாக்டர் அப்துல்கலாம். அவரது நினைவிடத்தினை மாநில அரசு சிறப்புடன் அமைக்க வேண்டும். நகர் பகுதிகளை போன்றே கிராமங்களையும் உருவாக்கும் ‘புறா’ திட்டத்திற்கு மத்திய அரசு கலாமின் பெயரை சூட்ட வேண்டும்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக