பட்டியல் இன பிரிவில் இடம் பெற்றுள்ளவர்களை, தேவேந்திர குல வேளாளர் என அழைக்க அரசாணை பிறப்பிக்க கோரி, ஆகஸ்டு 5ம் தேதி, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த, புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.கோவையில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்களை, 'தேவேந்திர குல வேளாளர்' என அழைக்க, அரசாணை பிறப்பிக்க கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். தமிழக சட்டசபையில் பலமுறை பேசியும், வெளிநடப்பு செய்தும் பலனில்லை. கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, ஆறு கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக, மதுரையில் ஆகஸ்ட் 5ம் தேதி எனது தலைமையில், காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு, நாட்டுக்கு ஈடு செய்ய இயலாத மிகப்பெரிய இழப்பாகும். இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தியவர். மக்களின் ஜனாதிபதி என இவரை அழைப்பதே பொருத்தம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக