எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 5 ஆகஸ்ட், 2015

மதுரையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் பங்கேற்பு.

.....................................................................................பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பன், பன்னாடி, வாதிரியார் ஆகிய உட்பிரிவு பட்டியல் இன சாதிகளை ஒருங்கிணைத்து ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிடக்கோரி மதுரையில் இன்று புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாநகரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வக்கீல் பாஸ்கர், மாட்ஷின், இரும்பொறை சேதுராமன், சிற்றரசு, முனியாண்டி, துரை தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி M.D,M.L.A .,அவர்கள் பேசியதாவது:–
இந்த போராட்டம் திடீரென நடத்தப்படும் போராட்டம் அல்ல. புதிய தமிழகம் கட்சி தொடங்கியதில் இருந்து இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. 1995–ம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டில் இந்த தீர்மானம்தான் முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நாங்கள் ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தோம். 4½ ஆண்டுகள் ஆகியும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதற்காக 6 கட்டமாக போராட்டத்தை அறிவித்து முதல் கட்டமாக மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக