காலச்சுவடுகள் ...செவ்வாய், மார்ச் 10,2015,...ஓட்டப்பிடாரம் பகுதியில் ரூ.34½ லட்சம் செலவில் வளர்ச்சி பணிகளை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வளர்ச்சி பணிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமீனாட்சிபுரம் மற்றும் செவல்குளம் ஆகிய கிராமங்களில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.4¾ லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் அணையாளர் வசந்தா தலைமை தாங்கினார். யூனியன் கூடுதல் அணையாளர்உலகநாதன் முன்னிலை வகித்தனார்.
ரூ.34½ லட்சம்
புதிய தமிழகம் கட்சி நிறுவனரும், எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி, அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
முன்னதாக வெள்ளப்பட்டி, அனந்தமாடன் பச்சேரி, கொள்ளங்கிணறு ஆகிய கிராமங்களில் ரூ.13¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அயிரவன்பட்டியில் ரூ.3½ லட்சம் செலவில் சிமெண்ட் சாலை உள்பட மொத்தம் ரூ.34½ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
விழாவில் மாநில தொண்டர் அணி செயலாளர் லட்சுமண பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் கருப்பசாமி, கண்ணன், ராமராஜன், கதிரேசன், புதிய தமிழகம் பாராளுமன்ற பொறுப்பாளர் பட்டவராயன், மாநில செய்தி தொடர்பாளர் பாபு, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் மனோகரன், குலசேகரநல்லூர் பஞ்சாயத்து செயலாளர் முனியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக