எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 25 ஜூலை, 2015

''பா.ம.க., ராமதாஸ் மது விலக்கிற்கு எதிரானவர்,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .,M .L. A .,..

..................சிவகாசி பள்ளபட்டியில் சாலையில் கொட்டப்பட்ட பட்டாசு கழிவுகளால் ஏற்பட்ட தீ விபத்தில் வாகனம் சிக்கியதில் ஜூலை 15ல் நான்கு பெண்கள் பலியானார்கள். எட்டு பேர் உடல் கருகினர். கவனக்
குறைவாக, வேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பட்டாசு கழிவுகளில் தீப்பிடித்ததால் தான் விபத்து நேர்ந்தது. உண்மையை போலீசார் மறைத்து விட்டனர். எனவே இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நஷ்டஈடு வழங்க ஜாதி அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது.
தேவேந்திரர், பள்ளர், குடம்பர், காலாடி, மூப்பர், பன்னாடி ஆகிய இனங்களை தேவேந்திர குல வேளாளர் பட்டியலுடன் சேர்க்க வேண்டும், என அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினேன்.அதை தற்போது வரை நிறைவேற்றவில்லை.
மது விலக்கை அமல்படுத்துவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்பது ராமதாஸ் விருப்பம். வேற்று ஜாதியினரை திருமணம் செய்வோரை கவுரவக் கொலை செய்ய ராமதாஸ் துாண்டுகிறார். மது விலக்கு வரக்கூடாது என்பதில் ராமதாஸ் கவனமாக உள்ளார், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக