எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 24 ஜூலை, 2015

தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் அஞ்சலி..!!!!!.

தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி ... M .D .M .L .A . : அவர்கள் அஞ்சலி..!!!!!.....புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் கிருஷ்ணசாமி...... M .D .M .L .A . அவர்கள் :., தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாரமிபரணி ஆற்றுக்கு சென்றனர். சந்திப்பு அண்ணா சிலை அருகே கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்றனர். அவர்கள் மத்தியில் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., அவர்கள் :பேசினார். பின்னர் அங்கிருந்து ஆற்றுக்கு சென்று மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வி.கே.அய்யர், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா, புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார், நிர்வாகிகள் இன்பராஜ், மகேஷ், சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் :நிருபர்களிடம் கூறியதாவது:–
15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும், கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும், 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றது. அப்போது போலீசாரின் தாக்குதலில் 17 பேர் உயிர் இழந்தனர்.
அவர்களுக்கு தொடர்ந்து 15 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருகிறோம். தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த 17 பேருடைய நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக அரசு நினைவிடம் அமைக்க தாமிரபரணி ஆற்றங்கரையில் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்.
பாலியல் குற்றங்கள்
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. சிறுமிகள், பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியில் வனிதா என்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினால் எங்களை பேச அனுமதிப்பதில்லை. சட்டசபையில் எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்திற்கு அங்கு மதிப்பு கிடையாது. இந்த நிலை தொடர்ந்தால், வருகின்ற சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக